From Wikipedia, the free encyclopedia
யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகரம் சனா ஆகும்.
யெமென் குடியரசு الجمهورية اليمنية அல்-ஜும்ஹூரிய்யா அல்-யமனிய்யா | |
---|---|
குறிக்கோள்: "Allah, al-Watan, at-Thawra, al-Wehda" "கடவுள், நாடு, புரட்சி, ஒன்றியம்" | |
நாட்டுப்பண்: ' | |
தலைநகரம் | சனா ஏடன் |
பெரிய நகர் | சனா |
ஆட்சி மொழி(கள்) | அரபு |
மக்கள் | யெமெனி |
அரசாங்கம் | குடியரசு |
• குடியரசுத் தலைவர் | அலி அப்துல்லா சாலெஹ் |
• பிரதமர் | அலி முகமது முஜூர் |
தோற்றம் | |
• ஒன்றியம் | மே 22 1990 |
பரப்பு | |
• மொத்தம் | 527,968 km2 (203,850 sq mi) (49வது) |
• நீர் (%) | சிறியது |
மக்கள் தொகை | |
• ஜூலை 2007 மதிப்பிடு | 22,230,531 (51வது) |
• 2004 கணக்கெடுப்பு | 19,685,161 |
• அடர்த்தி | 42/km2 (108.8/sq mi) (160வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $52.61 பில்லியன் (88வது) |
• தலைவிகிதம் | $2,400 (2007 est.) (175வது) |
மமேசு (2007) | 0.508 தாழ் · 153வது |
நாணயம் | யெமெனி ரியால் $1 = 198.13 ரியால் (YER) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 |
அழைப்புக்குறி | 967 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | YE |
இணையக் குறி | .ye |
5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 மக்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்.
நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமைமிக்க நாடாக உள்ளது.
ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.