உடலில் உள்ள அணுவின் வகை. From Wikipedia, the free encyclopedia
வெண்குருதியணுக்கள் அல்லது வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் அல்லது இரத்த வெள்ளையணுக்கள் அல்லது லியூக்கோசைற் (white blood cells or leucocytes) குருதியில் காணப்படும் ஒரு வகை உயிரணுக்களாகும். இவை எலும்பு மச்சைகளில் தயாரிக்கப்பட்டு குருதியினால் உடல் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. தொற்றுநோய்களையும், வேறு வெளிப் பொருட்களை எதிர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் குருதியின் கூறாக அமையும். வெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவ்வெண்குருதியணுக்கள் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலும், நிணநீர்த்தொகுதியிலும் பரந்து உடல் முழுவதும் காணப்படும்.
உடலிலுள்ள நோய் நிலைமையினை அடையாளம் காண வெண்குருதியணுக்களின் எண்ணிக்கை முக்கிய குறிகாட்டியாக இருப்பதனால், மொத்தக் குருதி கணக்கீடுகளில் வெமண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை முக்கியமானதாகும்.குருதிப் பரிசோதனையில் ஒருவரது வெண்குருதிக் கனங்களின் எண்ணிக்கை 4 × 109/L முதல் 1.1 × 1010/L ஆக இருக்கும். அமெரிக்காவில் இது 4,000 முதல் 11,000 வெண்குருதிக் கலங்கள் ஒரு மிக்ரொ லீட்டருக்கு என அளவிடப்படும்.[1] இது ஆரோக்கியமான ஒருவரது மொத்தக் குருதியில் கனவளவுப்படி ஏறக்குறைய 1% ஆக இருக்கும்[2]
வெண்குருதியணுக்களில் ஐந்து வேறுபட்ட வகையான உயிரணுக்கள் உள்ளன[3]. ஆனால் அவை யாவும் என்பு மச்சையில் இருக்கும் குருதியணுமூலக் குருத்தணு (hematopoietic stem cell) எனப்படும் ஒரு குறிப்பிட்ட உயிரணுக்களில் இருந்தே உருவாகின்றன.
வகை | நுண்ணோக்கித் தோற்றம் | வரைபடம் | அண்ணளவான % வயது வந்தவர்களில்[4] See also: Blood values | விட்டம் (μm)[4] | முக்கியமான இலக்கு[5] | கரு[5] | மணியுரு[5] | வாழ்வுக்காலம்[4] |
---|---|---|---|---|---|---|---|---|
நடுவமைநாடிகள் | 54–62%[6] | 10–12 | பல்மடல் | நுண்ணிய, மங்கலான இளஞ்சிவப்பு நிறம் (H&E stain) | 6 மணித்தியாலம்-சில நாட்கள் ( [[மண்ணீரல்|மண்ணீரலிலும், வேறு இழையங்களிலும் சில நாட்கள்) | |||
இயோசினேற்பிகள் | 1–6% | 10–12 |
|
இருமடல் | முழுமையான இளஞ்சிவப்பு - செம்மஞ்சள் நிறம் (H&E Stain) | 8–12நாட்கள் (4-5 மணித்தியாலங்களுக்கு சுற்றியோடும்) | ||
காரச்சாயமேற்பிகள் | <1% | 12–15 |
|
இருமடல் அல்லது மும்மடல் | பெரிய நீலநிறம் | சில மணித்தியாலங்கள் முதல் சில நாட்கள் வரை | ||
நிணநீர் செல்கள் | 25–33% | 7–8 |
|
அசாதாரணமான ஆழமான நிறப்படுத்தலுக்குட்படும் | இயற்கையாக கொல்லும் உயிரணுக்களும், Cytotoxic (CD8+) T உயிரணுக்கள் | கிழமைகள் - ஆண்டுகள் | ||
ஒற்றை உயிரணுக்கள் | 2–10% | 14–17 | ஒற்றை உயிரணுக்கள் குருதியிலிருந்து வேறு இழையங்களுக்குச் சென்று அங்கே கலவேறுபாட்டுக்கு உட்பட்டு பெருவிழுங்கி அல்லது கிளையி உயிரணுக்களாக மாற்றமடையும். | சிறுநீரகத்தின் தோற்றத்தை ஒத்த அமைப்பு | எதுவுமில்லை | சில மணித்தியாலங்கள் தொடக்கம், சில நாட்கள் வரை | ||
பெருவிழுங்கிகள் | 21 (மனிதர்)[7] | தின்குழியமை உயிரணுச் சிதைவுகள் அல்லது இறந்த உயிரணுக்கள், நோய்க்காரணிகள் போன்றவற்றை விழுங்கி சமிபாடு அடையச் செய்வதுடன், நோய்க்காரணிகளை எதிர்க்கும் நிணநீர் செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களைத் தூண்டுவதிலும் பங்கெடுக்கும். | செயல்திறனுடன்: நாட்கள் முதிராத நிலையில்: மாதங்கள் - ஆண்டுகள் | |||||
கிளையி உயிரணுக்கள் | பிறபொருளெதிரியாக்கி - முன்வைக்கும் உயிரணுவாக (antigen-presenting cell = APC) இதன் முக்கியமான தொழில் டி நிணநீர்க்கலங்களை தொழிற்படச் செய்தலாகும் | பெருவிழுங்கி போன்றது | ||||||
நடுவமை நாடிகள் வெண்குருதி கலங்களிலே அதிக அளவில் காணப்படும் உயிரணுக்கள் ஆகும். இது சுமார்
60-70% அளவில் காணப்படும்.[2] இவை தொழிற்பாட்டு அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படும்; அவை: கொல்லும் நடுவமை நாடி, சிறைப்படுத்தும் நடுவமை நாடி. இவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்கு எதிராக தொழிற்பட்டு பாதுகாக்கின்றன.இவையே நுண்ணங்கித் தொற்று ஏற்படும் போதுமுதலில் அதற்கு எதிராக தொழிற்படுவது.
இயோசிநாடிகள் மொத்த வெண்குருதியணுக்களில் 2-4% காணப்படும். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் , பருவத்துக்கு பருவம் மற்றும் மாதவிடாய் காலங்களில் மாறுபடும். ஒவ்வாமை, ஒட்டுண்ணித்தொற்று, கொல்லஜன் நோய் மற்றும் மைய நரம்புத்தொகுதி பாதிப்புகளின் போது எண்ணிக்கையில் அதிகரிக்கும். இவற்றின் அளவு குருதில் குறைவாகும். ஆனால் சுவாசப்பை, உணவுச் சமிபாட்டுத் தொகுதி, சிறுநீர் சிறுகுழாய் என்பவற்றில் அதிகளவு காணப்படும்..[8]
கார நாடிகள் ஒவ்வாமை, பிறபொருட்கள் உள்ளெடுக்கப்படுதல் என்பவற்றுக்கு எதிராகச் செயற்படுவதில் முக்கியமானது. இதன் விளைவாக பெறப்படும் எப்பாரின் குருதிக் குழாய்களில் குருதி உறைவடைதலைத் தடுக்கும் வெண்கருதியணுக்களில் மிகக் கூறைவாகக் காணப்படுவது: அதாவது 0.5% இலும் குறைவானது.[9]
நிணநீர்க் குழியங்கள் குருதியின் நிணநீர்த் தொகுதியில் பொதுவானவையாகக் காணப்படும். நிறமூட்டப்படும் போது நன்கு நிறமூட்டப்படும். மையத்தில் பாரிய கருவையும் ஒப்பீட்டு அளவில் சிறிய குழியவுருவையும் கொண்டிருக்கும்.
ஒற்றைக் குழியங்கள் , வெண்குருதியணுக்களில் காணப்படும் மிகப்பெரிய கலங்களாகும். இவை நடுநிலை நாடிகளில் வெற்றிடத் தூய்தாக்கி போல் தொழிற்டும். இவை அதிக காலம் வாழும்.
வெண்குருதியணு சார்ந்து இரண்டு கோளாறுகள் பொதுவாகக் கூறப்படும், அவை: வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பது (கல அதிகரிப்புக்கோளாறு) மற்றையது கலங்களின் எண்ணிக்கை குறைவுபடல்( லியுக்கொபீனியா)[10] வெண்குருதியணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுவாக (தொற்றுகளுக்கெதிராகப் போராட) ஆரோக்கிய நிலைமைதான் ஆயினும் அபரிமிதமாகப் பெருக்கமுறுதல் பாதிப்பானது.
மற்றொரு வகையில் வெண்குருதியணுக்கள் சார்ந்த நோய் குறித்து ஆராயும் போது அவற்றின் எண்ணிக்கை சாதாரணமாகக் காணப்பட்ட போதிலும் அவற்றின் செயற்பாடு அசாதரணமாயிருப்பதை குறிப்பது.
வெண் குருதியணு குறைவுபடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய வெண்குருதியணு குறைவு பொதுவாக நடுவமைநாடிகள் குறைவுபடுவதனாலேயே நிகழ்கின்றது. இதனால் இத்தகைய குறைபாடு நியுட்ரோபீனியா என அழைக்கப்படுகின்றது.மிகக் குறைவாக , நிணநீர்ச் செல்களின் குறைவுபடல் ஏற்படலாம். இதன் போது இக்குறைபாடு லிம்போசைற்றொபீனியா என அழைக்கப்படும்.[10]
நியுட்ரோபீனியா பெற்றுக் கொண்ட நோயாக அல்ல்து பரம்பரை வழியாக கடத்தப்படும் நோயாக காணப்படலாம்.[11] நடுவமைநாடிகளின் அளவு குறைவு படுதல் அவற்றின் உற்பத்தி குறைவுபடுவதனால் அல்லது அவை குருதியிலிருந்து அகற்றப்படுவதனால் நிகழலாம் என ஆய்வுகூடப் பரிசோதனைகள் காட்டுகின்றன.[10] பின்வரும் சில காரணங்கள் ஏதுவாக அமையும்:
நியுட்ரோபீனியாவின் மிகப்பெரிய பாதிப்பு தொற்றுகள் ஏற்படுவதற்கன வாய்ப்புகளாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.