From Wikipedia, the free encyclopedia
ஏர்புளூ (airblue) எனப் பொதுவாக அழைக்கப்படும் ஏர்புளூ லிமிடெட் நிறுவனம் , ஒரு தனியார் விமானச்சேவையாகும். இதன் தலைமையகம் பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தில் அமைந்துள்ளது. இஸ்லமாபாத், லாகூர், கராச்சி மற்றும் பெஷாவர் போன்ற உள்ளூர் விமான நிலையங்களுடன், சர்வதேச விமானநிலையங்களான துபாய், அபுதாபி, சார்ஜா மற்றும் மஸ்கட் போன்ற நாடுகளை இணைப்பதில் இந்த விமானச்சேவை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத் தலைமையிடமாக கராச்சியில் உள்ள ஜின்னாஹ் சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது.
| |||||||
நிறுவல் | 2003 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 18 June 2004 | ||||||
மையங்கள் | ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | Allama Iqbal International Airport Benazir Bhutto International Airport துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | Blue Miles | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 7 | ||||||
சேரிடங்கள் | 15 | ||||||
தலைமையிடம் | Islamabad Stock Exchange Towers இஸ்லாமாபாத், பாக்கித்தான் | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
வலைத்தளம் | www.airblue.com |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஏர்புளூ நிறுவனம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஜூன் 18, 2004 இல் தனது முதல் விமானச் சேவையினை கராச்சி – லாகூர் மற்றும் கராச்சி – இஸ்லமாபாத் போன்ற இடங்களுக்கு முறையே, தினமும் மூன்று விமானங்களை [1] அனுப்புவதன் மூலம் தொடங்கியது. இது அந்நாட்டின் பிரதமராக இருந்த சஃபருல்லாஹ் கான் ஜமலி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. தொடக்கம் முதலே மிகவும் பிரபலமாக பேசப்பட்ட விமானச்சேவை [2] ஏர்புளூ ஆகும். தனது முதல் ஆண்டு பயணிகளாக சுமார் 40,000 பயணிகளை வெற்றிகரமாக பயணிக்க வைத்தது.
துபாயில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:[3]
அபுதாபியில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:
சார்ஜாவில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:
ஏப்ரல் 2014 ன் படி, ஏர்புளூ செய்யக்கூடிய விமானச்சேவைக்கான இலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.[4]
மஸ்கட் – மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
ஏர்புளூ அதன் விமானச்சேவை இலக்குகளை ஐரோப்பா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கத்தில் உள்ளனர். அத்துடன், மும்பை – கராச்சி வழியில் விமானச் சேவையினை தொடங்கும் நோக்கிலும் உள்ளனர்.
ஏர்புளூ தற்போது அனைத்து A320 ரக விமானங்களையும் இயக்குகிறது. இதற்குமுன் ஏர்புளூ விமானச்சேவையில் பல்வேறு தரவகுப்பு இருக்கைகள் இருந்தன, ஆனால் அவற்றின் பொருளாதாரம் கட்டுக்குள் இல்லாதபடியால் அவை நீக்கப்பட்டுவிட்டன.
ஏர்புளூ நிறுவனம் பாகிஸ்தானில், முதன்முறையாக மின்னணு முறையில் டிக்கெட் பதிவு செய்யும் முறையினை அறிமுகப்படுத்தியது. வயரில்லாமல் டிக்கெட்டிகளை சரிபார்த்துக்கொள்ளும் முறை மற்றும் பல புதிய முறைகளையும் ஏர்புளூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்தச் சலுகையின்படி, எந்தவொரு பயணியும் இலவசமாக ஒரு கணக்கினை தொடங்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் அவர்கள் பயணித்திருந்தால் அவர்களுக்கு ‘நீல அட்டை’ வழங்கப்படும், அதற்கு மேலும் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ‘பிளாட்டின அட்டை’ வழங்கப்படும். இந்த அட்டைக்கு தகுந்தாற்போல் சலுகைகளும் வழங்கப்படும்.
ஏப்ரல் 2014 ன் படி மொத்தம் 6 விமானங்களைக் கொண்டுள்ளது, இவைத் தவிர மூன்று விமானங்கள் புதிதாக வாங்கப்படும் நிலையில் உள்ளன. இவற்றின் சராசரி வயது 8.9 ஆண்டுகள். இந்த ஒன்பது விமானங்களின் விவரம்: ATR 72-500 – 1, ஏர்பஸ் A320-200 – 5, ஏர்பஸ் A321-200 – 3.[5]
ஏர்புளூவின் விமானம் 202: ஜூலை 28, 2010 இல் ஏர்பஸ் A321 கராச்சியிலுள்ள, ஜின்னாஹ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்லமாபாத்தின், பெனாசீர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தபோது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மர்கல்லா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதற்கு விமான ஓட்டியின் தவறே காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.