இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
வட்டக்கச்சி (Vaddakkachchi) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும். கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் "வட்டக்கச்சி" பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வட்டக்கச்சி | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடமாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிசெ பிரிவு | கரைச்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 0044 |
இடக் குறியீடு | 021 |
இலங்கை அரசின் 1948 ஆண்டு சட்டக்கோவையின் 464 ஆம் அத்தியாயமான காணி அபிவிருத்திக் கட்டளை சட்டத்தின் 19(2)ஆம் பிரிவின் கீழ் வட்டக்கச்சி பிரதேசத்தின் நிலப்பரப்பு (மேட்டுநிலம், வயல்நிலம்) ஒழுங்குபடுத்தப்பட்டு 1952 ஆம் ஆண்டளவில் ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் மேட்டுநிலம், 3 ஏக்கர் வயல் நிலம் என நிலப்பகிர்வு செய்து அளிக்கப்பட்டதுடன் 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் படியும், 1981ஆம் ஆண்டின் 27 இலக்க திருத்தப்பட்டவாறான சட்டபிரிவின் மூலமாகவும் காணி பயன்பாடு அனுமதிப்பத்திரங்களும் (Permit), உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் மத்திய நகரமான கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைப்பது ஏ-9 நெடுஞ்சாலை. இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாகவும்,அமைப்பு ரீதியாகவும் இன் நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகர் கிளிநொச்சி ஆகும். இந்நகருக்கு கிழக்கே 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் வட்டக்கச்சி ஆகும். இது வடக்கே பத்துவீடு, கிழக்கே இராமநாதபுரம், தெற்கே இரனைமடு மேற்கே திருவையாறு போன்ற கிராமங்களை கொண்டுள்ளது.
இப்பிரதேசத்தின் தரைத்தோற்றமானது விவசாயம் (பயிர்ச்செய்கை, கால்நடை) ,கைத்தொழில், போக்குவரத்து, போன்றவற்றுக்கு ஏதுவான சமவெளியாக காணப்படுகின்றது.
இப்பிரதேசத்தின் அபிவிருத்தி,பொருளாதாரததை தீர்மானிக்கும் முக்கியமானதொரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது. இக்கிராமத்தின்மே ற்கே கனகராயன் ஆற்றின் கிளையாறு ஓடுகின்றது, மற்றும் தரைக்கீழ் நீர் வருடம் முழுவதும் கிடைக்கின்றது.
இங்கு நெற்செய்கைக்கு ஏற்ற களிமண் மற்றும் இருவாட்டிமண்ணும் பரவலாக காணப்படுகின்றது. இவை விவசாய செய்கைக்கு மிகவும் பங்களிக்கின்றன. இங்கு களிமண், இருவாட்டிமண். சேம்பாட்டுமண், கபிலநிறமண் மற்றும் மணல்மண் போன்றவற்றை காணக்கூடியதாக இருக்கும்.
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் வேளாண்மையாக இருந்தபோதிலும் அனைவருமே கல்விகற்பதில் ஆர்வமும், அறிவுத்தேடலும் உடையவர்களாவர். மாவட்ட ரீதியில் வெளிவரும் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கும் போது இப்பிரதேச மாணவர்களே அரச பொதுப்பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கல்வியில் மாவட்ட, மாகாண, தேசிய மட்ட ரீதியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டடுள்ளன. அத்தோடு உயர் பதவிகளிலும் இருக்கின்றனர்.
இங்குள்ள பாடசாலைகள்:
இங்குள்ள முன்பள்ளிகள்:
வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இங்கு இருபோக நெற்செய்கை (சிறுபோகம்,பெரும்போகம்) நடைபெறுகிறது. தெங்குப் பயிர்ச்செய்கையும் இங்கு முக்கியமானது. கால்நடை வளர்ப்பும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சிறுபோக நெற்செய்கை இலங்கையின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் என்று கூறப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து செய்யப்படும் நீர்ப்பாசனத்தின் மூலமும், பெரும்போக நெற்செய்கை மழையை நம்பியும் மேற்கொள்ளப்படுகின்றது. பருவமழை அற்ற காலங்களில் சிறு நீர்நிலைகள் மூலமும் நீரை பெற்று வேளாண்மை செய்யப்படுகின்றது.
இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர். அதன்பின் யுத்த முடிவுக்கு பின்னரான காலப்பதகுதிகளில் குறிப்பாக 2010, 2011 இல் மீண்டும் குடியேறியுள்ளனர். தற்பொழுது இந்து,கிறித்தவம்,இசுலாம் ஆகிய மதங்கள் காணப்படுகின்றன.
இங்கு அமைய பெற்றுள்ள வழிபாட்டுத்தலங்கள்
இந்து கோயில்கள்
தேவாலயங்கள்
பள்ளிவாசல்கள்
இங்கு திட்டமிட்ட குடியிருப்புக்களே காணப்படுகின்றன, இப்பிரதேசத்திலும் இதனைச்சூழவுள்ள பிரதேசத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் காணப்படுவதால் இப்பகுதியில் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர்.
இங்கு போக்குவரத்து வீதிகள் அதிகம் காணப்படுகின்றது, எனினும் பெரும்பாலான பகுதி சீர் அற்ற நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிளிெநொச்சியில் இருந்து வரும் பிரதானவீதி வட்டக்கச்சி ஊடாக வந்து வட்டக்கச்சி சந்தையடியில் இரண்டு பிரதானவீதியாக பிரிகின்றது, அதில் ஒன்று தர்மபுரத்திலும், மற்றயது புளியம்பொக்கணை சந்தியிலும் வந்து முல்லைவீதியில் சங்கமிக்கின்றது. மற்றும் கிராமத்தின் உள்ளே பல வீதிகள் காணப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.