Remove ads
தென்னாபிரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia
யாக்கோபு சூமா (Jacob Gedleyihlekisa Zuma, பிறப்பு: ஏப்ரல் 12, 1942) தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானார். இவர் 14 பிப்ரவரி 2018 வரை பதவியில் இருந்தார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2007, டிசம்பர் 18 இல் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென்னாபிரிக்கப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
யாக்கோபு சூமா Jacob Zuma | |
---|---|
தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 9 மே 2009[1] – 14 பிப்ரவரி 2018 | |
முன்னையவர் | கலேமா மொட்லாந்தே |
பின்னவர் | சிறில் ராமஃபோசா |
ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 டிசம்பர் 2007 | |
முன்னையவர் | தாபோ உம்பெக்கி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1999–2005 | |
தென்னாபிரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 14 ஜூன் 1999 – 14 ஜூன் 2005 | |
குடியரசுத் தலைவர் | தாபோ உம்பெக்கி |
முன்னையவர் | தாபோ உம்பெக்கி |
பின்னவர் | பூம்சிலி உம்லாம்போ-உங்கூக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஏப்ரல் 1942 இன்காண்டிலா, தென்னாபிரிக்கா |
அரசியல் கட்சி | ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் |
துணைவர் | 3 |
பிள்ளைகள் | 18 |
சூமா அரசியல் ஊழல், பாலியல் குற்றங்களுக்காகப் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். பாலியல் குற்றத்தில் இருந்து இவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். 2009, ஏப்ரல் 6 இல் இவர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.[2]
முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுக்குப் பிறகு அந்நாட்டில் சூலை 2021-இல் ஏற்பட்ட கலவரத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.[3] செப்டம்பர் 2021 இல், ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.