Remove ads
ஆசிய இனக்குழுவினர் From Wikipedia, the free encyclopedia
ஹெப்தலைட்டுகள் (Hephthalites or Ephthalites or Ye-tai) என்பவர்கள் நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மற்றும் வேளாண் இன மக்களின் கூட்டுக் குழுவினர் ஆவர்.[4] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் புதிய புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் தங்கள் நிலப்பரப்பை விரிவு படுத்தினார்கள்.[5] ஹெப்தலைட்டு மக்கள் வெள்ளை ஹூணர்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறது.
ஹெப்தலைட்டு பேரரசு | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
408–670 | |||||||||||||||||||||
தலைநகரம் | கண்டசு (பாக்திரியா சியால்கோட் | ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாக்திரிய மொழி காந்தாரி மொழி சோக்டியன் மொழி கொராஸ்மியன் மொழி துருக்கிய மொழி சகர் மொழி சமஸ்கிருதம் | ||||||||||||||||||||
சமயம் | பௌத்தம்[1] மாணி சமயம் நெஸ்டோரியம் சரத்துஸ்திர சமயம்[2] இந்து சமயம் | ||||||||||||||||||||
தெக்ஜின் | |||||||||||||||||||||
• 430/440 – ≈490 | கிங்கிலா | ||||||||||||||||||||
• 490/500 – 515 | தோரமனா | ||||||||||||||||||||
• 515–528 | மிகிராகுலன் | ||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய தொன்மைக் காலம் | ||||||||||||||||||||
• தொடக்கம் | 408 | ||||||||||||||||||||
• முடிவு | 670 | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | ஆப்கானித்தான் சீனா இந்தியா கசக்கஸ்தான் கிர்கிசுத்தான் பாக்கித்தான் தஜிகிஸ்தான் துருக்மெனிஸ்தான் உஸ்பெகிஸ்தான்[3] |
ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உச்ச கட்டத்தில் இருந்த ஹெப்தலைட்டுகளின் பேரரசு தற்கால ஆப்கானித்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், கசக்ஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனாவின் சிங்ஜியாங் பகுதிகளை கொண்டிருந்தது.[6][7]
ஹெப்தலைட்டு என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகும்.
பண்டைய இந்தியாவில் ஹெப்தலைட்டுகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை எனினும் ஹெப்தலைட்டுக்கள் ஹூணர்கள் அல்லது துருக்கர்களைக் குறிப்பதாகும்.[8] ஹெப்தலைட்டுகளை ஆர்மீனியர்கள் ஹைதல் என்றும், பாரசீகர்கள் மற்றும் அரபியர்கள் ஹைதாலியர்கள் என்றும் குறிப்பிப்பிட்டனர். ஹெப்தலைட்டுகளின் பேச்சு மொழி பாக்திரியா மொழியாகும்
ஹெப்தலைட்டு மக்கள் கிழக்கு பாரசீகத்தின் வெள்ளை ஹூணர்கள் என்றும்[9][10][11] துருக்கியர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.[12][13]
ஹெப்தலைட்டு மக்கள் பௌத்தம், மாணி சமயம், நெஸ்டோரியம் மற்றும் சரத்துஸ்திர சமயம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றினர்.[2] ஹெப்தலைட்டுகளின் பகுதியான பால்க் பகுதியில் நூறு பௌத்த விகாரைகளுடன் 30,000 பௌத்த பிக்குகள் இருந்ததாக யுனேஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.[6]
வடகிழக்கு இந்து குஷ் மலைத் தொடர்களில் அமைந்த பாக்திரியாப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்ட ஹெப்தலைட்டுகள், கி பி 479-இல் சோக்தியானாப் பகுதியைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த கிடாரைட்டுகளை மேற்கு நோக்கித் துரத்தி அடித்தனர். கி பி 493-இல் வடமேற்கு சீனாவின் பகுதிகளைக் கைப்பற்றினர்.
கி பி ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்ற வந்த ஹெப்தலைட்டுகளின் கூட்டாளிகளான ஹூணர்களைக் குப்தப் பேரரசர் ஸ்கந்தகுப்தர் விரட்டியடித்தான்.[14] பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஹூணர்கள் குப்தப் பேரரசை வென்று மத்திய மற்றும் வட இந்தியாவைக் கைப்பற்றினர்.[3] கி பி 510-இல் ஹெப்தலைட்டுகளின் பேரரசன் தோரமணன் கீழ் ஒருங்கிணைந்த ஹூணர்களை குப்தப் பேரரசன் பானுகுப்தன் தோற்கடித்தார்.[15][16] கி பி ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹெப்தலைட்டுகளின் கூட்டாளிகளான ஹூணர்களை, சந்தேல அரசரான யசோதர்மன் மற்றும் குப்தப்பேரரசர் நரசிம்மகுப்தர் இந்தியாவை விட்டு விரட்டியடித்தனர்.[17][18]
இந்து சமய காபூல் சாகி மன்னர் கி பி 670-இல் ஹெப்தலைட்டுகளின் இறுதி மன்னரான யுதிஷ்டிரனை வென்று, ஹெப்தலைட்டுகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.[19]
நடு ஆசியாவின் தற்கால பஷ்தூன் மக்கள், துருக்மேனிய மக்கள் மற்றும் கஜகஸ்தானியர்களின் முன்னோர்கள் என ஹெப்தலைட்டுகள் கருதப்படுகிறார்கள்.[3] ஹெப்தலைட்டுகள் - குஜ்ஜர் இன கலப்பால் பிறந்தவர்களே இராஜபுத்திரர்கள் என சர்ச்சைக்குரிய கருத்து நிலவுகிறது.[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.