இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
ருத்ரா பிரதாப் சிங் (Rudra prathap singh) ⓘ பொதுவாக ஆர்.பி சிங் (பிறப்பு: 6 டிசம்பர் 1985) என அறியப்படும் இவர் இந்தியத் இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2003 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2004 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2005 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 94 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 922 ஓட்டங்களையும் , 136 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 443 ஓட்டங்களையும் ,58 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 104 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.ஓர் இடது கை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார்.[1] செப்டம்பர் 2018 இல், இவர் அனைத்து வகையான துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[2]
இவர் 2003 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.2003 ஆம் ஆண்டில் தர்மசாலாவில் சூன் 10 இல் குஜராத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார்.
2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டியில் அறிமுகமானார். ஏப்ரல் 3 இல்கான்பூரில் ரயிவே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.
2004 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார். சனவரி 26, ஜெய்பூரில் குசராத்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் இந்தியா ஆ துடுப்பாட்ட அணி சார்பாக போட்டியில் விளையாடினார்.
2004 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். செப்டமபர் 4 அராரேவில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். 2006 ஆம் ஆண்டு பாக்கித்தானுக்கு எதிரான போட்டியில் இவர் நான்கு இழக்குகளைக் முதல் முறையாகக் கைப்பற்றி அந்தப் போட்டியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். ஆத்திரேலியா மற்றும் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் தேர்வானார்.[3][4]
2006ஆம் ஆண்டில் இவர் சர்வதேச தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.சனவரி 21, பசிலாபாத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 25 ஓவர்கள் வீசி 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.3 ஓவர்களை மெய்டனாக வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் மட்டையாட்டத்த்ல் 29 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து சகீத் அப்ரிதி பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 22 ஓவர்கள் வீசி 75 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.3 ஓவர்களை மெய்டனாக வீசி 1 இலக்குகுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.இந்தப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.