லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு (Lutetium(III) nitrate) என்பது Lu(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு நிறமற்ற படிகங்களாகும்.[1] தண்ணீரில் இது கரையும். நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம்[2] படிக நீரேற்றுகளாகவும் உருவாகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
லியுதேத்தியம் முந்நைட்ரேட்டு, லியுதேத்தியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10099-67-9 Y
100641-16-5
ChemSpider 32749148
17340627
EC number 233-241-7
InChI
  • InChI=1S/Lu.3NO3/c;3*2-1(3)4/q+3;3*-1
    Key: APRNQTOXCXOSHO-UHFFFAOYSA-N
  • InChI=1S/Lu.3NO3.3H2O/c;3*2-1(3)4;;;/h;;;;3*1H2/q+3;3*-1;;;
    Key: HKTJSOAKUURDRI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 24920
16212852
132279168
37480
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Lu+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.[Lu+3]
பண்புகள்
Lu(NO3)3
வாய்ப்பாட்டு எடை 360.98
தோற்றம் நிறமற்ற திண்மம்
கரையும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மூடு

தயாரிப்பு

90 பாகை செல்சியசு வெப்பநிலையில் லியுதேத்தியம்(III) ஆக்சைடு நைட்ரிக் அமிலத்தில் கரைந்து லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.

Lu2O3 + 6HNO3 --> 2Lu(NO3)3 + 3H2O

எத்தில் அசிட்டேட்டில் கரைக்கப்பட்ட [[நைதரசனீரொட்சைடு|நைட்ரசன் ஈராக்சைடை 77 பாகை செல்சியசு வெப்பநிலையில் லியுதேத்தியம் தனிமத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரற்ற லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு கிடைக்கும்:

Lu + 3N2O4 --> Lu(NO3)3 + 3NO

இயற்பியல் பண்புகள்

லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு நிறமற்ற நீருறிஞ்சும் படிகங்களாகக் காணப்படுகிறது.

நீர் மற்றும் எத்தனாலில் கரையக்கூடியது.

Lu(NO3)3•nH2O என்ற பொது வாய்பாட்டில் சேர்மத்தின் படிக நீரேற்றுகளாக உருவாகிறது. இங்குள்ள n = 3, 4, 5, 6 என்ற மதிப்புகளை கொண்டதாகும்.[3]

வேதிப் பண்புகள்

நீரேற்றப்பட்ட லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து LuONO3 சேர்மத்தை உருவாக்குகிறது. மேலும் சூடாக்கும்போது இது லியுதேத்தியம் ஆக்சைடாக சிதைகிறது.[4]

அம்மோனியம் புளோரைடுடன் சேர்ந்து அம்மோனியம் அறுபுளோரோலியுதேனேட்டு சேர்மத்தை கொடுக்கிறது.

Lu(NO3)3 + 6 NH4F --> (NH4)3[LuF6] + 3NH4NO3

பயன்கள்

லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு உலோக லியுதேத்தியம் தயாரிக்கவும் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சீரொளி படிகங்களின் உற்பத்திக்கான பொருட்களின் ஓர் அங்கமாகவும் லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு திகழ்கிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.