பனிக்கடல் யானை (walrus) கடல் பாலூட்டிகளில், துடுப்புகாலிகளின் இனத்தை சேர்ந்தது.[2] மூன்று துடுப்புகாலி இனங்களில் பனிக்கடல் யானை மட்டுமே பெரியதும், தந்தம் போன்ற நீண்ட பற்களைக் கொண்டது. குளிரும் பனிக்கட்டிகளும் நிறைந்த வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வட துருவப் பகுதிகளில் காணப்படுகிறது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள விலங்கினங்களில் ஒன்றாக உள்ளது.
பனிக்கடல் யானை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | Odobenidae Allen, 1880 |
பேரினம்: | Odobenus Mathurin Jacques Brisson 1762 |
இனம்: | O. rosmarus |
இருசொற் பெயரீடு | |
Odobenus rosmarus லின்னேயஸ், 1758) | |
துணை இனங்கள் | |
O. rosmarus rosmarus | |
பனிக்கடல் யானைகளின் வாழ்விடங்கள் |
உருவ அமைப்பு
கடல்நாய்கள் போன்று பனிக்கடல் யானைகளுக்கு முகத்தில் உட்பொதிந்த காதுகள் உண்டு. பின்னங்கால்களால் நன்கு நீந்தும் ஆற்றல் கொண்டது. மேலும் துடுப்புகள் போன்ற கால்களால் தரையிலும் தவழ்ந்து செல்லும். இதன் தோல் அரை அடி தடிமன் கொண்டதால், கடும் குளிர் கொண்ட பனிக் கடல்களில் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது.
தந்தப்பற்கள்
இதன் நீண்ட தந்தம் போன்ற பற்கள் எதிரிகளை துரத்தி அடிப்பதற்கும், பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் இறங்கவும், கடலிருந்து பனிக்கட்டிகளின் மேல் ஏறுவதற்கும் பயன்படுகிறது. பனிக்கடல் யானைகளின் பற்கள் 15 ஆண்டுகள் வரை வளரக்கூடியது. ஆண் பனிக்கடல் யானைகளின் பற்கள் 40 அங் (102 cm) நீளமும்; பெண் பனிக்கடல் யானைகளின் பற்கள் 30 அங் (76 cm) நீளமும் கொண்டது. நீண்ட தந்தம் போன்ற பற்களால் பனிக்கடல் யானை, பனிக்கரடி மற்றும் திமிலங்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கடல்நாய் போன்ற துடுப்புகாலிகளை நீண்ட பற்களால் கிழித்துக் கொன்று எளிதாக உண்கிறது. பனிக்கடல் யானை நீண்ட பற்கள் கடல் பனிக்கட்டிகளை துளையிட்டு கடலடியிலிருந்து மேலே வருவதற்கும், பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் செல்வதற்கும் பயன்படுகிறது.[3][4]நீண்ட வலுவுள்ள தந்தப் பற்களைக் கொண்ட ஆண் பனிக்கடல் யானை, ஒரு பனிக்கடல் யானை கூட்டத்தின் தலைவனாக செயல்படுகிறது.
கடல் சிங்கத்தை விட பனிக்கடல் யானை பெரியவை. நன்கு வளர்ந்த பனிக்கடல் யானை 3,000 பவுண்டு எடை கொண்டதாக உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் பனிக்கடல் யானைகள் எடை குறைவாக காணப்படுகிறது.
சிறப்புகள்
உடல் வெப்பத்திற்கு ஏற்ப தன் உடலின் நிறத்தை பழுப்பு அல்லது இளம் சிவப்பு நிறமாக மாற்றிக் கொள்ளும் திறன் பனிக்கடல் யானைகளுக்கு உண்டு.
பனிக்கடல் யானைகளின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப்பைகள் இருப்பதால், கடல் நீரில் செங்குத்தாக தூங்கும் ஆற்றல் கொண்டது.
ஆண் பனிக்கடல் யானைகளின் பாலூறுப்பு 63 செண்டி மீட்டர் நீளம் கொண்டது. நீர், நிலத்தில் வாழும் பாலூட்டிகளை விட அதிக நீளமுள்ள பாலுறுப்பு பனிக்கடல் யானைகளுக்கு உள்ளது. [5] கடலின் மேற்பரப்பிலிருந்து 50 முதல் 75 அடி ஆழத்தில் இருக்கும் பனிக்கடல் யானைகள் கடற்கரையிலிருந்து 1 கிலோ மீட்டருக்கும் குறைவான பகுதியிலேயே பாதுகாப்பான இடத்தில் வசிக்கின்றன. கடலில் மட்டுமன்றி, மணல்பரப்பு மற்றும் கடல்தரை திட்டுகளிலும் வாழும் இயல்புடையன.
இவற்றின் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் உருளை உருளுவதுபோல இருக்கும்.
பயன்பாடுகள்
அடர்ந்த உரோமங்களுக்காகவும், உணவிற்காகவும் மனிதர்களால் பனிக்கடல் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதன் தோல் நஞ்சு தாக்கப்படாத தன்மையினைப் பெற்றிருப்பதால் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
படக்காட்சியகம்
- குட்டிகளுடன்
- தந்தம் போன்ற பற்களுக்காக வேட்டையாடப்பட்ட பனிக்கடல் யானைகள்
- கடற்கரையில் பனிக்கடல் யானைகள்
- கடலில் நீந்தும் பனிக்கடல் யானைகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.