2010 எயிட்டி நிலநடுக்கம்
12 ஜனவரி 2010 பூகம்பம் From Wikipedia, the free encyclopedia
12 ஜனவரி 2010 பூகம்பம் From Wikipedia, the free encyclopedia
நடு அமெரிக்காவில் கரிபியன் பகுதியில் அமைந்துள்ள எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே 10 மைல் தொலைவில், ஐந்து மைல் ஆழத்தில் செவ்வாய் சனவரி 13, 2010 அன்று உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்தது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் எயிட்டியின் கரையோரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தப்பகுதியில் (அண்மைநாடான டொமினிகன் ரிபப்ளிக் உள்ளடங்கலாக) மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் 1946 -ல் இசுபானியோலாவில் ஏற்பட்ட 8.1 ரிக்டர் நிலநடுக்கமே; இதனால் ஏற்பட்ட சுனாமியால் 1,790 பேர் இறந்தார்கள். இதற்கு முன்னர் ஹைட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.
சேதமடைந்த அதிபர் மாளிகை | |
நாள் | 21:53:09, 12 சனவரி 2010 (UTC) |
---|---|
நிலநடுக்க அளவு | 7.0 Mw |
ஆழம் | 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) |
நிலநடுக்க மையம் | 18.4514°N 72.4452°W |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | எயிட்டி |
அதிகபட்ச செறிவு | MM X[1] |
பின்னதிர்வுகள் | 35[2] |
உயிரிழப்புகள் | Total unknown, estimated to be tens of thousands to more than 100,000[3][4][5] |
இதுவரை 50,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 100,000 லிருந்து 200,000 வரை மக்கள் இறந்திருக்கலாம் என்றும் எயிட்டியின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார் [6]. பான் அமெரிக்க சுகாதார அமைப்பு இறப்பு எண்ணிக்கை 200,000 வரை இருக்கலாம் என கணித்துள்ளது. 300,000 மக்கள் வீடு இழந்துள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.
அதிபர் மாளிகை, மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நாட்டின் தொலை தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
என்ரிகீயோ-ப்ளாண்டைன் கார்டன் பிளவுப்பெயர்ச்சி மண்டலம் (Enriquillo-Plantain Garden Fault Zone) என்ற அமைப்பில் ஏற்பட்ட சிதைவே (rupture) இதன் நிலவியல் காரணங்களுள் முதன்மையானதாகும். கரீபியப் புவிமேலோடும் வட அமெரிக்க புவிமேலோடும் கிழக்கு-மேற்காக ஒன்றையொன்று உராய்ந்து செல்லும் போது ஏற்படும் திருப்பு பிளவுப்பெயர்ச்சியினாலேயே (strike-slip fault) எயிட்டி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.[7]
இந்தப்பகுதியில் பெரிய நிலநடுக்கங்கள் அரிதே - ஏனெனில் கரீபியப் புவிமேலோடு ஒரு சிறிய அளவிலான மேலோடுதான் - இருப்பினும் சனவரி 12 நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் செறிவு. (முதல் காரணம் அதன் ரிக்டர் அளவு எண்மதிப்பு - 7.0) குறிப்பு:நிலநடுக்கம் எவ்வளவு தீவிரமாக உணரப்பட்டது என்பதன் அளவே செறிவு ஆகும்.
டொமினிகன் குடியரசில் மார்ச் 2008 நடைபெற்ற கருத்தரங்கில் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நிலநடுக்கம் விரைவில் (ஹெய்ட்டியில்) ஏற்படக்கூடும் என்று கணிப்பு எரிக் கேலே (Eric Calais), பால் மான் (Paul Mann) ஆகிய அறிவியலாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது. அவர்கள் உலகளாவிய இடங்காட்டு அமைப்பைக் (GPS) கொண்டு மேற்கொண்ட ஆய்வில் என்ரிகீயோ பிளவுப்பெயர்ச்சி அமைப்பில் கண்ட உயரும் பார அளவுகளை (rising stress) வைத்து இவ்வாறு கணித்துள்ளனர். ஹெய்ட்டியின் பிரதமர் உள்பட பல முக்கிய அதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர். இருப்பினும், மிகக்குறுகிய காலத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதாலும் ஹெய்ட்டி ஏழை நாடாக இருந்ததால் முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியாததாலும் மேலும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவித்த ஹெய்ட்டியால் இந்த கணிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இயலவில்லை.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.