From Wikipedia, the free encyclopedia
அமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசியக் கலை அருங்காட்சியங்கள் இரு நகரங்களில் உள்ளன. ஒன்று கலிபோர்னியா மாவட்டத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலும் மற்றுமொன்று வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் அதிக அளவில் வாழ்வது அதற்கு முக்கிய காரணம் ஆகும்.
சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். [1]. இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ஆவ்ரி ப்ரெண்டேஜ் (Avery Brundage) என்பவர்.
ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1959 இல் சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார். ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பதாகும். அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த ஆசியக் கலை அருங்காட்சியகம் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். [2]
தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களைச் சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார். அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான் ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.
சான் ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான் ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்.
மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார். அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை. இவரது முயற்சியால் இன்று அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகிலேயே அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது [3]. இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.
சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் கலைப்பொருட்கள்,
என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
சிறிய மரகதக் கற்கள் முதற்கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.
இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும் வகையில் இடம் பெற்றுள்ளன.[4] அவை:
இந்தியாவினைக் குறிக்கும் சிறப்புக் கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்[5]:
போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.