முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல் கடாபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi[1] (அரபு மொழி: مُعَمَّر القَذَّافِي Muʿammar al-Qaḏḏāfī ⓘ; சூன் 1942 – 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக முஅம்மர் கதாஃபி (Muammar Gaddafi) அல்லது கர்னல் கடாஃபி அல்லது முஅம்மர் அல்-கத்தாஃபி, லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக[2][3] 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார்.
முஅம்மர் அல் கடாபி مُعَمَّر القَذَّافِي | |
---|---|
அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் கடாபி (2009) | |
லிபியாவின் புரட்சி தலைவரும் வழிகாட்டியும் | |
பதவியில் 1 செப்டம்பர் 1969 – 20 அக்டோபர் 2011 | |
குடியரசுத் தலைவர் | பட்டியலைப் பார்க்க
|
பிரதமர் | பட்டியலைப் பார்க்க
|
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
லிபியப் புரட்சிப் படைப் பேரவையின் தலைவர் | |
பதவியில் 1 செப்டம்பர் 1969 – 2 மார்ச் 1977 | |
பிரதமர் | மகுமூது அல்-மக்ரிபி அப்துஸ்ஸலாம் ஜாலூத் அப்துல் அல்-உபைதி |
முன்னையவர் | லிபியாவின் இத்ரீசு (அரசர்) |
பின்னவர் | முஅம்மர் அல் கதாஃபி (பொது மக்கள் காங்கிரசின் பொதுச் செயலர்) |
லிபியப் பொது மக்கள் காங்கிரசின் பொதுச் செயலர் | |
பதவியில் 2 மார்ச் 1977 – 2 மார்ச் 1979 | |
பிரதமர் | அப்துல் அல்-உபைதி |
முன்னையவர் | முஅம்மர் அல் கடாபி (புரட்சிப் படைப் பேரவைத் தலைவர்) |
பின்னவர் | அப்துல் அல்-ஒபீடி |
லிபியாவின் பிரதமர் | |
பதவியில் 16 சனவரி 1970 – 16 சூலை 1972 | |
முன்னையவர் | மகுமூது அல்-மக்ரிபி |
பின்னவர் | அப்துஸ்ஸலாம் ஜாலூத் |
ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் | |
பதவியில் 2 பெப்ரவரி 2009 – 31 சனவரி 2010 | |
முன்னையவர் | ஜக்காயா கிக்வெட்டே |
பின்னவர் | பிங்கு வா முதாரிக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 1942 சேர்ட், இத்தாலிய லிபியா (இன்றைய லிபியா) |
இறப்பு | 20 அக்டோபர் 2011 69) சேர்ட், லிபியா | (அகவை
அரசியல் கட்சி | அரபு சோசலிச ஒன்றியம் (1971–1977) |
துணைவர்(கள்) | ஃபத்தீகா அல்-நூரி (1969–1970) சஃபீயா ஃபார்காசு (1971–2011) |
பிள்ளைகள் | ஆண் பிள்ளைகள்
பெண் பிள்ளைகள்
|
முன்னாள் கல்லூரி | பங்காசி இராணுவக் கல்விக்கழகம் |
சமயம் | சுன்னி இசுலாம் |
விருதுகள் | Order of the Yugoslav Star Order of Good Hope |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | Kingdom of Libya (1961–1969) Libyan Arab Republic (1969–1977) Libyan Arab Jamahiriya (1977–2011) |
கிளை/சேவை | லிபிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1961–2011 |
தரம் | கர்னல் |
கட்டளை | லிபியப் படை |
போர்கள்/யுத்தங்கள் | லிபிய-எகிப்தியப் போர் சாட்-லிபியப் பிரச்சினை உகாண்டா-தன்சானியா போர் 2011 லிபிய உள்நாட்டுப் போர் |
1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்[4]. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது[5][6]. எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது[7][8]. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார்[9]. ஐரியக் குடியரசுப் படை, மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது[10][11]. 1980களில் உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன[12].
பெப்ரவரி 2011 இல் எகிப்து, மற்றும் துனீசியாவில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டங்களை அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் பெங்காசி நகரில் தேசிய இடைக்காலப் பேரவை என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை ஐநா பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய நேட்டோ தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனித இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 சூன் 27 இல் பன்னாட்டுக் காவலகம், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் சைஃப் அல்-இசுலாம் ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன[1][13][14][15]. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் திரிப்பொலி கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது[16]. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார்[17]. இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்[18].
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.