1801 முதல் 1809 வரை இருந்த அமெரிக்காவின் அதிபர் From Wikipedia, the free encyclopedia
தாமசு ஜெஃபர்சன் (Thomas Jefferson, ஏப்ரல் 13, 1743 - சூலை 4, 1826) ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1776ன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின் முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூசியானா என்னும் பகுதியை பிரான்சிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியானா என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிக்கோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.[1][2][3]
தாமசு ஜெஃபர்சன் Thomas Jefferson | |
---|---|
3-வது அமெரிக்க அரசுத்தலைவர் | |
பதவியில் மார் 4, 1801 – மார்ச் 4, 1809 | |
துணை அதிபர் | ஆரன் பர் (1801–1805) ஜார்ஜ் கிளின்டன் (1805–1809) |
முன்னையவர் | ஜான் ஆடம்ஸ் |
பின்னவர் | ஜேம்ஸ் மாடிசன் |
2-வது அமெரிக்கத் துணை அரசுத்தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1797 – மார்ச் 4, 1801 | |
குடியரசுத் தலைவர் | ஜான் ஆடம்ஸ் |
முன்னையவர் | ஜான் ஆடம்ஸ் |
பின்னவர் | ஆரன் பர் |
1-வது அமெரிக்க அரசுச் செயலர் | |
பதவியில் மார்ச் 22, 1790 – திசம்பர் 31, 1793 | |
குடியரசுத் தலைவர் | சியார்ச் வாசிங்டன் |
முன்னையவர் | ஜான் ஜாய் |
பின்னவர் | எட்மன்ட் ரான்டல்ஃப் |
2-வது பிரான்சுக்கான அமெரிக்க அரசு அமைச்சர் | |
பதவியில் மே 17, 1785 – செப்டம்பர் 26, 1789 | |
நியமிப்பு | கூட்டமைப்பு காங்கிரசு |
முன்னையவர் | பெஞ்சமின் பிராங்கிளின் |
பின்னவர் | வில்லியம் சோர்ட் |
2-வது வர்ஜீனியா ஆளுநர் | |
பதவியில் சூன் 1, 1779 – சூன் 3, 1781 | |
முன்னையவர் | பாட்ரிக் என்றி |
பின்னவர் | வில்லியம் பிளெமிங்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாட்வெல், வர்ஜீனியா, பிரித்தானிய அமெரிக்கா | ஏப்ரல் 13, 1743
இறப்பு | சூலை 4, 1826 83) சார்லொட்சுவில், வர்ஜீனியா, அமெரிக்கா | (அகவை
இளைப்பாறுமிடம் | மொண்டிசெல்லோ, வர்ஜீனியா, அமெரிக்கா |
அரசியல் கட்சி | சனநாயக-குடியரசுக் கட்சி |
துணைவர்(கள்) | மார்த்தா வைல்சு (தி. 1772; இற. 1782) |
பிள்ளைகள் | 11 |
கல்வி | வில்லியம் மேரி கல்லூரி (இளங்கலை) |
கையெழுத்து | |
Seamless Wikipedia browsing. On steroids.