From Wikipedia, the free encyclopedia
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன (Dissanayaka Mudiyanselage Jayaratne, சிங்களம்: දිසානායක මුදියන්සේලාගේ ජයරත්න, 4 சூன் 1931 – 19 நவம்பர் 2019[1]) அல்லது பொதுவாக தி. மு. ஜயரத்ன (D. M. "Di Mu" Jayaratne)[2] இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை இலங்கையின் 14-வது பிரதமராகப் பதவியில் இருந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், 1970 ஆம் ஆண்டில் முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[3]
தி. மு. ஜயரத்ன | |
---|---|
14-வது இலங்கை பிரதமர் | |
பதவியில் 21 ஏப்ரல் 2010 – 9 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் 8 சூலை 2010 – 7 சூலை 2015 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராசபக்ச |
பிரதமர் | இவரே |
தோட்டத்தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 6 ஆகத்து 2007 – 6 ஆகத்து 2010 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராசபக்ச |
பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
அஞ்சல், தொலைத்தொடர்பு, மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 8 ஆகத்து 2004 – 6 செப்டம்பர் 2007 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராசபக்ச சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க மகிந்த ராசபக்ச |
விவசாயத்துறை அமைச்சர் | |
பதவியில் 1 சூன் 2000 – 9 சூலை 2001 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 5 சனவரி 2004 – 7 சனவரி 2010 | |
பதவியில் 1 சூலை 1989 – 29 திசம்பர் 2001 | |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 7 சனவரி 2010 – 6 சூன் 2015 | |
பதவியில் 30 திசம்பர் 2001 – 2 சனவரி 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசாநாயக்க முதியன்சேலாகை ஜயரத்ன 4 சூன் 1931 கொழும்பு, இலங்கை |
இறப்பு | 19 நவம்பர் 2019 88) கண்டி, இலங்கை | (அகவை
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
பிள்ளைகள் | 3 |
ஜயரத்ன தனது ஆரம்பக் கல்வியை கம்பளை தொலுவ கிராமிய விகாரை பாலர் பாடசாலையிலும், பின்னர் கம்பளை சாகிராக் கல்லூரி, கண்டி காந்தி வித்தியாலயம் ஆகியவற்றிலும் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கண்டி காந்தி வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பின்னர் கம்பளையில் உப தபாலதிபராகவும் பணியாற்றினார்.
1951 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்த போது ஜயரத்ன அவருடன் இணைந்தார். அக்கட்சியின் அப்போதைய பதின்மூன்று முக்கியஸ்தர்களில் இவரும் ஒருவராவார். 1959 இல் கிராம சபை தேர்தலில் தோற்றி ‘கந்துகர பஹல கோறளே’ கிராம சபையில் கிராம சபை உறுப்பினரானார். 1961 இல் அதன் தலைவராகவும் ஆனார்.
1970 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்பளைத் தொகுதியின் அங்கத்தவரானார். 1969 முதல் 1994 வரையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
1994 இல் கம்பளைத் தொகுதியில் வெற்றி பெற்று சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் காணி, விவசாயம் மற்றும் வன வள அமைச்சராகைப் பணியாற்றினார். 2000 இல் விவசாய, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், 2004 ஆம் ஆண்டில் தபால், தொலைத் தொடர்பு, மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சராகவும் 2005 இல் தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், 2007 முதல் நாடாளுமன்றம் 2009 ஆம் ஆண்டில் கலைக்கப்படும் வரை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.