வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை (Vandalur-Meenchur Outer Ring Road) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் சென்னை நகரத்தினுள் பெரும் சரக்குந்துகள் வந்துசெல்வதைத் தவிர்க்கவும், வளரும் மாநகரப் போக்குவரத்தின் சீரான பரவலுக்கும் வகை செய்ய வளர்த்தெடுக்கப்படும் ஒரு முக்கிய போக்குவரத்து தடவழியாகும்.[1] [2]இந்த வெளி வட்டச் சாலை மூலம் சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகள் இணைக்கப்படுகின்றன.

Thumb
சென்னையின் உள் வட்டச் சாலை, புறவழிச் சாலை,மற்றும் வெளிவட்டச் சாலைகளைக் காட்டும் வரைபடம்.

இந்த வெளி வட்டச் சாலையானது சென்னையின் வெளிப்புறப் பகுதிகளானவண்டலூர், தாம்பரம், பூவிருந்தவல்லி, நெமிலிச்சேரி, படப்பை, மீஞ்சூர் பகுதிகளை இணைக்கிறது. இச்சாலை ஏறத்தாழ 62.3 கி.மீ. நீளம் கொண்டது.

இது தே.நெ 45ஐ வண்டலூரிலும், தே.நெ 4ஐ நாசரத்பேட்டையிலும், தே.நெ 205ஐ நெமிலிச்சேரி (திருநின்றவூர்), தே. நெ.5ஐ நல்லூரிலும் திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையை (டிபிபி சாலை) மீஞ்சூரிலும் இணைக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம், சாலை மற்றும் தொடர்வண்டி வழித்தடங்கள் அமைத்திட 72 மீ. அகலத்திற்கும் எதிர்காலத் தேவையாக மேலும் 50 மீ. அகலத்திற்கும் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டப்பணி

இத்திட்டப்பணிக்கு 1,081 கோடி ரூபாய் திட்டச்செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கட்டங்களில் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ள இச்சாலைகளின் முதற்கட்டப் பணிகளை ஆகத்து 29, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கால்கோளிட்டுத் துவங்கி வைத்தார். முதற்கட்டத்தில் வண்டலூரிலிருந்து, நெமிலிச்சேரி வரை 30 கி.மீ. தொலைவிற்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை 2014 முதல் போக்குவரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது.

இரண்டாம் கட்டப் பணி

இரண்டாம் கட்டப்பணி நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலைப் பணிகள் 2020 இறுதியில் முடிக்கப்பட்டது. இச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 8 பிப்ரவரி 2021 அன்று திறந்து வைத்தார்.[3][4]

மாநகரப் பேருந்துகள்

வெளி வட்டச் சாலையில் 10 பிப்ரவரி 2021 முதல் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இரண்டு வழித்தடங்களில் இயங்குகின்றன.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.