நீண்ட உடல் கொண்ட நகருயிர் From Wikipedia, the free encyclopedia
பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை ; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் நஞ்சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் கவ்விக் கடிக்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.
பாம்பு | |
---|---|
உள்நாட்டு தைப்பன், உலகிலேயே அதிக நஞ்சுள்ள பாம்பினம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாம்பு லின்னேயஸ், 1758 |
இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. ஒருசில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன.
பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. இவ்வாறு தங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது.
பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு என்பது மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. பாம்பிற்கு 200 முதல் 400 (அல்லது அதற்கு மேற்பட்ட) முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் நன்கு விரியக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை உட்கொள்ள உதவுகின்றது.
பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளின் நுரையீரல்களில் வலதுபக்கம் மட்டுமே வேலை செய்கிறது.
அனைத்து வகையான பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை உணவாகக் கொல்கின்றன. "ராஜநாகம் என்ற பாம்பினம் மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொல்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் விரியன்கள் போன்ற சில பாம்புகள் குட்டி போடுகின்றன. மண்பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்புகள் தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டுப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் தானாகவே கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
சில பாம்பு இனங்கள்: மலைப்பாம்பு
நச்சற்ற பாம்புகள்:
சில வகைப் பாம்புகள் அதித நஞ்சினை உருவாக்கும் வல்லமையுடன் இருக்கின்றன. உலகின் மிக கொடிய பாம்புகளாக கருதப்படும் பாம்பினங்கள்:
இந்திய வனச்சட்டம் 1972ன் படி பாம்புகளை துன்புறுத்துவதோ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம். இருப்பினும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மையால் பெரும்பாலானோர் பாம்புகளை கண்டவுடன் கொன்று விடுகின்றனர்.
பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.[2]
கிறிஸ்தவ சமயத்தில் பொதுவாக பாம்பு ஒரு தீய உயிரினமாகக் கருதப்படுகின்றது. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததே இதற்கு காரணம். முன்பு பாம்புகள் கால்களுடன் மிகப்பெரிய விலங்கினமாக இருந்ததாகவும் கடவுள் அளித்த சாபத்தின் காரணமாக அது கால்களை இழந்து தரையில் ஊரும் ஊர்வனமாக மாறிப்போனதாகவும் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். புனித பேட்ரிக் என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பிய போது அங்கு இருந்த அனைத்து பாம்பினங்களையும் முற்றிலுமாக வெளியேற்றினார். இதுவே தற்போது அயர்லாந்தில் பாம்புகளே இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.