முசோரி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
முசோரி (Mussoorie) என்பது இந்தியாவின் உத்தரகண்ட மாநிலத்தின், தேராதூன் மாவட்டத்தில், தேராதூன் நகருக்கு அருகில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் நகரியம் ஆகும். இது மாநிலத் தலைநகரான தேராதூன் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவிலும், தேசியத் தலைநகரான புது தில்லிக்கு வடக்கே 290 கிமீ (180 மைல்) தொலைவிலும் உள்ளது. இந்த மலை வாழிடம் கர்வால் இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது. பர்லோகஞ்ச் மற்றும் ஜாரிபானி நகரங்களைப் போலவே, இராணுவக் கண்டோன்மென்ட்டை உள்ளடக்கிய லண்டூர் நகரமும் "பெரிய முசோரியின்" பகுதியாகக் கருதப்படுகிறது. [3]
முசோரி
Mansūrī | |
---|---|
அடைபெயர்(கள்): மலைகளின் அரசி | |
ஆள்கூறுகள்: 30.45°N 78.08°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | தோராதூன் |
ஏற்றம் | 2,005 m (6,578 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 30,118 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி[1] |
• பிற | கர்வாலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 248179[2] |
வாகனப் பதிவு | UK 07, UK 09 |
முசோரி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2,005 மீட்டர்கள் (6,578 அடி) ) உயரத்தில் உள்ளது. இதன் வடகிழக்கில் இமயமலைப் பனித் தொடர்களும், தெற்கே டூன் பள்ளத்தாக்கு மற்றும் சிவாலிக் மலைத் தொடர்களும் உள்ளன. 2,275 மீ (7,464 அடி) உயரம் கொண்ட லண்டூரில் உள்ள அசல் லால் திப்பா இரண்டாவது மிக உயர்ந்த இடம் ஆகும். முசோரி மலைகளின் ராணி என்று பிரபலமாக அறியப்படுகிறது. [4] [5]
முசோரி நீண்ட காலமாக மலைகளின் ராணி என்று அழைக்கப்பட்டது. முசோரி என்ற பெயர் பெரும்பாலும் மன்சூர் என்பதில் இருந்து வந்ததாகும். மன்சூரி என்பது இப்பகுதியில் காணப்படும் புதர் ஆகும். இந்த நகரம் பெரும்பாலும் இந்தியர்களால் மன்சூரி என்று குறிப்பிடப்படுகிறது. [6]
1803 இல் உமர் சிங் தாப்பாவின் கீர் கூர்க்காக்கள் கர்வால் மற்றும் டெஹ்ராவைக் கைப்பற்றினர், இதன் மூலம் முசோரி நிறுவப்பட்டது. 1814 நவம்பர் முதல் நாள் அன்று கூர்க்காக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் மூண்டது. டெஹ்ராடூன் மற்றும் முசோரி 1815 ஆம் ஆண்டில் கூர்க்காக்கள் வெளியேற்றப்பட்டு, இப்பகுதிகள் 1819 ஆம் ஆண்டில் சஹாரன்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
முசோரி ஒரு ஓய்வு விடுதியாக 1825 இல் பிரித்தானிய இராணுவ அதிகாரியான கேப்டன் யங் என்பவரால் நிறுவப்பட்டது. டேராடூனில் வசிக்கும் வருவாய் கண்காணிப்பாளரான திரு ஷோருடன், தற்போதைய இடத்தை ஆராய்ந்து, கூட்டாக ஒரு துப்பாக்கி சூடு கொண்ட விடுதியைக் கட்டினார். [7] கிழக்கிந்திய நிறுவனத்தின் லெப்டினன்ட் ஃபிரடெரிக் யங் கேம் துப்பாகிச்சூடுகளை நடத்த முசோரிக்கு வந்தார். அவர் மேகல் பேக் சாலையில் ஒரு வேட்டை விடுதியை கட்டினார். மேலும் அவர் 1823 இல் டூனின் மாஜிஸ்திரேட் ஆனார். அவர் முதல் கூர்க்கா படைப்பிரிவை உருவாக்கினார். மேலும் பள்ளத்தாக்கில் முதன் முதலில் உருளைக்கிழங்குகளை பயிரிட்டார். முசோரியில் அவரது பதவிக்காலம் 1844 இல் முடிவடைந்தது, அதன் பிறகு அவர் திமாப்பூர் மற்றும் டார்ஜீலிங்கில் பணியாற்றினார், பின்னர் ஜெனரலாக ஓய்வுபெற்று அயர்லாந்து திரும்பினார். [8]
1832 ஆம் ஆண்டில், முசோரி இந்தியாவின் பெரிய இந்திய நெடுவரை வில் ஆய்வின் முனையமாக இருந்தது, இது இந்திய வரைபடத்தை வரைவதை நோக்ககமாக கொண்டு துணைக்கண்டத்தின் தெற்கு முனையில் தொடங்கியது. அப்போது அது வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த நேரத்தில் இந்தியாவின் நில அளவை தலைவர்சர் ஜார்ஜ் எவரஸ்ட், இந்திய நில அளவைத் துறையின் புதிய அலுவலகம் முசோரியில் அமைய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அந்த இடம் பினர் தோராதூனில் அமைக்கப்பட்டது.[சான்று தேவை] அதே ஆண்டு முசோரியில் முதல் பியர் வடிப்பாலை சர் ஹென்றி போலே அவர்களால் "தி ஓல்ட் ப்ரூவரி" என்ற பெயரில் நிறுவப்பட்டது. [9]
1901 வாக்கில், முசோரியின் மக்கள் தொகை 6,461 ஆக உயர்ந்தது. கோடையில் 15,000 ஆக உயர்ந்தது. முசோரியை 58 மைல்கள் (93 km) தொலைவில் உள்ள சகாரன்பூரிலிருந்து சாலை வழியாக அணுகவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் 1900 இல் தேராதூனுக்கு தொடருந்து வசதி உண்டானதால் அணுகல் எளிதாகிவிட்டது. இதனால் சாலைப் பயணம் 21 மைல்கள் (34 km) என குறைந்தது.
நேருவின் மகள் இந்திரா (பின்னர் இந்திரா காந்தி ) உட்பட நேரு குடும்பத்தினர் 1920கள், 1930கள், 1940களில் முசோரிக்கு அடிக்கடி வந்து சவோய் விடுதியில் தங்கினர். [10] அவர்கள் அருகிலுள்ள தோராதூனில் நேரத்தை செலவிட்டனர். அங்கு நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டித் இறுதியில் நிரந்தரமாக குடியேறினார்.
1959 திபெத்தியக் கிளர்ச்சியின் போது, 14வது தலாய் லாமா 20, ஏப்ரல் 1959 இல் முசோரியில் தங்கினார். 1960 ஏப்ரல் வரை இருந்த அவர் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவுக்கு இடம்பெயர்ந்தார். [11] அங்கு தற்போது திபெத்திய மைய நிர்வாகத்தின் தலைமையகம் உள்ளது.
முதல் திபெத்திய பள்ளி 1960 இல் முசோரியில் நிறுவப்பட்டது. திபெத்தியர்கள் முக்கியமாக மகிழ்ச்சி பள்ளத்தாக்கில் குடியேறினர். இன்று, முசோரியில் சுமார் 5,000 திபெத்தியர்கள் வாழ்கின்றனர். [12]
முசோரி கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 2,005 மீட்டர்கள் (6,578 அடி) ) உயரத்தில் உள்ளது. இப்பகுதியின் மிக உயரமான இடம் "லால் திப்பா" ஆகும். இது சுமார் 2,275 உயரமானதாக உள்ளது. லால் திப்பா என்ற பெயர் இப்போது சிகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு கண்காணிப்பு புள்ளியை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.
முசோரி, நடுத்தர உயர இமயமலையில் மிகவும் பொதுவான துணை வெப்பமண்டல ஹைலேண்ட் காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பென் ). கோடை காலம் சூடாகவும், மிகவும் ஈரப்பதமானதாகவும் இருக்கும், சூலை மற்றும் ஆகத்தில் சராசரியாக 660 மில்லிமீட்டர்கள் (26 அங்) மழை பொழியும். பருவமழைக்கு முந்தைய காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கால நிலை பொதுவாக சூடானதாகவும், வறண்டதாகவும் இருக்கும். சூன் நடுப்பகுதியில் இருந்து அதிக மழை பெய்யும். அதே சமயம் பருவமழைக்கு பிந்தைய காலமும் வறண்டதாக இருக்கும். அதேசமயம் கணிசமாக குளிர்ச்சியாகவும் இருக்கும். குளிர்காலத்தில், பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பருவங்களை விட மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும். மேலும் பொதுவான வானிலை குளிர்ச்சியாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும். காடழிப்பு, புதிய கட்டுமானங்கள், புவி வெப்பமடைதல் போன்ற உள்ளூர் மற்றும் உலகளாவிய காரணிகளின் கலவையால் அண்மைய ஆண்டுகளில் பனிப்பொழிவின் நாட்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், முசோரியில் பொதுவாக திசம்பர், சனவரி, பெப்ரவரி மாதங்களில் ஓரளவு பனிப்பொழிவு உள்ளது. அக்டோபர் முதல் பெப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நகரம் அரிதான " குளிர்கால " காலநிலை கொண்டதாக உள்ளது. [13]
தட்பவெப்ப நிலைத் தகவல், முசோரி (1971-2000, extremes 1901-1987) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 21.1 (70) |
23.3 (73.9) |
26.1 (79) |
29.1 (84.4) |
34.4 (93.9) |
31.7 (89.1) |
29.4 (84.9) |
25.6 (78.1) |
27.2 (81) |
28.1 (82.6) |
25.0 (77) |
23.3 (73.9) |
34.4 (93.9) |
உயர் சராசரி °C (°F) | 10.3 (50.5) |
11.2 (52.2) |
15.7 (60.3) |
20.6 (69.1) |
23.0 (73.4) |
23.2 (73.8) |
20.9 (69.6) |
20.5 (68.9) |
19.8 (67.6) |
18.6 (65.5) |
15.5 (59.9) |
12.7 (54.9) |
17.6 (63.7) |
தாழ் சராசரி °C (°F) | 2.8 (37) |
3.4 (38.1) |
7.1 (44.8) |
11.5 (52.7) |
14.3 (57.7) |
15.6 (60.1) |
15.0 (59) |
14.8 (58.6) |
13.6 (56.5) |
11.1 (52) |
7.6 (45.7) |
4.5 (40.1) |
10.0 (50) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -5.0 (23) |
-6.7 (19.9) |
-2.5 (27.5) |
-1.5 (29.3) |
3.7 (38.7) |
4.1 (39.4) |
11.7 (53.1) |
7.4 (45.3) |
1.3 (34.3) |
2.6 (36.7) |
-2.1 (28.2) |
-3.9 (25) |
−6.7 (19.9) |
மழைப்பொழிவுmm (inches) | 49.9 (1.965) |
65.2 (2.567) |
73.1 (2.878) |
56.2 (2.213) |
69.0 (2.717) |
200.9 (7.909) |
629.6 (24.787) |
548.0 (21.575) |
264.5 (10.413) |
55.5 (2.185) |
14.9 (0.587) |
10.1 (0.398) |
2,036.8 (80.189) |
% ஈரப்பதம் | 78 | 75 | 66 | 56 | 58 | 70 | 85 | 87 | 85 | 78 | 75 | 75 | 74 |
சராசரி மழை நாட்கள் | 4.1 | 5.0 | 5.1 | 3.8 | 5.0 | 9.5 | 22.4 | 21.3 | 11.6 | 2.7 | 0.9 | 1.3 | 92.7 |
ஆதாரம்: India Meteorological Department[14][15] |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [16] முசோரியில் 30,118 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் ஆண்களின் விகிதம் 55% என்று உள்ளது. அதேசமயம் பெண்களின் விகிதம் 45% என்று உள்ளது. முசோரியில் சராசரி கல்வியறிவு 89% என்று உள்ளது, இது தேசிய சராசரியான 75% ஐ விட கூடுதல் ஆகும். ஆண்களின் கல்வியறிவு 94% என்றும், பெண்களின் கல்வியறிவு 84% என்றும் உள்ளது. முசோரி மக்கள் தொகையில் 6 வயதுக்கு உட்பட்டரவக்ள் 9% ஆவர். பெண்கள் விகித்தமான மாநில சராசரி 963க்கு மாறுபட்டதாக முசோரி நகராட்சியில் பாலின விகிதம் 812 ஆக உள்ளது. மேலும், குழ்தைகள் பாலின விகித்தமான உத்தரகாண்ட் மாநில சராசரியான 890 உடன் ஒப்பிடும்போது முசோரியில் குழந்தை பாலின விகிதம் 918 ஆக வேறுபட்டதாக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.