யோசேப்பு (யாக்கோபுவின் மகன்)

From Wikipedia, the free encyclopedia

யோசேப்பு (யாக்கோபுவின் மகன்)

யோசேப்பு (ஆங்கில மொழி: Joseph; எபிரேயம்: יוֹסֵף, ஒலிப்பு: Yôsēp̄; "யாவே சேர்த்துத் தருவாராக";[1] அரபு மொழி: يوسف, Yūsuf ) என்பவர் எபிரேய விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபராவார். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுவின் வழிமரபினர்கள் கானான் நாட்டிலிருந்து வெளியேறி எகிப்தில் குடிபுகும் நிகழ்வு இவர் எகிப்தில் ஆளுநராக இருந்த போது நிகழ்ந்தது. பின்நாட்களின் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைப்பட இது வழிவகுத்தது.

Thumb
பாரோவினால் யோசேப்பும் அவருடைய சகோதரரும் வரவேற்கப்படல், நீர்வர்ணம் ஓவியர்: James Tissot (சுமார் கி.பி.1900).

விவிலியத்தின் தொடக்க நூலின் படி யாக்கோபுவின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். ராகேலின் முதல் மகனும் ஆவார்.[2] இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். ஆனாலும் இவர் படிப்படியாக எகிப்தில் பாரோவுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்தார். உலகெங்கும் கொடிய பஞ்சம் வந்த போது இவர் எகிப்து நாட்டில் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை இவர் பாரோவின் அனுமதியோடு தன் சகோதரர்களுக்கு உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[3]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.