From Wikipedia, the free encyclopedia
இசுடான்லி (Stanley) அல்லது இசுடான்லித் துறைமுகம் (Port Stanley) போக்லாந்து தீவுகளின் தலைநகரமாகும். இந்நகரம் கிழக்கு போக்லாந்து தீவில், மிகுந்த மழை பொழிவுப் பகுதியில் வடக்கு நோக்கிய சரிவில் அமைந்துள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி, நகர மக்கள்தொகை 2,121 ஆகும்;[1] போக்லாந்து தீவின் மொத்த மக்கள்தொகையே 2,841 தான்.
இசுடான்லி | |
---|---|
![]() போக்லாந்துத் தீவுகளின் இசுடான்லியின் காட்சித்தோற்றம் | |
![]() இசுடான்லி துறைமுகப் பகுதியின் நிலப்படம். | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | போக்லாந்து தீவுகள் |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 2,121 |
நேர வலயம் | ஒசநே−4 (போக்லாந்து நேரம்[a]) |
இணையதளம் | http://www.falklandislands.com/ |
^ போக்லாந்து செப்டம்பர், 2010 முதல் ஆண்டு முழுமையும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளது.[2] |
போக்லாந்து தீவுகளின் சட்டப் பேரவையில் இசுடான்லிக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.
இசுடான்லி போக்லாந்து தீவுகளின் முதன்மை வணிக மையமாகும். கிழக்கு போக்லாந்து சாலையமைப்பின் அச்சாக விளங்குகிறது. இங்குள்ள அருங்காட்சியகம், 1845இல் கட்டப்பட்டு, தற்போது ஆளுநர் வசிக்கின்ற, அரசு மாளிகை, குழிப்பந்தாட்ட திடல், திமிங்கில எலும்பு வளைவு, குலக்குறிக் கம்பம், பல போர்ச்சின்னங்கள், துறைமுகத்திலுள்ள சேதமடைந்த கப்பல்கள் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களாகும். போக்லாந்து தீவுகள் நிறுவனம் பல கடைகளுக்கும் தங்குவிடுதிக்கும் உரிமையாளராகும். இசுடான்லியில் நான்கு பொதுவிட மதுவகங்கள், பதினோரு தங்குவிடுதிகள், மூன்று உணவகங்கள், ஒரு மீனும் வறுவலும் கடை ஆகியன உள்ளன. சுற்றுலா அலுவலகமொன்றும் உள்ளது. இங்குள்ள மூன்று தேவாலயங்களில் ஒன்றான ஆங்கிலிக்க கிறைஸ்ட்டு சர்ச்சு கதீட்ரல், உலகின் மிகத் தென்கோடியில் உள்ள ஆங்கிலிக்க தேவாலயம் ஆகும். போக்லாந்து போருக்குப் பின்னர் குண்டு அப்புறப்படுத்துதல் அமைப்பும் உள்ளது.
நகர மாளிகை அஞ்சலகம், அஞ்சல்தலை சேகரிப்பாளர் மையம், நீதிமன்றம் மற்றும் நடன மன்றமாக விளங்குகின்றது. நகர காவல் நிலையத்தின் உள்ளேயே தீவின் ஒரே சிறைச்சாலையும் அமைந்துள்ளது.
சமுதாயத்திற்காக நீச்சல் குளம், விளையாட்டு மையம், நூலகம், பள்ளிக்கூடம் ஆகியன உள்ளன. சமுதாயக் கூடத்திலுள்ள புற்றரை கால்பந்தாட்ட திடலில் வழமையாக கால்பந்தாட்டங்கள் நடக்கின்றன.
இசுடான்லியின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள குதிரைப்பந்தய திடலில் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 26,27 நாட்களில் பந்தய ஓட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிறுத்துமசு பந்தயங்கள் நூறாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன.
இங்குள்ள குழிப்பந்தாட்டத் திடல் 18 குழி கொண்டதாகும். இதுவும் மேற்கு இசுடான்லியில் உள்ளது. அரசர் ஏழாம் எட்வர்டு நினைவு மருத்துவமனை தீவின் முதன்மை மருத்துவமனையாகும். பல பேருந்து சேவைகளும் வாடகை வண்டி சேவைகளும் இயங்குகின்றன.
இசுடான்லியில் போக்லாந்து தீவுகள் வானொலி நிலையம், பிரித்தானிய அண்டார்ட்டிக் அளவையகம், பெங்குயின் நியூசு வாராந்தர செய்தித்தாளின் அலுவலகம் முதலியவையும் அமைந்துள்ளன.
இங்குள்ள பூங்கா மையத்தில் உள்ள பசுமைக்குடில்களில் தீவுகளின் தேவைக்கான காய்கனிகள் விளைவிக்கப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.