ஜுவாலா குட்டா (Jwala Gutta, தெலுங்கு: జ్వాలా గుత్తా) ஒரு இந்திய இடக்கை இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இந்திய சீன கலப்பினராகிய குட்டா தேசிய இறகுப்பந்தாட்ட போட்டிகளில் 2010 வரை 13 முறை வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டக்காரரான இவருடன் சுருதி குரியனும் பின்னர் அசுவினி பொன்னப்பாவும் இணைந்து ஆடியுள்ளனர். அருச்சுனா விருது பெற்ற சேத்தன் ஆனந்தை திருமணம் புரிந்திருந்த குட்டா 2011இல் மணமுறிவு பெற்றார்.[2]குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஜுவாலா குட்டா జ్వాలా గుత్తా, நேர்முக விவரம் ...
ஜுவாலா குட்டா
జ్వాలా గుత్తా
Thumb
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு7 செப்டம்பர் 1983 (1983-09-07) (அகவை 41)
வார்தா, மகாராட்டிரம், இந்தியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)[1]
கரம்இடக்கரம்
பயிற்சியாளர்எஸ். எம். அரிஃப்
கலப்பு இரட்டையர்/ மகளிர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்6
தற்போதைய தரவரிசை21 (23 சூன் 2011)
மூடு
விரைவான உண்மைகள் வென்ற பதக்கங்கள், மகளிர் இறகுப்பந்தாட்டம் ...
வென்ற பதக்கங்கள்
நாடு  இந்தியா
மகளிர் இறகுப்பந்தாட்டம்
இறகுப்பந்தாட்ட உலக கூட்டமைப்பின் உலக வாகையாளர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2011இலண்டன்மகளிர் இரட்டையர்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி கலப்பு அணி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி மகளிர் இரட்டையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 கிலாஸ்கொவ் மகளிர் இரட்டையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 Melbourne கலப்பு அணி
உப்பர் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 தாமஸ் & உப்பர் கோப்பை குழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 தாமஸ் & உப்பர் கோப்பை குழு
இறகுப்பந்தாட்ட ஆசிய வாகையாளர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் இறகுப்பந்தாட்ட ஆசிய வாகையாளர் போட்டிகள் மகளிர் இரட்டையர்
தென் ஆசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 தென் ஆசிய விளையாட்டுகள் கலப்பு அணி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 தென் ஆசிய விளையாட்டுகள் மகளிர் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 தென் ஆசிய விளையாட்டுகள் மகளிர் குழு
மூடு

ஆரம்ப காலம்

ஜுவாலா குட்டா செப்டம்பர் 7, 1983 இல் மகாராட்டிரத்தில் பிறந்து ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாதில் வளர்ந்தார். இவரின் தந்தை தெலுங்கர், தாய் சீனர்.[3][4]

மேற்சான்றுகோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.