நாங்க்லாவ் அல்லது மூன்றாம் இராமா (ஆங்கிலம்:Rama III) (31 மார்ச் 1788 – 2 ஏப்ரல் 1851) சயாமின் சக்ரி முடியாட்சியின்மூன்றாவது மன்னர் ஆவார். 1824 ஜூலை 21 முதல் 1851 ஏப்ரல் 2 வரை இவர் ஆட்சி செய்தார். அவர் தனது தந்தை இரண்டாம் இராமாவிற்குப் பிறகு சயாமின் அரசராக ஆனார். மரபுகளின்படி அரசப்பதவிக்கான இவரது வாரிசுரிமை முறையற்றது.[1] ஏனென்றால் நாங்க்லாவ் இரண்டாம் இராமாவின் முறையற்ற மனைவி ஒருவருக்கு பிறந்த மகன் ஆவார். இவர் இரண்டாம் இராமரின் மனைவியான ஸ்ரீசுரியேந்திரா என்ற ராணிக்குப் பிறந்த முறையான மகனான இளவரசர் மோங்க்குட்டின் அரசுரிமையை பறித்ததாக மற்றவர்களால் கருதப்பட்டார். எவ்வாறாயினும், தாய்லாந்து முடியாட்சிக் கருத்தாக்கத்தின் கீழ், ஒரு மன்னர் மகா சம்மதாவைப் பின்பற்ற வேண்டும், மேலும் அவர் "மக்களால் தேர்ந்தெடுக்கப்படிருக்க வேண்டும்."[2]
நாங்க்லாவ் พระบาทสมเด็จพระนั่งเกล้าเจ้าอยู่หัว | |
---|---|
மூன்றாம் இராமா | |
ஆட்சிக்காலம் | 21 சூலை 1824 – 2 ஏப்ரல் 1851 |
பட்டாபிஷேகம் | 21 சூலை 1824 |
பிறப்பு | பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து | 31 மார்ச்சு 1788
இறப்பு | 2 ஏப்ரல் 1851 63) பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து | (அகவை
குழந்தைகளின் பெயர்கள் | பல மனைவிகள் மூலம் 51 குழந்தைகள் |
மதம் | பௌத்தம் |
மூன்றாம் இராமாவின் ஆட்சியின் போது லாவோடியன் கிளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் சயாமின் இராணுவ மேலாதிக்கத்தை நிறுவினார். மேலும் சயாமிய-வியட்நாமியப் போர் (1831-34) மற்றும் சயாமி-வியட்நாமியப் போருக்காக கம்போடியாவில் போரிட்டது போன்றவற்றிகாகவும் மூன்றாம் இராமா அறியப்படுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
அரசர் மூன்றாம் இராமா 1788 ஆம் ஆண்டில் இளவரசர் இசரசுந்தோர்ன் மற்றும் அவரது அரச மனைவிகளில் ஒருவரான சாவோ சோம் மந்தா ரியாம் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தாயார் தெற்கிலிருந்து ஓர் உன்னத முஸ்லீம் குடும்பத்திலிருந்து வந்தவர். 1809 ஆம் ஆண்டில் இசரசுந்தோர்னின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து எழுந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இளவரசர் தாப்(மூன்றாம் இராமா) நியமிக்கப்பட்டார். இதில் அவரது செயல்திறனுக்காக பாராட்டப்பட்டார். அவர் வெளிநாட்டு வர்த்தகத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் சீனப் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தின் மீது ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டார். அவர் பின்னர் கட்டிய கோயில்கள் சீன செல்வாக்கால் வகைப்படுத்தப்பட்டன. இவரது காலத்தில் நெப்போலியன் போர்களின் வரலாற்றை கிறிஸ்தவ மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் சயாமிய மொழியிலும், பிரெஞ்சு மொழியிலிருந்து போர்த்துகீசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.[3]
அரியணை
இளவரசர் வர்த்தக விவகாரங்களை நிர்வகித்தபோது, அவரது சகோதரர் இளவரசர் மோங்க்குட் மதத்தின் பின் சென்று 1824 இல் துறவியானார். எனவே அவருக்குப் பின் ராமா அரியணை ஏறினார்.
ஆட்சிகளின் பெயரிடுதல்
பாங்காக் ஒரு இராச்சியமாக நிறுவப்பட்டதிலிருந்து, சயாமின் மன்னர்கள் யாருக்கும் அரச பாரம்பரியத்தின் படி சரியாகப் பெயரிடப்படவில்லை. சயாமியர்கள் நாங்க்லாவின் தாத்தாவை "முதல் ஆட்சியாளர்" என்றும், அவரது தந்தை இரண்டாம் இராமாவை "மத்திய ஆட்சியாளர்" என்றும் பெயரிட்டனர். நாங்க்லாவ் தன்னை "மறைந்த ஆட்சியாளர்" என்றும் அழைத்துக் கொண்டார்.
மேற்கத்திய தொடர்புகள்
நாங்க்லோவின் ஆட்சி காலத்தில் அவர் மேற்கத்திய தொடர்புகளின் புதுப்பிப்பைக் கண்டார். 1822 ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி முகவர் ஜான் கிராஃபுர்டின் சயாமுக்கான பணி,[3] 1824 ஆம் ஆண்டில் வெடித்த முதல் ஆங்கிலோ-பர்மியப் போரில் சயாமின் ஆதரவைக் கோருவதற்கான பிரித்தானிய கோரிக்கையின் அடித்தளத்தை அமைத்தது. பர்மிய காடுகள் வழியாக விரைந்து செல்ல யானைகளையும் கப்பல்களையும் நாங்க்லோவ் ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். கைப்பற்றப்பட்ட நிலங்களைச் சயாமுக்குத் தருவதாக ஆங்கிலேயர்கள் உறுதியளித்ததால் பர்மா மீதான படையெடுப்பில் பங்கேற்க அவர் சயாமிய படைகளையும் அனுப்பினார்.
மத பக்தி
பௌத்த நம்பிக்கையால் நாங்லோவ் பிரபலமானவர். இளவரசரான பிறகு ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு உணவளித்தார், ஒவ்வொரு மடாலயத்திலும் விலங்குகளை விடுவித்தார். தனது ஆட்சியின் 50க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டுவது மற்றும் பழுது பார்ப்பது போன்ற பணிகளை மேற்கொண்டார்.
மரணம் மற்றும் ஆளுமை
1851 ஏப்ரல் 2 ஆம் தேதி நாங்க்லாவ் இறந்தார். அவருக்கு மகன்கள் உட்பட 51 குழந்தைகள் இருந்தனர்,[4] ஆனால் அவர் தனது மனைவிகளில் எவரையும் பட்டத்திற்கு உரியவராக அறிவிக்கவில்லை. எனவே அவருக்குப்பிறகு அரியணை அவரது சகோதரர் மோங்க்குட்டுக்கு சென்றது. "பர்மா மற்றும் வியட்நாமுடனான எங்கள் போர்கள் முடிந்துவிட்டன, மேற்கத்தியர்களின் அச்சுறுத்தல்கள் மட்டுமே எங்களுக்கு எஞ்சியுள்ளன. அவர்களின் கண்டுபிடிப்புகளை நம்முடைய சொந்த நலன்களுக்காக நாம் படிக்க வேண்டும், ஆனால் ஆவேசம் அல்லது வழிபாட்டின் அளவிற்கு அல்ல." என்று நாங்க்லாவ் தனது மரணத்தின்போது கூறினார்.
அவரது ஆட்சியின் போது, சயாமுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் இலாபகரமாக இருந்தது. அரசர் இந்த வருவாயைத் தனியே ஒரு சிவப்பு பணப்பையில் வைத்திருந்தார், பின்னர் இந்த பணம் "சிவப்புப் பணப்பை" என்று அழைக்கப்பட்டது. தனது வணிக புத்திசாலித்தனம் மூலம் அவர் சம்பாதித்த சிவப்பு பணப்பையை எதிர்காலத்திற்கான மாநில அவசர நிதியாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மன்னர் அறிவித்தார். பிற்காலத்தில் சயாம் ஏதேனும் ஒரு வெளிநாட்டு சக்தியால் கைப்பற்றால் இப்பணத்தைக் கொண்டுத் இழந்த நிலத்தைத திரும்பப்பெற முடியிம் என்று அவர் நினைத்தார். அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மருமகன் சுலலாங்கொர்னின் ஆட்சியில், சியாம் உண்மையில் 1893 ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிய போரின்போது நடந்த பக்னம் போரில் பிரான்சுக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருந்தது. இதற்கான நிதி நாங்க்க்லாவின் சிவப்பு பணப்பையில் ஓரளவுக்கு இருந்தது.
சக்ரி வம்ச மன்னர்களின் செயல்கள் வேளாண்மை, அறிவியல், மதம் மற்றும் நிதி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக தாய் பாட் 15 ரூபாய் தொடர் நோட்டுகள் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 3, 2001 அன்று வெளியிடப்பட்ட 500 பாட் ரூபாயின் பின்னால் அரசர் மூன்றாம் ராமாவின் உருவம் சித்தரிக்கப்பட்டது, அவரது மரணசாசனத்தின் ஒரு சிறு பகுதியின் மேற்கோளுடன் சீன படகோட்டமும் இடம் பெற்றிருந்தது.
நினைவிடம்
மூன்றாம் ராமர் சிலை வாட் ரட்சநாதரத்தின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[5]
குறிப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.