பரமார மன்னன் From Wikipedia, the free encyclopedia
விந்தியவர்மன் (Vindhyavarman) (ஆட்சிக்காலம். 1175-1194 கிபி) மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமார வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசனாவான். முந்தைய ஆண்டுகளில் பரமாரப் பிரதேசத்தை தங்கள் சொந்த இராச்சியத்துடன் இணைத்த சோலாங்கியர்களை இவன் தோற்கடித்தான்.
விந்தியவர்மன் | |
---|---|
மால்வாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | அண். 1175 – அண். 1194 பொ.ச. |
முன்னையவர் | இரண்டாம் மூலராசா (சோலாங்கிப் பேரரசு) |
பின்னையவர் | சுபதவர்மன் |
அரசமரபு | பரமாரப் பேரரசு |
தந்தை | முதலாம் செயவர்மன் |
விந்தியவர்மனின் தந்தை முதலாம் செயயவர்மனின் ஆட்சியை தொடர்ந்து 20 ஆண்டு கால ஆட்சி நடைபெற்றது. பரமார சாம்ராச்சியம் முதலில் பல்லாலன் என்பவனால் கைப்பற்றப்பட்டது, பின்னர் சோலாங்கிய வம்சத்தின் (குசராத்தின் சாளுக்கியர்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள்) ஆட்சியின் கீழ் வந்தது. இவனது பேரன் முதலாம் அர்ச்சுனவர்மனின் கல்வெட்டின் படி, விந்தியவர்மன் குசராத்தின் மன்னனை வெற்றி பெற்றான். [1] விந்தியவர்மன் இவ்வாறு மாளவத்தில் பரமார இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டினான். வரலாற்றாசிரியர் ரமேஷ் சந்திர மஜும்தார் என்பவரின் கூற்றுப்படி, விந்தியவர்மன் சோலாங்கிய மன்னன் இரண்டாம் மூலராசாவின் ஆட்சியின் போது (ஆட்சிக்காலம் 1175 - 1178) இதை நிறைவேற்றினான். [2] இருப்பினும், ஏ. கே. மஜும்தார் மூலராஜாவின் ஆட்சியின் போது மால்வா சோலாங்கியரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்புகிறார். [3]
இவனது ஆட்சியின் போது, மால்வா போசளர்கள் , தேவகிரியின் யாதவர்களிடமிருந்து மீண்டும் மீண்டும் படையெடுப்புகளை எதிர்கொண்டது. [1] விந்தியவர்மன் கோகஸ்தானம் என்ற இடத்தில் சோலாங்கிய படைத்தளபதி குமாரன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான். [4] ஆனால் இவன் இறப்பதற்கு முன் மால்வாவில் பரமார சக்தியை மீட்டெடுக்க முடிந்தது. பொ.ச. 1192- இல் தலைநகர் தார் நகரின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றான். [5] [6] இவனுக்குப் பின் இவ்னது மகன் சுபதவர்மன் ஆட்சிக்கு வந்தான் . [1]
விந்தியவர்மனின் மந்திரி பில்ஹணன் "விஷ்ணுஸ்தோத்திர"த்தை இயற்றியதாகத் தெரிகிறது. பி. என். கௌதேக்கர் என்ற வரலாற்றாலாளிரின் கூற்றுப்படி பிலஹணன் 11ஆம் நூற்றாண்டில் வாந்த ஒரு கவிஞராவார். [7] சமண அறிஞரான ஆசாதரன், ஒரு மிலேச்ச மன்னனால் (கோரி முகமது என அடையாளம் காணப்பட்டவன்) கைப்பற்றிய தனது தாயகமான சபடலக்ச நாட்டிற்கு குடிபெயர்ந்த போது எழுதினார். விந்தியவர்மன் என்று அடையாளப்படுத்தப்படும் தார் மன்னனுக்கு விசயவர்மன் என்று பெயர் சூட்டுகிறார். [8] சமண அறிஞரான ஆச்சார்யர் மகாவீரருக்கும் பரமார அரசன் ஆதரவளித்தான். [9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.