தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
மேகா (Megha) என்று அழைக்கப்படும் ஹரிணி ராமச்சந்திரன், மார்ச்சு 18, 1987இல் பிறந்த தமிழ் பின்னணிப் பாடகர் ஆவார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடுகிறார். இவர் "ஸ்கூல் ஆப் எக்ஸெலன்ஸின் துணை-நிறுவனர் ஆவார்.[1]
மேகா | |
---|---|
இயற்பெயர் | ஹரிணி ராமச்சந்திரன் |
பிறப்பு | 18 மார்ச்சு 1987 |
இசை வடிவங்கள் | கர்நாடக இசை, மேற்கத்திய இசை |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், நேரடி நிகழ்ச்சி நடத்துபவர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாடகர் |
இசைத்துறையில் | 2007 முதல் தற்போது வரை |
இணையதளம் | singermegha |
மேகா ஒரு கர்னாடக இசையமைப்பாளர் பாபநாசம் சிவனின் கொள்ளுப் பேத்தி ஆவார்.[2] இவர், சென்னையில் பிறந்து, பெங்களூருக்கு இடம் மாறியவர். இவர், பெங்களூரில் தனது பள்ளிக்கல்வியினை முடித்தார். சென்னையில் வணிகவியலில் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் 2007 ஆம் ஆண்டில் பின்னணி பாடல்களைப் பாடுபவராக தன் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். சென்னையிலிருந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆகஸ்டின் பால் வழிகாட்டலின் கீழ், மேற்கத்திய இசையில் 8வது நிலைவரை லண்டன் டிரினிடி கல்லூரியில் முடித்துள்ளார்.[3]
தென் இந்திய திரைப்பட துறையில் மேகா ஒரு பின்னணிப் பாடகர் ஆவார். நான் அவனில்லை (2007) திரைப்படத்தில் இசை இயக்குனரான விஜய் ஆண்டனி என்பவரால் திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி மற்றும் டி. இமான் உள்ளிட்ட இசை இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். பாடகராக வெற்றி கண்ட பிறகு, அவர் நரம்பியல்-மொழி நிரலாக்க நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். என்.எல்.பி. இன் நிறுவனர்களான ஜான் கிரைண்டர் மற்றும் ரிச்சர்ட் பேண்ட்லரிடமிருந்து அதைப் பற்றிக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.[4] மேலும் அவரது ஆர்வத்தால், 2011 இல் அவர் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சோர்வுகளை சமாளிக்க என்.எல்.பி. மாதிரித் திட்டங்களை வழங்குவதற்கான சிறப்பு பள்ளிக்கூடம் "ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ்" நிறுவப்பட்டது.[5] தனி நபர்களுக்கான என்.எல்.பி. அமர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்திய பின்னர், பள்ளிக் குழந்தைகள் மற்றும் சிறப்புத் திறனாளர்களுக்காக, இவர் இணை நிறுவனருடன் சேர்ந்து, நிகழ்வுகள் மற்றும் அமர்வுகளை நடத்தினர்.[6] இந்த கட்டத்தின்போது, மேகாவும் அவருடைய வணிகப் பங்குதாரரும் சேர்ந்து, தனிநபர் வளர்ச்சிக்காக "எக்ஸலன்ஸ் இன்ஸ்டாலேசன் டெக்னாலஜி" (இ.ஐ.டி.) என்று அழைக்கப்படும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி புதிய கண்டுபிடிப்புகளைத் தொடங்கினர். அவர் நாடு முழுவதும் இ.ஐ.டி. யைப் பயன்படுத்தி தனிநபர் மாற்றத்தின் மூலம் வணிக, சுகாதாரம் மற்றும் மரபுரிமை முடுக்கம் சேவைகளை வழங்குவதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இ.ஐ.டி.நிபுணர்களின் குழுவை உருவாக்கி வருகிறார்.
மேகா பல்வேறு இசை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவுகள்[7][8] போன்றவற்றை (உலக சுற்றுப்பயணத்தில்) ஹாரிஸ் ஜெயராஜ் - " ஹாரிஸ்: தி எட்ஜ் ".[9][10] போன்ற இசை இயக்குனர்களுடன் நேரடி நிகழ்ச்சியாக நடத்தியுள்ளார்.
சென்னையிலும், மெட்ராஸ் மியூசிகல் அசோசியேஷன் குழுவினருடனும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபடுகிறார்.[11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.