From Wikipedia, the free encyclopedia
பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது தாண்டவம் என்று அழைக்கப்பெறுகிறது. தாண்டவம் என்பது உள்ளிருக்கும் தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் பல்வேறு உறுப்புகள் இணைந்து இயங்குவதாகுமென பி. ஆர். நரசிம்மன் சைவ மரபும் மெய்ப்பொருளியலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார்.
சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் நூற்றியெட்டு தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.
சிவபெருமானின் இளைய குமாரனான முருகப்பெருமான் குடை தாண்டவம், துடி தாண்டவம் ஆகிய தாண்டவங்களை ஆடியுள்ளார். [1]
வைணவக் கடவுளான திருமால் தனது கண்ணன் அவதாரத்தில் காளிங்க நர்த்தனம் என்ற தாண்டவம் ஆடியதாக வைணவ நூல்கள் கூறுகின்றன. இவை தவிற அல்லி, குட மல் தாண்டவங்களையும் திருமால் கண்ணன் ஆவதாரத்தில் ஆடியமையாக நூல்கள் தெரிவிக்கின்றன. [2]
பரதக்கலை (நூல்) - வி.சிவகாமி
Seamless Wikipedia browsing. On steroids.