From Wikipedia, the free encyclopedia
ஏப்ரல்/மே 2015 வெப்ப அலை இந்தியாவின் பல்வேறு இடங்களில் மே 26ஆம் நாளது வரை 700க்கும் மேலானவர்களை கொன்றது.[1][2] இந்தியாவில் உலர்ந்த காலநிலை நிலவும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலகட்டத்தில் இந்த வெப்ப அலை நிகழ்ந்தது. [3] மே 24 அன்று, கம்மம் நகரில் 48 °C (118 °F) இருந்தது; இது இதுவரை உயர்நிலை வெப்பமாக இருந்த 1947 ஆண்டு வெப்பநிலையான 47.2 °C (117.0 °F) விடக் கூடுதலாகும்.[4][5]கடல் மட்டத்திலிருந்து 2,010 மீட்டர்கள் (6,580 அடி) உயரத்தில் அமைந்துள்ள, மலைச்சாரல் தலமான, முசோரியில் கூட காற்றின் வெப்பநிலை 36 °C (97 °F) அளவிற்கு உயர்ந்தது.[4]
அரசு உள்ளாட்சி அமைப்புகளை வெப்ப அலையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டது; காலை 11 மணி முதல் 3 மணி வரையான வேலைகளை குறைத்துக் கொள்ளவும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீர் வழங்கூர்திகள் மூலம் வழங்கவும் பரிந்துரைத்தது.[6] வங்காள சீருந்து சங்கம் தங்கள் வாடகை வண்டிகளை காலை 11 முதல் மாலை 4 மணி வரை இயக்காதிருக்க முடிவு செய்தது.[7] கொல்கத்தாவில் இரு சீருந்து ஓட்டுநர்கள் மரணமுற்றதைத் தொடர்ந்து குளுரூட்டப்படாத சீருந்துகளை பகலில் ஐந்து மணி நேரம் ஓட்டாதிருக்க முடிவெடுக்கப்பட்டது.[2] மே 23 அன்று குளிரூட்டப்பட்ட மெட்றோ நிலையங்களிலும் அங்காடி வளாகங்களிலும் மக்கள் தஞ்சமடைந்தனர்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.