பரமாரப் பேரரசு

From Wikipedia, the free encyclopedia

பரமாரப் பேரரசு

பரமாரப் பேரரசு (Paramara Dynasty) (ஆட்சிக் காலம்: 800-1327), மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பரமாரப் பேரரசை நிறுவினார்.[4] மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதி நகரம் ஆகும்.[5][6]

விரைவான உண்மைகள் மால்வாவின் பரமார இராச்சியம், தலைநகரம் ...
மால்வாவின் பரமார இராச்சியம்
பொ. ஊ. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டு–பொ. ஊ. 1305
Thumb
அரச இலச்சினை
Thumb
பொ. ஊ. அண்.1055இல் பேரரசர் போஜனின் கீழ் பரமாரர்களின் உச்சபட்ச பரப்பளவு.[2]
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
சமயம்
சைவ சமயம்[3] 
அரசாங்கம்முடியாட்சி
மகா ராஜாதி ராஜா (பேரரசர்) 
 பொ. ஊ. 948–972
சியாகன் (முதல்)
 பிந்தைய 13ஆம் நூற்றாண்டு – 24 நவம்பர் 1305
இரண்டாம் மகாலகதேவன் (கடைசி)
பிரதான் (பிரதம மந்திரி) 
 பொ. ஊ. 948–??
விஷ்ணு (முதல்)
 பொ. ஊ. 1275–1305
கோக தேவன் (கடைசி)
வரலாற்று சகாப்தம்பாரம்பரிய இந்தியா
 தொடக்கம்
பொ. ஊ. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டு
 முடிவு
பொ. ஊ. 1305
முந்தையது
பின்னையது
இராஷ்டிரகூடர்
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு
திரிபுரியின் காலச்சூரிகள்
கோரி அரசமரபு
தில்லி சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்இந்தியா
மூடு
Thumb
பரமாரப் பேரரசு, ஆசியா கண்டம், ஆண்டு 1200
Thumb
பரமாரப் பேரசர் போஜராஜனின் சிலை, போபால்
Thumb
போஜ சுவாமி கோயில், போஜ்பூர், மத்தியப் பிரதேசம்
Thumb
போஜ சுவாமி கோயில் லிங்கம், போஜ்பூர், மத்தியப் பிரதேசம்

தென்னிந்திய இராஷ்டிரகூட பேரரசின் மூன்றாம் கோவிந்தன் மாளவத்தை வென்றபின், அப்பகுதிகளுக்கு பரமார அரச குலத்தினரையே, தான் வென்ற பகுதிகளுக்கு ஆளுனர்களாக நியமித்தார். இப்பரமரர்களின் வழித்தோன்றல்களே பின்னர் பரமாரப் பேரரசை நிர்மாணித்தனர். [7] [8]

தற்கால மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களின் பெரும் பகுதிகளைக் கொண்டது பார்மரப் பேரரசு.

பரமார வம்ச பேரரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் போஜ மகாராஜா ஆவார்.

குறிப்பிட்டத்தக்க அரசர்கள்

  1. உபேந்திரா கிருஷ்ணராஜ பார்மர்[9]:23
  2. சியாகா [9]:23
  3. மூஞ்சா [9]:25
  4. போஜராஜன் (1010-1055) பார்மர் மன்னர்களில் மிகப்புகழ் பெற்றவர்.[9]:25
  5. யசோவர்மன்
  6. விந்தியவர்மன்
  7. மகாலக் தேவ் (அலாவுதீன் கில்சியால் தோற்றகடிப்பட்ட பார்மர் பேரரசின் கடைசி அரசன்)[9]:25

ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் Name, Reign Began ...
Name[10] Reign Began Reign Ended
1 உபேந்திர கிருஷ்ணராஜா பார்மர் 800 818
2 சியாகா 818 843
3 முதலாம் சியாகா 843 893
4 முதலாம் வாக்பதிராஜா 893 918
5 இரண்டாம் வைரி சிம்மன் 918 948
6 இரண்டாம் சியாகா 948 974
7 இரண்டாம் வாக்பதிராஜா 974 995
8 சிந்தூர்ராஜா 995 1010
9 முதலாம் போஜன் 1010 1055
10 முதலாம் ஜெயசிம்மன், காலச்சூரி அரசன் கர்ணன் என்பவனால போரில் கொல்லப்பட்டவர் 1055 1068-69
11 உதயாத்தித்தன் 1087
12 இலக்குமனதேவன் 1087 1094
13 நரவர்மதேவன் 1094 1134
14 யசோவர்மன் 1134 1142
15 முதலாம் ஜெயவர்மன் 1142 1143
பால்லாலா 1143 1150-51
குமாரபாலன்
16 விந்தியவர்மன் 1160 1193
17 சுபத்தவர்மன் 1193 1210
18 முதலாம் அர்ஜுனவர்மன் - குஜராத்தின் சோலாங்கி மற்றும் தேவகிரி யாதவப் பேரரசுகளை வென்று பார்மர் பேரரசு இழந்த பெருமையை மீட்டான். 1210 1218
19 தேவபாலன், மாளவம் 1218 1239
20 ஜெய்டுகி தேவன் 1239 1256
21 இரண்டாம் ஜெயவர்மன் 1256 1269
22 இரண்டாம் ஜெயசிம்மன் 1269 1274
23 இரண்டாம் அர்ஜுனவர்மன் 1274 1283
24 இரண்டாம் போஜன், மாளவம் 1283  ?
25 மகாகாலதேவன் - தில்லி சுல்தானால் 1305இல் தோற்கடிப்பட்டான். இவன் ஆண்ட மால்வா பகுதி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. 1327
மூடு

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.