From Wikipedia, the free encyclopedia
இன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் (F.C. Internazionale Milano)[5] (ஒலிப்பு [ˌinternattsjoˈnaːle]) , பொதுவாக இன்டர்நேசியோனல் அல்லது இன்டர் என்றழைக்கப்படுவது, இத்தாலியைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்துக் கழகம் ஆகும். இத்தாலியைத் தவிர்த்து பிற நாடுகளில் இன்டர் மிலான் என்று வழமையாக அறியப்படுகிறது. இது இத்தாலியின் முதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான சீரீ ஆவில் பங்கேற்று ஆடிவருகிறது; 1909-ஆம் ஆண்டிலிருந்து இத்தாலியின் முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடரிலேயே ஆடிவருகிறது.
முழுப்பெயர் | இன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் S.p.A. | |||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்) |
| |||
தோற்றம் | 9 மார்ச்சு 1908 | |||
ஆட்டக்களம் | சான் சிரோ | |||
கொள்ளளவு | 80,018 | |||
உரிமையாளர் | ||||
President | எரிக் தோஹிர் | |||
Head coach | ரொபெர்ட்டோ மான்சினி | |||
கூட்டமைப்பு | சீரீ ஆ | |||
2020–21 | சீரீ ஆ, 1-ஆம் இடம் | |||
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் | |||
| ||||
இன்டர் மிலான் உள்நாட்டுப் போட்டித் தொடர்களில் 30 கோப்பைகளை வென்றுள்ளது. அவற்றுள் 18 முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிக் கோப்பைகளும், 7 இத்தாலியக் கோப்பைகளும், 5 இத்தாலிய உன்னதக் கோப்பைகளும் அடங்கும். 2006-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஐந்து சீரீ ஆ கோப்பைகளை வென்றனர்; இதுவே அதிகபட்ச தொடர்வெற்றியாகும். மேலும், மூன்று வாகையர் கூட்டிணைவுக் கோப்பைகளையும் வென்றுள்ளது (1964, 1965 மற்றும் 2010).
80,000 பார்வையாளர்களுக்கும் மேல் கண்டு இரசிக்கக்கூடிய சான் சிரோ ஆட்டக்களத்தில் இக்கழகம் தனது அமைவிடப்போட்டிகளை ஆடிவருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.