லாபிசு

ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia

லாபிசுmap

லாபிஸ், (மலாய்: Labis; ஆங்கிலம்: Labis; சீனம்: 拉美士; ஜாவி: لابيس) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு முக்கிம் தகுதி வழங்கப்பட்டு உள்ளது.

விரைவான உண்மைகள் லாபிஸ்Labis, நாடு ...
லாபிஸ்
Labis
Thumb
Thumb
ஆள்கூறுகள்: 2°22′N 103°01′E
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்சிகாமட் மாவட்டம்
பரப்பளவு
  மொத்தம்422 km2 (163 sq mi)
மக்கள்தொகை
 (2010)
  மொத்தம்36,053
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
85300
இடக் குறியீடு(கள்)+6-07907, +6-07913, +6-07921தொலைபேசிக் குறியீடு
போக்குவரத்துப் பதிவெண்கள்J
மூடு
விரைவான உண்மைகள் லாபீஸ் நகராட்சிLabis Municipal CouncilMajlis Perbandaran Labis, வகை ...
லாபீஸ் நகராட்சி
Labis Municipal Council
Majlis Perbandaran Labis
வகை
வகை
உள்ளூராட்சி
வரலாறு
தோற்றுவிப்பு29 திசம்பர்1976
முன்புதென் சிகாமட் மாவட்ட நகராட்சி
தலைமை
நகராட்சித் தலைவர்
ரூடி ரிசால் அனாபி
(Rudy Rizal Mohd Hanapi)
செயலாளர்
பசாருடின் சலாமட்
(Fazaruddin Salamat)
கூடும் இடம்
Thumb
லாபீஸ் நகராட்சி தலைமையகம்
Jalan Pejabat Kerajaan, 85300 லாபிசு, சிகாமட், ஜொகூர்
வலைத்தளம்
www.mdlabis.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976
மூடு

தீபகற்ப மலேசியாவின் பழைய வடக்கு-தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலை, லாபிசு நகரின் வழியாகச் செல்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர்; ஜொகூர் பாரு மாநகரங்களுக்குப் பயணிப்பவர்கள் இந்த நகரைக் கடந்து செல்ல வேண்டும்.

தவிர மலேசியாவின் முதன்மைத் தொடருந்து சேவையான மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu (KTM), தெற்கில் இருக்கும் ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகருடன் இந்த நகரத்தை இணைக்கின்றது.

1900-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் பணி புரிவதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்[1] இந்த நகரில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும், தமிழர்களின் நடமாட்டத்தையும் அதிகமாகக் காணலாம்.

வரலாறு

முன்பு காலத்தில், கம்போங் பாயா மேரா (Kampung Paya Merah) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமமாக லாபிஸ் இருந்தது. அங்குள்ள ஒரு நதியில் நன்னீர் ஆமைகளுக்குப் பிடித்தமான புற்கள் இருந்தன. அந்தப் புற்களை நன்னீர் ஆமைகள் மிகவும் விரும்பிச் சாப்பிட்டன.

நன்னீர் ஆமைகளுக்கு (மலாய் மொழியில் லாபி லாபி (Labi-labi) என்றுபெயர். இந்த நன்னீர் ஆமைகளில் இருந்துதான் இந்த இடத்திற்கு லாபீஸ் (Labis) என்று பெயர் வந்தது.

நன்னீர் ஆமைகள்

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சிகாமட் மாவட்டத்தில் புதிய பகுதிகளை உருவாக்க பிரித்தானிய அதிகாரிகள் வந்தனர். அந்தக் கட்டத்தில் அந்த நன்னீர் ஆமைகளைப் பார்த்து வியப்பு அடைந்தனர்.

அவர்களின் பிரிட்டன் நாட்டில் அப்படிப்பட்ட நன்னீர் ஆமைகள் இல்லை. அதனால் அந்த ஆமைகளை லாபி லாபி என்று அழைத்தனர். காலப் போக்கில் அந்தப் பெயர் அப்படியே அந்த இடத்திற்கும் ஒட்டிக் கொண்டது. அதன் பின்னர் பிரித்தானிய அதிகாரிகள் அவர்களின் கடிதப் போக்குவரத்துகளில் அந்த இடத்தை லாபிஸ் என்று குறிப்பிட்டனர்.

லாபிஸ் தமிழ்ப்பள்ளி

லாபிஸ் நகரில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் லாபிஸ் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் 112 மாணவர்கள் பயில்கிறார்கள். 16 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2022-ஆம் ஆன்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]

35 தங்கப் பதக்கங்கள் சாதனை

2020 சூன் முதலாம் தேதியில் இருந்து 2020 அக்டோபர் 31-ஆம் தேதி வரையில் நடைபெற்ற எத்திக் (E –Thic) எனப்படும் அனைத்துலகப் புத்தாக்க அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆசிய பசிபிக் பசுமை புத்தாக்கப் போட்டியில், லாபிஸ் தமிழ்ப்பள்ளி 35 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தது.[3]

இணையம் வாயிலாக நடத்தப்பட்ட அப்போட்டியில், 30 மாணவர்களைக் கொண்ட 6 குழுக்களும், 5 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவும் பங்கேற்றன. அப்போட்டியில், மறுசுழற்சி பொருட்களின் மூலமாக உருவாக்கப்பட்ட கண்டுப்பிடிப்புகள் இடம்பெறச் செய்யப்பட்டன.

நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பங்கெடுத்துக் கொண்ட அப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் லாபிஸ் தமிழ்ப்பள்ளியின் 7 கண்டுபிடிப்புகள், போட்டி ஏற்பாட்டாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றன.

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD7061 லாபிஸ் SJK(T) Labis[4] லாபிஸ் தமிழ்ப்பள்ளி 112 16
மூடு

சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.