மாந்தாதா

From Wikipedia, the free encyclopedia

மாந்தாதா

மாந்தாதா அல்லது மாந்தாத்திரி (Mandhatri or Mandhata) (சமக்கிருதம்: मान्धातृ, Māndhātṛ), இந்து தொன்மவியலில் இவர் இச்வாகு குலத்தில் தோன்றிய மன்னரும், அயோத்தி மன்னர் யுவனசுவரின் மகனும் ஆவார்.[1] இவர் யாதவ குல மன்னர் சசபிந்துவின் மகளான சித்திரரதையை மணந்தவர்.[2] புராணகளின் படி, இவரது வழித்தோன்றல்கள் பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன் ஆவார்.[3]

விரைவான உண்மைகள் மாதாத்திரி, தகவல் ...
மாதாத்திரி
Thumb
விஷ்ணு பகவான் இந்திரன் வேடத்தில் மாந்தாதாவிற்கு சத்திரியனின் கடமைகளை எடுத்துரைக்கும் சித்திரம்
தகவல்
குடும்பம்யுவஸ்வா (தந்தை)
துணைவர்(கள்)பிந்துமதி சைத்திரரதி
பிள்ளைகள்பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன்
மூடு

ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் மன்னர் மாந்தாதாவின் குறிப்புகள் உள்ளது.[4]

மகாபாரத்தின் துரோண பருவத்தில், மாந்தாதா சூரிய வம்சத்தின் இச்வாகு குல மன்னராக கூறப்படுகிறது.[5][6]

இறப்பு

மதுபுரியை ஆண்ட லவணாசூரன் எனும் அசுரனுடன் மாந்தாதா போரிடும் போது, லவணாசூரனுக்கு சிவபெருமான் அருளிய திரிசூலத்தால் மாந்தாதா கொல்லப்பட்டார். பிற்காலத்தில் லவணாசூரனை சத்ருக்கனன் போரில் கொன்றார்.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.