பிரித்தானிய வானியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும் From Wikipedia, the free encyclopedia
சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys),[3][4] (22 ஏப்பிரல் 1891 – 18 மார்ச்சு 1989) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். 1939 இல் இவர் வெளியிட்ட இவரது wநூலாகிய நிகழ்தகவுக் கோட்பாடு (Theory of Probability)நிகழ்தகவு சார்ந்த பாயேசியன் கண்ணோட்டத்துக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதில் பெரும்பங்காற்றியது.[5][6]
சர் அரோல்டு ஜெப்ரீசு Sir Harold Jeffreys | |
---|---|
பிறப்பு | பேட்பீல்டு | 22 ஏப்ரல் 1891
இறப்பு | 18 மார்ச்சு 1989 97) கேம்பிரிட்ஜ் | (அகவை
துறை | கணிதவியல் புவி இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்ம்சுடிராங் கல்லூரி, தர்காம் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | எர்மன் போண்டி[1] சிட்னி கோல்டுசுட்டீன் வசந்து உசுர்பசார்]] பிலிப் ஜேம்சு மெசேஜ் ஆந்திரூ யங்[2] |
விருதுகள் | ஆடம்சு பரிசு (1926) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1937) [[அரசு கழக ஆய்வுறுப்பினர்]] (1925)[3] மர்ச்சிசன் பதக்கம் (1939) அரசு பதக்கம் (1948) வில்லியம் போவி பதக்கம் (1952) கய் பதக்கம் (தங்கம், 1962) வெட்டிலெசன் பரிசு]] (1962) வொலாசுட்டன் பதக்கம் (1964) |
துணைவர் | பெர்த்தா சுவிர்ல்சு |
இவர் இங்கிலாந்தின் தர்காம் ஆட்சிப் பிரிவில் உள்ள வாழ்சிங்டனில் அமைந்த பேட்பீல்டில் பிறந்தார். இவரது தந்தையார் பேட்பீல்டுபேராயப் பள்ளியின் தலைமை ஆசிரியராகிய இராபெர்ட் ஆல் ஜெப்ரீசு ஆவார். இவரது தாயார் எலிசபத் மேரி சார்ப்பே ஆவார்.[7] இவர் தன் தந்தையாரின் பள்ளியில் கல்விகற்று, பின் தர்காம் பல்கழகத்தினைச் சேர்ந்த, நியூசேசிலில் இருந்த ஆர்ம்சுடிராங் கல்லூரியில் இலண்டன் பல்கலைக்கழகப் புறநிலைக் கல்வித் திட்ட்த்தில் பயின்றார் .[8]
இவர் 1914 இல் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரியில் ஆய்வு உறுப்பினர் ஆனார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதமும் புவு இயற்பியலும் கற்பித்தார். இறுதியா அங்கு புளூமிய வானியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
இவர் இயற்பியலாளரும் கணிதவியலாளருமான பெர்த்தா சுவிர்ல்சுவை (1903–1999)1940 இல் மணந்தார். இருவரும் இணைந்து கணித இயற்பியல் முறைகள் (Methods of Mathematical Physics) எனும் நூலை எழுதினர்.
இவரது பெரும்பங்களிப்புகள் நிகழ்தகவுக்கான பாயேசிய அணுகுமுறையை உருவாக்கியதும் புவி அகடு நீர்மநிலையில் அமைகிறது எனும் கருதுகோளும் ஆகும்.[9] இவருக்கு 1953 இல் சர் பட்டம் வழங்கப்பட்டது.
இவர் 1924 அளவில் நேரியல் இரண்டாம்படி வகைநுண் கணிதவியல் சமன்பாடுகளுக்கான தோராயத் தீர்வுகளைத் தரும் பொதுமுறையை உருவாக்கினார். இது சுரோடிஞ்சரின் சமன்பாட்டுக்கும் பொருந்தும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் சுரோடிஞ்சர் தன் சமன்பாட்டை வெளியிட்டார். வின்ட்செல்லும் கிராமெர்சும் பிரில்லவுயினும் , ஜெப்ரீசின் முந்தைய பணியை அறியாததால், இம்மூவரின் பெயரில் வழங்கும் WKB தோராயப் பணிக்கு முன்னரே ஜெப்ரீசு ஆற்றிய பணி கண்டுகொள்ளப்படாமலே இருந்தது.[10]
இவர் 1937 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தைப் பெற்றார். 1960 இல், இவர் அரசு கழகத்தின் கோப்ளே பதக்கத்தைப் பெர்றார். இவர் 1962 இலரசு புள்ளியியல் கழகத்தின் பொன்னாற் செய்த குய் பதக்கத்தைப் பெற்றார். இவர் 1948 இல் பெலிஜிய அறிவியல், எழுத்து, கலைக் கல்விக்கழகத்தின் பிரிக்சு சார்லசு இலாகிரேஞ்சு விருதைப் பெற்றார். [11]
இவர் 1939 முதல் 1952 வரை பன்னாட்டு சூரியவியல் மையத்துக்கு இயக்குநராக விளங்கியுள்ளார்.
இயற்பியலாளராலும் நிகழ்தகவுக் கோட்பாட்டாளர் எடுவின் டி. ஜாய்னெசாலும் எழுதப்பட்ட நிகழ்தகவுக் கோட்பாடு: அறிவியலின் அளவையியல்9தருக்கவியல்) எனும் பாடநூல் ஜெப்ரீசுக்கு காணிக்கையாக்கப் பட்டுள்ளது. காணிக்கையில், "இந்த உண்மையைக் கண்டறிந்த் பேணிக்காத்த சர் அரோல்டு ஜெப்ரீசுக்கு" எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் உய்த்தறிவு எனும் ஜெப்ரீசு நூலின் மூன்றாம் பதிப்புப் பின்னிணைப்பு வழியாகத் தான் பை எனும் எண்னின் மதிப்பு பகா எண்ணாக அமைதல் பற்றிய மேரி கார்ட்ரைட்டின் மெய்ப்பிப்பை அறிய வருகிறொம்.
இவரும் இவரது சமகால அறிஞர்களும் ஆல்பிரெடு வாகனர் முன்மொழிந்த கண்ட நகர்வுக் கோட்பாட்டை கடுமையாக மறுத்தனர். இவரைப் பொறுத்தவரை, புவி மேற்பரப்பில் கண்டங்களை நகர்த்தக் கூடிய பேரளவு விசை செயல்படுவற்கான சான்றில்லை என்பதால் கண்ட நகர்வுக்கு இடமே இல்லை.[12] கண்ட நகர்வுக்கும் கண்டத்தட்டு நகர்வியலுக்கும் 1960 களிலும் அதற்கப்பாலும் புவியியல், புவி இயற்பியல் சான்று நிறுவப் பட்டு, புத்தியல் புவியியலின் ஒருங்கினைப்புக் கோட்பாடாக ஏற்ற பின்னரும், ஜெப்ரீசு தன் இறப்புவரை இக்கோட்பாட்டை கடுமையாக எதிர்த்துவந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.