From Wikipedia, the free encyclopedia
பவுல் பியா (Paul Biya, இயற்்பெயர்: பவுல் பார்த்தலெமி பியா பை முவோன்டோ, பெப்ரவரி 13, 1933) நவம்பர் 6, 1982 முதல் தொடர்ந்து ஆறு முறை கமரூனின் குடியரசுத் தலைவராக இருந்து வரும் அரசியல்வாதி ஆவார்.[1][2] தெற்கு கமரூனின் முவோமெக்காவில் பிறந்த பியா 1960களில் குடியரசுத் தலைவர் அகமதௌ அஹிட்ஜோவின் தலைமையில் அரசு அதிகாரியாக விரைவான முன்னேற்றம் கண்டார். 1968 முதல் 1975 வரை குடியரசுத் தலைவரின் தலைமைச் செயலாளராகவும் பின்னர் கமரூனின் பிரதமராக 1975 முதல் 1982 வரையும் பணியாற்றினார். 1982ஆம் ஆண்டில் அஹிட்ஜோவின் திடீர் பதவி விலகலை அடுத்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பியா 1983-84 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டார்.
பவுல் பியா | |
---|---|
மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் பியா (2009) | |
கமரூன் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 நவம்பர் 1982 | |
பிரதமர் | பெல்லோ பௌபா மைகாரி லூக் அயாங் சடௌ ஹயாடௌ சைமன் அச்சிடி அச்சு பீட்டர் மஃபானி முசோஞ்ஜ் எப்ரைஹ்ம் இனோனி பிலெமோன் யாங் |
முன்னையவர் | அகமதௌ அஹிட்ஜோ |
கமரூன் பிரதமர் | |
பதவியில் 30 சூன் 1975 – 6 நவம்பர் 1982 | |
குடியரசுத் தலைவர் | அகமதௌ அஹிட்ஜோ |
முன்னையவர் | Simon Pierre Tchoungui (East Cameroon) Salomon Tandeng Muna (West Cameroon) |
பின்னவர் | பெல்லோ பௌபா மைகாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 பெப்ரவரி 1933 முவோமெக்கா, பிரெஞ்சு கமரூன் (தற்போதைய கமரூன்) |
அரசியல் கட்சி | People's Democratic Movement |
துணைவர்(கள்) | Jeanne-Irène Biya (Before 1992) Chantal Vigouroux (1994–present) |
முன்னாள் கல்லூரி | National School of Administration Paris Institute of Political Studies |
1980களில் ஒருக்கட்சி அரசியல்முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1990களில் எழுந்த எதிர்ப்புகளுக்கிணங்க பல கட்சி அரசியலை அறிமுகப்படுத்தினார். 1992ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் குறைந்த வாக்கெண்ணிக்கையில் தேர்வான பியா 1997, 2004 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். இந்த தேர்தல்களில் அனைத்திலுமே முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஏமாற்றி பதவியில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளும் மேற்கத்திய அரசுகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கமரூனின் முன்னாள் காலனித்துவ நாடான பிரான்சுடன் மிக அண்மித்த தொடர்பை பியா பராமரித்து வருகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.