From Wikipedia, the free encyclopedia
விஜயபாஸ்கர் (Vijaya Bhaskar, கன்னடம்: ವಿಜಯಭಾಸ್ಕರ್; 1924–2002)[1] தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, கொங்கணி உட்பட்ட பன்மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
விஜய பாஸ்கர் Vijaya Bhaskar | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1924 பெங்களூர், மைசூர் அரசு, இந்தியா |
இறப்பு | 3 மார்ச்சு 2002 (அகவை 77–78) பெங்களூர், கருநாடகம் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசைக்கலைஞர் |
இசைத்துறையில் | 1953–1986 |
விஜயபாஸ்கர் வயலின், வீணை, பியானோ ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 50களின் ஆரம்பத்தில் மும்பாய் சென்று மதன்மோகன், நவுசாத்ஆகியோருக்கு இசை குறியீடுகள் எழுதிப் பணியாற்றினார். அவர்களுடைய பல பாடல்களுக்கு இவர் பியானோ இசை வாசித்துள்ளார். பி ஆர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரைக் கன்னடத் திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு எடுத்துக் கொடுத்தார். 1953 இல் "ஸ்ரீ ராம பூஜா" திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்தித் திரைப்படங்களை பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன.
இயக்குநர் புட்டண்ணா கனகலுடன் இணைந்து நிறைய படங்களுக்கு இசையமைத்தார். "நகரபாவு" (தமிழில் ராஜநாகம்) பெரும் வெற்றி பெற்றது. நகரபாவு வெற்றிக்கு பிறகு சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி மூலம் தமிழுக்கு வந்தார். ஸ்ரீதர், எஸ். பி. முத்துராமன், கே. பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைத்து தமிழகத்திலும் பிரபலமானார். ஏழு முறை சிறந்த கன்னட இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.