From Wikipedia, the free encyclopedia
ஹஃபிசுல்லா அமீன் (Hafizullah Amin, 1 ஆகத்து 1929 – 27 திசம்பர் 1979) ஆப்கானிஸ்தானின் கம்யூனிச ஆட்சியில் இருந்த இரண்டாவது அதிபர் ஆவார்.
அஃபிசுல்லா அமீன் Hafizullah Amin | |
---|---|
படிமம்:Hafizullah Amín.jpg 1979 இல் அமீன் | |
ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி | |
பதவியில் 14 செப்டம்பர் 1979[1] – 27 திசம்பர் 1979 | |
முன்னையவர் | நூர் முகம்மது தராக்கி |
பின்னவர் | பப்ராக் கர்மால் |
புரட்சிப் பேரவைத் தலைவர் | |
பதவியில் 14 செப்டம்பர் 1979 – 27 திசம்பர் 1979 | |
முன்னையவர் | நூர் முகம்மது தராக்கி |
பின்னவர் | பப்ராக் கர்மால் |
தேசியப் பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 28 சூலை 1979 – 27 திசம்பர் 1979 | |
பிரதமர் | நூர் முகம்மது தராக்கி இவரே |
முன்னையவர் | முகம்மது அசுலாம் வத்தஞ்சார் |
பின்னவர் | முகம்மது ராஃபி |
அமைச்சரவைத் தலைவர் | |
பதவியில் 27 மார்ச் 1979 – 27 திசம்பர் 1979 | |
தலைவர் | நூர் முகம்மது தராக்கி இவரே |
முன்னையவர் | நூர் முகம்மது தராக்கி |
பின்னவர் | பப்ராக் கர்மால் |
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 1 மே 1978 – 28 சூலை 1979 | |
பிரதமர் | நூர் முகம்மது தராக்கி இவரே |
முன்னையவர் | முகம்மது தாவூத் கான் |
பின்னவர் | சா வாலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாக்மான், ஆப்கானித்தான் இராச்சியம் | 1 ஆகத்து 1929
இறப்பு | 27 திசம்பர் 1979 50) தாச்பெக் அரண்மனை, காபுல், ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு | (அகவை
இளைப்பாறுமிடம் | தாஜ்பெக் அரண்மனை |
அரசியல் கட்சி | ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி |
துணைவர் | பத்மனா[2] |
பிள்ளைகள் | 24[3] |
கல்வி | கொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை) |
தொழில் | ஆசிரியர், குடிமைப் பணியாளர் |
Military service | |
பற்றிணைப்பு | ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு |
போர்கள்/யுத்தங்கள் | சாவுட் புரட்சி 1979 எழுச்சி |
அமீன் 104 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆப்கானிய பாதுகாப்புக்குள் உட்படுத்த முனைந்தார். டிசம்பர் 27, 1979 இல் இவரது எதிர்ப்பாளர்கள் சோவியத் படைகளின் துணையுடன் இவரையும் இவரைச் சேர்ந்த 300 பேரையும் கொன்று சோவியத் சார்பான பப்ராக் கர்மால் என்பவரை பதவியிலமர்த்தினர்.
காபூல் பல்கலைக்கழகப் பட்டதாரியான அமீன் பட்டப்பின் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். பட்டம் பெற்றமலேயே நாடு திரும்பிய அமீன் அங்கு ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து அதன் மார்க்சிய மக்கள் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினரானார். 1978 இல் முகமது டாவூட் கான் தலைமையிலான அரசுக்கெதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார். ஏப்ரல் 28, 1978 இல் டாவூடும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி நூர் முகமது தராக்கி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அமீனும் பாப்ராக் கர்மாலும் துணைப் பிரதமர்களாயினர்.
கட்சியின் மார்க்சிய மக்கள் பிரிவு ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதனை அடுத்து கர்மால் ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார். மார்ச் 1979 இல் கட்சியில் அமீனின் செல்வாக்கு அதிகமாயிற்று.
அமீனின் அதிபர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற கொலைமுயற்சி ஒன்றிலிருந்து அவர் தப்பினார். இதனையடுத்து அமீன் தனது ஆதரவாளர்களுடன் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதிபர் தராக்கியை சிறைப்பிடித்தார்.
1979 செப்டம்பர் 14 அன்று, அமீன் அரசைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சில நாட்களின் பின்னர் தராக்கி இனந்தெரியாத நோய் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அமீனின் ஆட்சியின் போது அவருக்கெதிராக சுமார் 18,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்குச் சரிந்தது.
இவரது காலத்தில் பல ஆப்கானியர்கள் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்றனர்.
1979 திசம்பர் 27] இல் சோவியத் இராணுவம் அரச மாளிகையை முற்றுகையிட்டு அமீனையும் அவரது காவற்படையினர் 200 பேரையும் சுட்டுக் கொன்று காபூலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அன்றிரவு 7:15 மணிக்கு அரச வானொலியில் பாப்ராக் கர்மாலின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் ஆப்கானிஸ்தான் அமீனிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் பாப்ராக் கர்மால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.