யௌதேய நாடு

From Wikipedia, the free encyclopedia

யௌதேய நாடு

யௌதேய நாடு (Yodheya Kingdom alias Yaudheya or Yauddheya) பண்டைய பரத கண்ட குரு நாட்டின் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் அருகே அமைந்த நாடுகளில் ஒன்றாகும். யௌதேய நாட்டுப் படைகள், குருச்சேத்திரப் போரில், கௌரவர் அணி சார்பாக பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

Thumb
மகாபாரத இதிகாச கால நாடுகள்
Thumb
பரத கண்டத்தின் யாதவ அரச மரபுகளும்; அண்டை நாடுகளும். ஆண்டு கி மு 1200.

யௌதேய மக்கள் யாதவர்களில் ஒரு கிளையினர் என்றும், இம்மக்களின் தலைவர் யது குல மன்னர்களில் ஒருவரான சாத்தியகி என்றும் கருதப்படுகிறது.

யௌதேயர்களின் வழித்தோன்றல்களாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இந்தியாவின் ராஜஸ்தான், அரியானா , பஞ்சாப், உத்தரப் பிரதேசம்[1][2][3][4] பகுதிகளில் வாழும் ஜாட் இன மக்கள் [1][5][6][7] மற்றும் அகிர் குடியினர்[8][9][10] கருதப்படுகின்றனர்.

பாணினி எழுதிய அஷ்டாத்யயியில் (பொ.மு 5ஆம் நூற்றாண்டு) யௌதேயர்கள் பற்றிய குறிப்பைக் (5.3.116-17 and 6.1.178) காண முடிகின்றது. பொ.பி 150ஐச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஜூனாகத் கல்வெட்டுகளில், சத்திரியர்களில் மாவீரர்களுமான யௌதேயர்களை, முதலாம் உருத்திரதாமன் தோற்கடித்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது[11][12][13] சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டிலும் யௌதேயர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.[14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.