சூரிய குலம்

இந்து தொன்மவியல் குலம் From Wikipedia, the free encyclopedia

சூரிய குலம் என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் வம்சாவளிகளை குறிப்பிடுகின்றனர் . இந்து தொன்மவியலின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார் இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பெயரனான இச்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.

இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள். மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தளைத்ததாகவும் நம்புவதுண்டு.

ரகு வம்சம்

சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

Thumb
பகிரத தவம்

வம்ச பட்டியல்

தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.[1] ஆனால் கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக சூர்ய வம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன. அறந்தாங்கி தொண்டைமான்கள் மற்றும் பாலையவனம் பாளையம் வணங்காமுடிப் பண்டாரத்தார்கள் தங்கள் குலம் சூரியகுலம் என்று குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.[2]

காண்க

கருவி நூல்

ஆதாரம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.