தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
வீ. ரவிச்சந்திரன் (Veeraswamy Ravichandran) என்று அறியப்பட்ட தனிப்பட்ட முறையில் ரவிச்சந்திரன் என்ற இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசை இயக்குநர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் கன்னடத் திரையுலகில் சிறந்த நிகழ்ச்சி நாயகன் என அழைக்கப்படும் இவர் தனது பன்முக பணிகளில் இவரது தொடர்பான படங்களில் பணியாற்றுபவர் ஆவார்.[1]
வீ. ரவிச்சந்திரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | வீராசுவாமி ரவிச்சந்திரன் 30 மே 1961 திருநெல்வேலி, சென்னை மாநிலம், (தற்போது தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | கிரேஸி ஸ்டார் |
பணி | நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளார், தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவு இயக்குநர், கலை இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1981 முதல் தற்போது வரை |
தொலைக்காட்சி | நடிகைகள் பிரியாமணி மற்றும் மயூரியுடன் கலர் கன்னட தொலைக்காட்சியின் ஒரு நடன நிகழ்ச்சிக்கு நடுவர் |
பெற்றோர் | என். வீராசுவாமி (தந்தை) பட்டம்மாள் (தாயார்) |
வாழ்க்கைத் துணை | சுமதி (தி. 1986) |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
vravichandran |
குறிப்பிடத்தக்க திரைப்படத் தயாரிப்பாளர் என். வீராசுவாமியின், மகன் ரவிச்சந்திரன் கதேமா கல்லாரு என்ற படத்தில் ஒரு எதிர்மறை வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர்,[2][3][4] சக்கரவியூஹா (1983) என்ற திரைப்படத்தில் தொடர்ந்து பங்களித்த பிறகு பல நடிகர்களுடன் பல துணைக் கதாபாத்திரங்களில் நடித்த, இவர் இயக்குநராக அறிமுகமான பிரேமலோகா (1987) என்ற படத்தில் நடித்தார், இது கன்னடத் திரையுலகில் மிக அதிகமாக வசூலித்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும்.[2] ஒரு தயாரிப்பாளராக, அவர் ஸ்ரீ ஈஸ்வரி புரொடக்சன்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை தொடர்கிறார்.[3][4] கன்னடத் திரையுலகில் கிரேஸி ஸ்டார் என்று அவர் ரொம்பவும் புகழ்பெற்றவர்.[5]
ரவிச்சந்திரன் இந்தியாவில் ,சென்னை மாகாணத்தில் (இப்போது தமிழ்நாடு) திருநெல்வேலியில் பிறந்தார். அவரது பெற்றோர் என்.வீராசுவாமி மற்றும் பட்டம்மாள். அவரது தந்தை என்.வீராசுவாமி தென்னிந்திய திரைப்படத் துறையில் பணியாற்றும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர் ஆவார் மற்றும் இவரது குடும்பத்தினர் தமிழ் பேசும் முதலியார் சமூகமாகும். இரவிச்சந்திரன் சுமதி என்பவரை, 1986 பிப்ரவரி14 காதலர் தினத்தில் திருமணம் செய்தார்.[6] இத்தம்பதியருக்கு கீதாஞ்சலி என்ற ஒரு மகள் மற்றும் மனோரஞ்சன் மற்றும் விக்ரம் இரண்டு மகன்கள் ஆகியோரும் உள்ளனர். மனோரஞ்சன் சாஹெபா (2017) படத்தில் அறிமுகமானார்.[7][8]
ரவிச்சந்திரன் 1980களின் ஆரம்பத்தில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். கன்னடத் தொழிலின் நன்கு அறியப்பட்ட நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ராஜ் குமார், விஷ்ணுவர்தன், அம்பரிஷ், பிரபாகர் மற்றும் ராஜேஷ் ஆகியோருடனும் இவரது தந்தையின் தயாரிப்பிலும் நடித்தார். இவரது முதல் படம் கதேமா கல்லாரு (1982) (வில்லனாக இருந்தார்). இவர், ஜூஹி சாவ்லாவுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பிரேமலோகா என்பது ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். பிரேமலோகா மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்தது, மேலும் திரையுலகில் ரவிச்சந்திரன் திரையுலகில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். 80களின் பிற்பகுதியில் 90களின் மத்தியில் இவர் நடிப்பின் உச்சத்தில் இருந்தார்.[9] பிறகு பிரேமலோகாவிற்குப் பின்னர் ரவிச்சந்திரன் பல வெற்றிப்படங்களில் நடித்தார், மிகக் குறிப்பாக ரணதீரா (சுபாஷ் கய்யின் படமான ஹீரோ என்ற படத்தில் மறு ஆக்கம்), அஞ்சட காண்டு, யுத்தகாண்டு, மற்றும் மல்லா போன்றவை[10]. தென்னிந்திய நடிகை குஷ்பூவுடன் ரவிச்சந்திரன் சிறந்த ஜோடியாக அறியப்பட்டவர்.
Seamless Wikipedia browsing. On steroids.