Remove ads
From Wikipedia, the free encyclopedia
வசந்தம் வந்தாச்சு (Vasantham Vanthachu) 2007 தமிழ் காதல் திரைப்படம். இதை கே.விவேக பாரதி இயக்கியுள்ளார். இப்படத்தில் வெங்கட் பிரபு மற்றும் நந்திதா ஜெனிபர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் சண்முகசுந்தரம் (நடிகர்), வையாபுரி (நடிகர்), ராம்ஜி (நடிகர்), வரலட்சுமி, சபிதா ஆனந்த், வாசு விக்ரம் மற்றும் வேலு திகல் போன்றோரும் நடித்திருந்தனர். வேலு திகல் மற்றும் அம்பா உமாதேவி ஆகியோர் தயாரித்திருந்தனர் . இசையமைப்பு கவின் சாரதா மற்றும் ராய் சங்கர். செப்டம்பர் 2007இல் வெளியிடப்பட்டது.[1][2]
வசந்தம் வந்தாச்சு | |
---|---|
இயக்கம் | கே.விவேக பாரதி |
தயாரிப்பு | வேலு திகல் அம்பா உமாதேவி |
கதை | கே.விவேக பாரதி |
இசை | ஓவியன் |
நடிப்பு | வெங்கட் பிரபு நந்திதா ஜெனிபர் |
ஒளிப்பதிவு | டி. ஈ. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | வி.அணில் குமார் |
கலையகம் | அம்பா சினி கிரியேஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 14, 2007 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமரேசன் (வெங்கட் பிரபு) கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு பெண்களை கண்டாலே வெறுப்பு, எனவே திருமணத்தை தள்ளி போடுகிறார் . அவருடைய வயதான தந்தை (வேலு திகல்) கூடிய சீக்கிரமே இவருடைய திருமணத்தை நடத்திட விரும்புகிறார், ஆனால் குமரேசன் திடடவட்டமாக மறுத்துவிடுகிறார்., கல்லூரியின் விடுமுறை நாளில் நகரத்திலிருந்து காயத்திரி (நந்திதா ஜெனிபர்) அவருடைய தாத்தா செட்டியார் (சண்முகசுந்தரம் (நடிகர்)) மற்றும் பாட்டி மீனாட்சியை (வரலட்சுமி) சந்திக்க கிராமத்திற்கு வருகிறார். இவர்களுக்குள் முதலில் மோதல் எற்படுகிறது இதற்கிடையில் குமரேசனின் சகோதரன் ஒரு பணக்காரப் பெண்ணை ரகசியத் திருமணம் செய்து கொள்கிறார். இதை அவருடைய குடும்பம் வரவேற்கிறது. குமரேசனுக்கும் அவரது அண்னியாருக்கும் ஏற்படும் மோதலால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதற்கிடையில் குமரேசன் தனக்கு தாலி கட்டியதாக ஊரார் முன்னிலையில் காயத்திரி கூறுகிறார். காயத்திரி ஏன் அவ்வாறு பொய் கூறினார்? , குமரேசன் காயத்திரியை ஏற்றுக் கொண்டாரா?, என்பதை மீதிக்கதை சொல்கிறது.
நமிதா கபூர் (நடிகை) மற்றும் சந்தோஷி முதலில் பெண் பாத்திரங்were earlier considered for the female lead role, but they later opted out. Finally, the role was given to நந்திதா ஜெனிபர்.
இசையமைப்பு ஓவியன் 5 பாடல்கள் கொண்ட் இதன் ஒலித்தொகுப்பு 2007இல் வெளிவந்தது, எழுதியவர் யுகபாரதி, தேன்மொழி ஜி. கே. மற்றும் தொல்காப்பியன்.[3][4]
எண் | பாடல் | பாடியோர் | காலம் |
---|---|---|---|
1 | "கல்யாணம் " | வெங்கட் பிரபு | 3:33 |
2 | "நெஞ்சம்" | பவதாரிணி | 4:14 |
3 | "படி படி" | மஹதி (பாடகி) | 4:20 |
4 | "தோல் மேல" | ஹரிசரண், Shweta Prabhu | 4:15 |
5 | "வா மாமா" | ரோஷினி | 3:44 |
ஒரு விமர்சகர் இவ்வாறு எழுதினார்: "திடுக்கிடும் திரைக்கதை மற்றும் சுமாரான கதை மற்றும் நடிப்பு ஆகியவை உற்சாகம் தரவில்லை".
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.