From Wikipedia, the free encyclopedia
சார்லசு ரோஷர் (Charles G. Rosher (நவம்பர் 17, 1885 – சனவரி 15, 1974) என்பவர் இரு தடவைகள் அகாதமி விருது பெற்ற ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவிற்கான அகடமி விருதைப் பெற்ற முதல் ஒளிப்பதிவாளர் இவர். ஊமைப்படக் காலம் முதல் 1950கள் வரை பணியாற்றியுள்ளார். இவர் இலண்டனில் பிறந்தவர், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். இவர் சன்ரைஸ்: ஏ சோங் ஃபோர் டூ ஹியூமன்ஸ் ஆகிய இரு திரைப்படங்களுங்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான அகாதமி விருது பெற்றுள்ளார். இவர் புகைப்படக்கலை தொடர்பான படிப்பை முடித்ததும் செய்திப்படம் எடுக்கும் பிரிவில் பணிபுரிந்தார். 1920களில் ஹாலிவுட்டில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார். 1927 ஆம் ஆண்டு வெளியான சன்ரைஸ் திரைப்படம் திரைப்படத்துறையின் ஒளிப்பதிவில் முக்கிய மைல்கல் ஆகும். இவர் பல இடங்களில் பணிபுரிந்திருந்தாலும் கடைசி 12 வருடங்கள் மெட்ரோ-கோல்ட்வின்மேயர் நிறுவனத்தில் பணியாற்றினார். லிஸ்பன் நகரில் ஒரு விபத்தில் இவர் மரணமடைந்தார்.[1]
சார்லசு ரோசர் Charles Rosher | |
---|---|
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | நவம்பர் 17, 1885
இறப்பு | சனவரி 15, 1974 88) லிஸ்பன், போர்த்துகல் | (அகவை
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1912–1955 |
பட்டம் | அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்க நிறுவன உறுப்பினர் |
விருதுகள் | சிறந்த ஒளிப்பதிவாளருக்கான அகாதமி விருது 1928 சன்ரைஸ்: ஏ சோங் ஃபோர் டூ ஹியூமன்ஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.