Remove ads
From Wikipedia, the free encyclopedia
சூன் 12, 2016இல் அமெரிக்க மாநிலம் புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பல்சு என்று பெயரிடப்பட்ட இரவுக்கூடலகத்தில் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்; 53 பேர் காயமடைந்தனர். துப்பாக்கியாளர் ஆப்கானித்தானைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் ஓமார் சித்திக் மாத்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2016 ஒர்லாண்டோ இரவுக்கூடலகத் துப்பாக்கிச் சூடு | |
---|---|
2006 ஆம் ஆண்டில் பல்சு இரவுகூடலகம் | |
ஐக்கிய அமெரிக்க மாநிலம் புளோரிடாவில் பல்சு இரவுக் கூடலகத்தின் அமைவிடம் | |
இடம் | 1912 தெற்கு ஓரஞ்சு அவென்யூ, ஒர்லாண்டோ, புளோரிடா, ஐ.அ. |
ஆள்கூறுகள் | |
நாள் | சூன் 12, 2016 2:00 a.m. – 5:00 a.m. கிழக்கு நேர வலயம் (ஒ.ச.நே - 04:00) |
தாக்குதல் வகை | திரள் துப்பாக்கிச் சூடு திரள் கொலை |
இறப்பு(கள்) | ~50[1][2] |
காயமடைந்தோர் | ~53 |
தாக்கியோர் | ஓமார் மிர் சித்திக் மாத்தீன்[3] |
இதுவே அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான திரள் துப்பாக்கிச் சூடு ஆகும்.[4][5]
சூன் 12, கிழக்கத்திய நேரம் காலை 2:02 மணிக்கு துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டு இரவுக் கூடலகத்திற்கு பாதுகாப்பிற்கிருந்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியாளரை நோக்கி சுட்டார். பல்சு கூடலக நிர்வாகத்தினர் தங்களது முகநூல் பக்கத்தில் காலை 2:09 மணிக்கு "பல்சிலிருந்து அனைவரும் வெளியேறுங்கள்; ஓடுங்கள்" என்று பதிவு செய்திருந்தனர். துப்பாக்கியாளர் தாக்குதல் நீள் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, மற்றும் அதிகாரிகள் அபாயகரமானது என ஐயுற்ற மற்றுமொரு கருவியையும் வைத்திருந்தார். கூடுதல் காவலர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது கூடலகத்திற்குள் ஓடிய துப்பாக்கியாளர் அங்கிருந்தவர்களை பிணையாக்கினார்.[6][7]
பிணைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க, பேரம் பேச ஒருவர் நிகழிடத்திற்கு அனுப்பப்பட்டார்.[8]. துப்பாக்கியாளரிடம் வெடிக்கக்கூடிய கருவி இருந்ததாகக் கூறப்படுகின்றது.[9][10] காவல்துறையினரின் வெடிகுண்டு குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகின்றது.
காலை 5:00 மணிக்கு சிறப்பு ஆயுத, தந்திரக் குழுவினர் கூடலகத்தினுள் நுழைந்து துப்பாக்கியாளருடன் சண்டையில் ஈடுபட்டனர்.[1] முப்பது பிணையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; ஒரு காவல் அதிகாரிக்கு தலையில் குண்டுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[11] ஒர்லாண்டோ காவல்துறை துப்பாக்கியாளர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.[12][13][14] இராய்ட்டர்சு நிறுவனம் துப்பாக்கியாளர் எப்போது கொலைகளை நிகழ்த்தினார் என்பது அறியப்படவில்லை என வெளியிட்டுள்ளது.
ஒமார் மிர் சித்திக் மாத்தீன் (நவம்பர் 16, 1986 – சூன் 12, 2016)[17] ஒர்லாண்டோவிலிருந்து ஏறத்தாழ 100 மைல்கள் (160 கிலோமீட்டர்கள்) தொலைவில் வாழ்ந்து வந்தார். நியூயார்க் மாநிலத்தில் ஆப்கானிய பெற்றோர்களுக்குப் பிறந்த மாத்தீன், முஸ்லிமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.[18][19] மார்ட்டின் கவுன்ட்டி உயர்நிலைப் பள்ளியில் குறைந்தது ஓராண்டாவது படித்துள்ளதாகவும் இந்தியன் ரிவர் ஸ்டேட் கல்லூரியிலிருந்து இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.[20] புளோரிடா மாநில சட்ட ஒழுங்குத் துறை ஆவணங்களின்படி இவர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதியப்படவில்லை.[20] மாத்தீன் புளோரிடாவின் பியர்சு கோட்டை நகரில் வாழ்ந்து வந்தார்; ஆயினும் இவருக்கான அஞ்சல்களை பெற்றோரின் முகவரியில் செயின்ட் லூசியில் பெற்று வந்தார்.[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.