Remove ads

வெற்றிமாறன் (Vetrimaaran) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக அதிக பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

விரைவான உண்மைகள் வெற்றிமாறன், இயற் பெயர் ...
வெற்றிமாறன்

இயற் பெயர் வெற்றிமாறன்
பிறப்பு 4 செப்டம்பர் 1975 (1975-09-04) (அகவை 49) [1][2]
கடலூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர்
நடிப்புக் காலம் 2007 – நடப்பு
துணைவர் ஆர்த்தி
பிள்ளைகள் 2
பெற்றோர் வி. சித்ரவேல், மேகலா சித்ரவேல்
உறவினர் இரெ. இளம்வழுதி (தாய்வழித் தாத்தா)
குறிப்பிடத்தக்க படங்கள் ஆடுகளம்
விசாரணை
வடசென்னை
அசுரன்
பாவக் கதைகள்
விடுதலை பகுதி 1
மூடு

தொடக்க வாழ்க்கை

கடலூர் நகரில் 4 செப்டம்பர் 1975 அன்று பிறந்தார் வெற்றிமாறன். இவர் தாயார் மேகலா சித்ரவேல் ஒரு புதின எழுத்தாளர்.[3][4][5] தந்தை வி. சித்ரவேல் ஒரு கால்நடை மருத்துவர். வெற்றிமாறனுக்கு ஒரு தமக்கை உள்ளார்.[6]

கல்வி

இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தறுவாயில்,தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் இவருக்கு வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ச. ராஜநாயகம் கொடுத்திருக்கிறார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார். அவரே வெற்றிமாறனை இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். பாலுமகேந்திராவிடம், கதை நேரம் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகக் கற்றார்.

Remove ads

சொந்த வாழ்க்கை

வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. கல்லூரி காலத்து காதல். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகளும் கதிரவன் என்ற மகனும் உள்ளனர்.[7][8]

இயக்கிய திரைப்படங்கள்

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டு திரைப்படம் இயக்குநர் தயாரிப்பாளர் விருதுகள்
2007 பொல்லாதவன் Green tickY Red XN விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
2011 ஆடுகளம் (திரைப்படம்) Green tickY Red XN தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குநர்களின் பட்டியல்
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
1 ஆவது தென்னிந்திய தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
2013 உதயம் என்.எச்4 (திரைப்படம்) Red XN Green tickY
நான் ராஜாவாகப் போகிறேன் Red XN Green tickY வசனகர்த்தா
2014 பொறியாளன் (திரைப்படம்) Red XN Green tickY
2015 காக்கா முட்டை (திரைப்படம்) Red XN Green tickY சிறந்த குழந்தைத் திரைப்படத்திற்கான தேசிய விருது
சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
எடிசன் விருதுகள்
2016 விசாரணை (திரைப்படம்) Green tickY Green tickY சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
ஆனந்த விகடன் - சிறந்த இயக்குநர்
கொடி (திரைப்படம்) Red XN Green tickY
2017 லென்ஸ் Red XN Green tickY
2018 அண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்) Red XN Green tickY
வட சென்னை (திரைப்படம்) Green tickY Green tickY ஆனந்த விகடன் திரைப்பட விருதுகள் - சிறந்த
2019 அசுரன் Green tickY Red XN அறிவிப்பு
2023 விடுதலை பகுதி 1 Green tickY Red XN
மூடு
Remove ads

திரைக்கதை பங்களிப்புகள்

விருதுகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads