Remove ads
ஓர் இயங்கு தள தொடர் From Wikipedia, the free encyclopedia
விண்டோஸ் (Windows) அல்லது விண்டோசு என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி வரைகலைச் சூழல் இயங்குதளமாகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் 1985 நவம்பரில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.[1] மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.[2] இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது விண்டோஸ் 8 ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (செர்வர்) பதிப்பானது விண்டோஸ் செர்வர் 2012 ஆகும்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் | |
விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் கார்பரேஷன் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
மைக்ரோசாப்ட் டாஸ் / 9x-அடித்தளங்கள், விண்டோசு சிஈ, விண்டோசு என்டி |
மூலநிரல் வடிவம் | மூடிய மூலம் |
கருனி வகை | கலப்பின கருவகம் |
அனுமதி | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
தற்போதைய நிலை | பொதுவில் பகிரப்படுகிறது |
வலைத்தளம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
விண்டோசின் சமீபத்திய பதிப்பு விண்டோசு 11 ஆகும். விண்டோசு 10 பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
ஸ் 10]]
விண்டோஸின் நுகர்வோர் பதிப்புகள் முதலில் ஒரு பயனர் கணினியை எளிதாக இணைய வசதி இல்லாமல் பயன்பாடுமாறு வடிவமைக்கப்பட்டதாகும், மற்றும் ஆரம்பத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.அது முதலில் 1990 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது போது இணைய பயன்பாடு குறைவாகவே இருந்தது எனவே இணைய பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டவில்லை இருப்பினும் விண்டோஸ் அதனை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை வடிவமைத்தது.இன்றும் தொடர்ச்சியன பாதுக்கப்பு அம்சங்களை வெளியிடுகிறது.தற்போது 128 பிட் மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
ஜனவரி 6, 2005 அன்று,அதற்கு மைக்ரோசாப்ட் முன்பு வெளியிட்ட இராட்சத எதிர்-ஸ்பைவேரின் மேம்பட்ட மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா பதிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 14, 2006 அன்று, மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா2 வெளியீட்டின் பின் விண்டோஸ் பாதுகாப்பானாக பெயர் மாற்றப்பட்டது.வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் மற்றும் பிற தேவையற்ற மென்பொருட்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருள். மைக்ரோசாப்ட் விண்டோஸின் உண்மையான பிரதிகள் கொண்ட விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் சர்வர் 2003-ன் பயனர் சுதந்திரமாக மைக்ரோசாப்ட் வலை தளத்தில் இருந்து அதன் நிரல் பதிவிறக்கலாம், மற்றும் Windows Vista மற்றும் 7 விண்டோஸ் 8, உடன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன மற்றும் மைக்ரோசாப்ட் அடிப்படை பாதுகாப்பு மற்றும் விண்டோஸ் பாதுகாப்பான், விண்டோஸ் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பகுதிகளாக இணைக்கப்பட்டன. அதன் அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுகம் மைக்ரோசாப்ட் பாதுகாப்பு அடிப்படை தேவைகளை(Microsoft Security Essentials) அடிப்படையாக கொண்டது. இது இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.மைக்ரோசாப்ட் பாதுகாப்பால் வழங்கப்படும் மற்ற இரண்டு இலவச பாதுகாப்பு பொருட்கள் உள்ளன ஒன்று விண்டோஸ் தீங்கிழைக்கும் மென்பொருள் நீக்கம் கருவி மற்றொரு வைரஸ் தீர்வு கருவி.
விண்டோஸ் எண்டி, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி போன்ற இயங்குதளங்களில் இருக்கின்ற கண்டறியப்பட்ட பிழைகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக மைக்ரோசாப்ட் காலத்திற்குக்காலம் நன்குசோதிக்கப்பட்ட பின்னர் சேவைப்பொதிகளை வெளிவிடும். விண்டோஸ் எண்டியில் சேவைப்பொதியினை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகிடையாது இவ்வசதி விண்டோஸ் 2000 உம் அதற்கு மேற்பட்ட விண்டோஸ் எக்ஸிபி இயங்குதளத்தில் அதற்கு மேம்பட்ட விண்டோஸ் எண்டி சார் இயங்குதளத்திலேயே உள்ளது.
டிவைஸ் டிரைவர்ஸ் என்கின்ற வன்பொருளை (ஹாட்வெயார்) ஐ இயங்கவைக்கும் மென்பொருளானது ஆரம்பத்தில் விண்டோஸ் இயங்குதளத்துடன் வந்தது. அவ்வாறில்லாதவற்றை ஏனையவை அவற்றிற்கான இறுவட்டுடன் வரும் மென்பொருளைப் பாவித்தே இயக்கவைக்கமுடியும். இவை 32 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் 64 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் வருகின்றன. ஓர் வலையமைப்பில் எடுத்துக்காட்டாக 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள அச்சியந்திரத்தை பகிரவேண்டும் என்றால் முதலில் 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் 64பிட் டிவைஸ் டிரைவர்களை நிறுவி பின்னர் அதற்கு 32பிட் டிவைஸ் டிரைவரையும் மேலதிகமாகத் தேவையென்றால் நிறுவவேண்டும் (வலையமைப்பில் உள்ள 32பிட் இயங்குதளத்தில் உள்ள ஏனைய கணினிகள் பாவிப்பதற்காக). 64 பிட் இயங்குதளத்தில் அநேகமான வன்பொருட்களுக்கு இன்னமும் சரியானமுறையில் டிவைஸ் டிரைவர்கள் கிடைக்காது. 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு வசதி சிலரிடம் இருப்பினும் 32பிட் இயங்குதளத்தைப் பாவிப்பதற்குக் காரணம் ஆகின்றது.
காலப்போக்கில் பெரும்பாலும் பெரிய வலையமைப்புக்களில் நிறுவல்களைச் செய்யும் போது இது ஓர் நேரத்தை விரயம் செய்யும் செயலாக அமைந்ததால் டிவைஸ் டிரைவர்களை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகள் ஆய்ந்தறியப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்தமுறையானது http://driverpacks.net/DriverPacks/ பரணிடப்பட்டது 2007-05-02 at the வந்தவழி இயந்திரம் ஊடாகக் கிடைக்கின்றது. இவை தற்சமயம் 32பிட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்குதளத்திற்கு இம்முறைகளைக் கையாளலாம். இவ்வாறான நிறுவல்கள் மூலம் SATA வன்வடினைக் (ஹாட்டிஸ்க்) ஐக் கண்டுபிடிக்கச் சிக்கலான கணினிகள் மூலம் (இவ்வாறான கணினிகள் விண்டோஸ் நிறுவலை ஆரம்பிக்கும் முன்னர் நெகிழ்வட்டினூடாக டிவைஸ் டிரைவர்கள் வழங்கியே நிறுவல் ஆரம்பிக்கப்படும்). நிறுவல்கள் இலகுவாக மேற்கொள்ளமுடிகின்றது.
மைக்ரோசாப்டின் போட்டி மென்பொருட்களை பயன்படுத்தி விண்டோஸ் இல்லாமல் சில விண்டோஸ் பயன்பாடுகளை செய்ய அனுமதிக்கிறது.
டார்வைன்-OS X மற்றும் டார்வினுக்கன வைனின் ஒரு வகை. QEMU மூலம் இயங்கும் வைன் ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.