Remove ads
From Wikipedia, the free encyclopedia
லெனோவா (ஆங்கிலம்:Lenovo Group Ltd.) என்பது சீனநாட்டில் தோன்றியப் பன்னாட்டு கணினித் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் சீனத்தலைநகரான பெய்ஜிங் நகரத்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வட கரொலைனா மாநிலத்தின் மோரிசுவில்லே நகரத்திலும் உள்ளது.[3] இந்நிறுவனம் தனி மேசைக் கணினிகள், கைக் கணினிகள், நுண்ணறிபேசிகள், நுட்பக்கணினிகள், வழங்கிகள், மின்னணுத்தரவுத் தேக்ககங்கள், தகவல் தொழிற்நுட்ப மேலாண்மை மென்பொருள்,நுண்ணறித் தொலைகாட்சிகள் ஆகியவற்றை வடிவமைத்து, வளர்த்து, உற்பத்திச் செய்து விற்கிறது. 2014 ஆம் ஆண்டு, லெனோவா நிறுவனமே, உலகின் பல நாடுகளில் அதிக அளவு தனி மேசைக் கணினிகளை விற்பதில் சாதனைப் புரிந்தது.[4]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு (1984 ) |
நிறுவனர்(கள்) | லியூ சுவான்ழி |
தலைமையகம் | அயிடியன் மாவட்டம், பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு மோரிசுவில்லே, வட கரொலைனா, ஐ. அ. |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | யாங் யுவான்இங் (குழுமத்தலைவர், முதன்மை செயல் அலுவலர்) |
தொழில்துறை | கணினி வன்பொருள் மின்னணுவியல் |
உற்பத்திகள் | நுண்ணறிபேசிகள், மேசைக் கணினிகள், வழங்கிகள், மடிக்கணினிகள், கைக் கணினிகள், வலையேடுகள், கணினியின் புறப்பாகங்கள், கணினி அச்சுப்பொறிகள், தொலைக்காட்சிகள், படிம வருடிகள், கணினித்தரவுத் தேக்ககங்கள் |
வருமானம் | US$ 46.296 billion (2015)[1] |
இயக்க வருமானம் | US$ 1.108 பில்லியன்(2015)[1] |
நிகர வருமானம் | US$ 837 மில்லியன்(2015)[1] |
மொத்தச் சொத்துகள் | US$ 27.081 பில்லியன்(2015)[1] |
மொத்த பங்குத்தொகை | US$ 4.016 பில்லியன் (2015)[1] |
பணியாளர் | 60,000 (2014)[சான்று தேவை] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | மோட்டோரோலா மோபைலிட்டி [2] |
இணையத்தளம் | www |
லெனோவா | |||||||
---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 联想集团有限公司 | ||||||
சீன எழுத்துமுறை | 聯想集團有限公司 | ||||||
சொல் விளக்கம் | லெனோவா குழுமம் (வரை) | ||||||
|
இந்நிறுவனம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது. இதன் முதன்மை அமைப்புகள், ஆய்வகங்கள் பெய்ஜிங்,மோரிசுவில்லே, சிங்கப்பூர் அமைந்து, நிறுவன இலக்குகளைச் செய்கின்றன. மேலும், சீன நகரங்களான சாங்காய், சென்சென், சியாமென், செங்டூ ஆகியவற்றிலும், யப்பானிலுள்ள யமடோவிலும் முக்கிய கட்டமைப்புகள் செயற்படுகின்றன.
இஎம்சி (EMC) கழகம், 1970 ஆம் ஆண்டு, இருவரால் (Richard Egan & Roger Marino Corporation) உருவாக்கப் பட்டது.[5] 1983 ஆம் ஆண்டிலிருந்து, இஎம்சி, பொதுநிறுவனமாக நியூயார்க் பங்குச் சந்தையில், ஐஓஎம்(IOM ) குறிபெற்று இருந்தது.[6] லெனோவோஇஎம்சி கூட்டு முயற்சி, முன்பு லோமேகா (formerly Iomega) என்று அழைக்கப்பட்டது. மேலும், இக்கூட்டுமுயற்சியை, லேனோவோ இஎம்சி² (lenovo EMC²) என்றும் அழைப்பர். இக்கூட்டுச்செயறபாடு வழியே, புற, கையடக்க, கணிய வலையக, எண்ணிமத் தேக்ககத் தீர்வுகளைத் (networked storage solutions) உருவாக்கி, 410 கோடி எண்ணிமத் தேக்கக இயக்கிகளையும், வட்டுகளையும்(digital storage drives and disks) விற்பனை செய்துள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.