From Wikipedia, the free encyclopedia
மெக்சிகோ நகரம் (எசுப்பானியம்: Ciudad de México, எசுப்பானிய ஒலிப்பு: [sjuˈða(ð) ðe ˈmexiko] ( கேட்க);[2]) மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[3] மெக்சிக்கோ நகரமானது மெக்சிகன் கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்குகிறது. இது 31 மெக்சிகன் மாநிலங்களில் எந்த ஒரு பகுதியாகவும் இல்லாமல் தன்னிச்சையான ஒரு கூட்டாட்சி அரசு அமைப்பாக உள்ளது. இதனால் மெக்சிக்கோ, கூட்டரசு மாவட்டம் எனவும் அழைக்கப்படுகின்றது. மெக்சிக்கோ நகரம் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் அதன் மிக முக்கியமான, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் நிதி மையமாக திகழ்கிறது.
மெக்சிகோ நகரம்
சியுடாட் டெ மெக்சிக்கோ | |
---|---|
மெக்சிக்கோ நகரம் Mexico City [1] | |
அடைபெயர்(கள்): சியுடாட் டெ லோசு பலாசியோசு (அரண்மனை நகரம்) | |
மெக்சிக்கோ நாட்டினுள் மெக்சிக்கோ நகரத்தின் அமைவிடம் | |
நாடு | மெக்சிக்கோ |
கூட்டாட்சி பிரிவு | கூட்டாட்சி மாவட்டம் |
தோற்றம் | c.மார்ச் 18, 1325 (டெனோக்டிட்லான் என்று) |
புது ஸ்பெயினின் நகரம் | 1524 |
கூட்டாட்சி மாவட்டம் | 1824 |
அரசு | |
• வகை | குடியரசு |
• ஆட்சி தலைவர் | மார்செலோ எப்ரார்ட் (PRD) |
பரப்பளவு 1 | |
• நகரம் | 1,479 km2 (571 sq mi) |
ஏற்றம் | 2,240 m (7,349 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 88,51,080 |
• அடர்த்தி | 5,741/km2 (14,870/sq mi) |
• பெருநகர் | 1,92,31,829 |
• மக்கள் | "டெஃபேஞோ" "சிலாங்கோ" "காபிடலீஞோ" |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (நடு) |
இணையதளம் | http://www.df.gob.mx |
1 பரப்பளவில் கூட்டாட்சி மாவட்டத்தின் தென் பகுதியின் கிராமாந்திரங்களை எண்ணவில்லை |
உலகின் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய மாநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும்[4][5] . முதல் இடத்தில் யப்பானின் டோக்கியோ மாநகரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மும்பையும் உள்ளன.
வட அமெரிக்காவின் மிக முக்கியமான நிதி மையங்களில் இந்த நகரம் ஒன்றாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ள உயர் பீடபூமியின் 2.240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. நகரம் 16 நிர்வாகப் பிரிவுகளாக (பரோக்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கட்தொகையானது 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.84 மில்லியன் ஆகும்.
2011 இல் $ 411 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மூலம் மெக்சிக்கோ நகரம் உலகின் பணக்கார பெருநகர பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரம் மெக்சிக்கோ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% மற்றும் பெருநகர பகுதிகளுக்கான மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 34% பங்கும் வகிக்கின்றது.
மெக்சிக்கோ பெருநகரத்தின் மொத்த உள்ளக உற்பத்தி, 2011இல், அமெரிக்க$411 பில்லியனாக இருந்தது; உலகின் செல்வமிக்க பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது.[6] மெக்சிக்கோ நாட்டின் நிகர உற்பத்தியில் இந்த நகரம் 15.8% பங்களிக்கின்றது.[7] இந்த நகரத்தின் பொருளாதாரம், தனிநாடாக இருப்பின், இலத்தீன் அமெரிக்காவில் ஐந்தாவதாக உள்ளது; கோஸ்ட்டா ரிக்காவினுடையதைப் போல ஐந்து மடங்காகவும் பெருவின் பொருளாதாரத்திற்கு சமனாகவும் உள்ளது.[8]
இந்த நகரம் அமெரிக்காக்களின் தொன்மைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. பழங்குடி மக்களால் நிறுவப்பட்ட இரு நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 1325இல் அசுடெக் காலத்தில் டெக்சுகோகோ ஏரியின் தீவொன்றில் நிறுவப்பட்டது.1521இல் இது முழுமையாக அழிக்கப்பட்டு எசுப்பானிய ஊரகத் தரத்தின்படி மீண்டும் கட்டப்பட்டது. 1524இல் மெக்சிக்கோ நகராட்சி நிறுவப்பட்டது.[9] எசுப்பானிய குடியேற்றப் பேரரசின் அரசியல், நிர்வாக, நிதிய மையமாக மெக்சிக்கோ நகரம் விளங்கியது.[10] எசுப்பானியாவிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் 1824ஆம் ஆண்டில் கூட்டரசு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக அரசியல் தன்னாட்சிக்கு போராடிய பின்னர் 1997இல் கூட்டரசு மாவட்டதின் தலைவரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும் ஓரவையுள்ள சட்டப்பேரவைக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றது. இடதுசாரிக் கட்சியான சனநாயகப் புரட்சிக் கட்சி இவ்விரண்டையும் கைப்பற்றியுள்ளது.[11] ஆண்மை ஆண்டுகளில் பல தாராளமயக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன; கோரிக்கை அடிப்படையில் கருக்கலைப்பு, கட்டுப்பட்டளவில் வதையா இறப்பு, தவறின்றியும் மணமுறிவு, தற்பால் திருமணம் ஆகியன அனுமதிக்கப்படுகின்றன.
இசுப்பானியர்கள் மெக்சிகோ நகரை உருவாக்கும் முன்னர் இந்நிலத்தின் அஸ்டெக் அமெரிக்கப் பழங்குடியினரின் பேரரசு இருந்தது. இந்நகரம் 1521 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உண்மையில் இந்நகரம் ஒரு ஏரியின் மீது கட்டப்பட்டதாகும்.
மெக்சிக்கோ நகரத்தில் அதன் வெப்ப மண்டல அமைவிடம் மற்றும் அதிக உயரம் காரணமாக ஒரு மிதவெப்ப மண்டல உயர்நில காலநிலை உள்ளது. சராசரி ஆண்டு வெப்பநிலை பெருநகரின் உயரத்தினை பொறுத்து 12 முதல் 16 டிகிரி செல்சியஸ்( 54-61 °F ) வரை மாறுபடுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தின் போது குறைந்தபட்ச வெப்பநிலை -2 °C இலிருந்து -5 °C( 28 முதல் 23 டிகிரி பாரன்ஹீட் ) வரை உள்ளது. மேலும் வசந்த காலம் மற்றும் கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 °C இருந்து 33.9 °C வரை பதிவு செய்யப்படுகிறது. மேலும் வருடாந்திர மழை 820 மில்லி மீட்டர் ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், மெக்சிக்கோ நகரம் (இடாக்குபையா) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28.2 (82.8) |
29.3 (84.7) |
33.3 (91.9) |
33.4 (92.1) |
33.9 (93) |
33.5 (92.3) |
30.0 (86) |
28.4 (83.1) |
28.5 (83.3) |
28.9 (84) |
29.3 (84.7) |
28.0 (82.4) |
33.9 (93) |
உயர் சராசரி °C (°F) | 21.3 (70.3) |
22.9 (73.2) |
25.5 (77.9) |
26.6 (79.9) |
26.3 (79.3) |
24.7 (76.5) |
23.2 (73.8) |
23.4 (74.1) |
22.5 (72.5) |
22.4 (72.3) |
21.9 (71.4) |
21.2 (70.2) |
23.5 (74.3) |
தினசரி சராசரி °C (°F) | 13.6 (56.5) |
15.0 (59) |
17.4 (63.3) |
18.7 (65.7) |
19.0 (66.2) |
18.5 (65.3) |
17.4 (63.3) |
17.5 (63.5) |
17.1 (62.8) |
16.2 (61.2) |
14.9 (58.8) |
13.9 (57) |
16.6 (61.9) |
தாழ் சராசரி °C (°F) | 5.9 (42.6) |
7.0 (44.6) |
9.2 (48.6) |
10.7 (51.3) |
11.7 (53.1) |
12.3 (54.1) |
11.5 (52.7) |
11.5 (52.7) |
11.6 (52.9) |
9.9 (49.8) |
7.8 (46) |
6.5 (43.7) |
9.6 (49.3) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -4.1 (24.6) |
-4.4 (24.1) |
-4.0 (24.8) |
-0.6 (30.9) |
3.7 (38.7) |
4.5 (40.1) |
5.3 (41.5) |
6.0 (42.8) |
1.6 (34.9) |
0.0 (32) |
-3.0 (26.6) |
-3.0 (26.6) |
−4.4 (24.1) |
பொழிவு mm (inches) | 7.6 (0.299) |
5.6 (0.22) |
10.4 (0.409) |
23.1 (0.909) |
56.5 (2.224) |
134.9 (5.311) |
161.4 (6.354) |
153.4 (6.039) |
127.8 (5.031) |
54.1 (2.13) |
12.8 (0.504) |
6.9 (0.272) |
754.5 (29.705) |
% ஈரப்பதம் | 56 | 49 | 45 | 46 | 55 | 66 | 73 | 73 | 74 | 78 | 72 | 60 | 62 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 மிமீ) | 2.21 | 2.41 | 3.65 | 8.05 | 13.44 | 18.15 | 22.39 | 22.30 | 19.24 | 9.71 | 4.13 | 2.34 | 128.02 |
சராசரி பனிபொழி நாட்கள் | 0.04 | 0.05 | 0.10 | 0.00 | 0.00 | 0.00 | 0.00 | 0.00 | 0.00 | 0.00 | 0.00 | 0.00 | 0.19 |
சூரியஒளி நேரம் | 208.2 | 212.1 | 228.6 | 209.4 | 196.9 | 152.6 | 144.2 | 158.4 | 139.1 | 177.0 | 198.5 | 186.5 | 2,211.5 |
Source #1: Colegio de Postgraduados (normals and extremes 1921–1989)[12] Servicio Meteorológico Nacional (extremes 1981–2000)[13] | |||||||||||||
Source #2: NOAA (sun 1961–1990)[14] |
மெக்சிக்கோ நகரின் வரலாற்று மையம் மற்றும் தெற்குப் பெருநகரில் உள்ள சொஷிமில்கோ என்ற "மிதக்கும் தோட்டங்கள்" யுனெஸ்கோ மூலம் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற வரலாற்று மையமான புகழ்பெற்ற அடையாளங்களான ஸ்பானிஷ் சகாப்த பெருநகர கதீட்ரல் மற்றும் தேசிய அரண்மனை மற்றும் பண்டைய ஆஸ்டெக் கோவிலின் இடிபாடுகள் நகரில் மின்வடங்கள் தோண்டும் போது 1978 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஏகாதிபத்திய குடியிருப்பு கோட்டையில் அந்நாட்டு பாராளுமன்றம் உள்ளது. கூடுதலாக நகரில் பரவலாக 160 அருங்காட்சியகங்கள், 30 கச்சேரி அரங்குகள் மற்றும் 100 கலை அரங்குகளைக் கொண்டிருக்கிறது. இது நியூயார்க், லண்டன் மற்றும் டொராண்டோ போன்றவற்றிற்கு அடுத்து திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் கொண்ட நான்காவது நகரமாக உள்ளது.
விக்கிமேனியா ௨௦௧௫ மெக்சிகோ நகரத்தில் நடைபெற்றது.
Historic Center of Mexico City and Xochimilco | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | Cultural |
ஒப்பளவு | ii, iii, iv, v |
உசாத்துணை | 412 |
UNESCO region | கரீபிய மற்றும் லத்தின் அமெரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11th தொடர்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.