Remove ads
From Wikipedia, the free encyclopedia
சைஃப் அல்-இசுலாம் முஅம்மர் அல்-கதாஃபி (Saif al-Islam Muammar al-Gaddafi, பிறப்பு சூன் 25, 1972; அரபு மொழி: سيف الإسلام معمر القذافي, மொழிமாற்றம்: "இசுலாமின் போர்வாள், கதாஃபாவின் முஅம்மர்" ), ஓர் லிபிய நாட்டுப் பொறியாளரும் அரசியல்வாதியும் ஆவார். லிபிய நாட்டின் முன்னாள் அதிபர் முஅம்மர் அல் கதாஃபியின் இரண்டாவது மனைவி சாஃபியா ஃபர்கஷிற்குப் பிறந்த இரண்டாவது மகனாவார்.
சைஃப் அல்-இசுலாம் முஅம்மர் அல் கதாஃபி سيف الإسلام معمر القذافي | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சயீஃப் அல்-இசுலாம் முஅம்மர் அல்-கதாஃபி சூன் 25, 1972 திரிப்பொலி, லிபியா |
தேசியம் | லிபிய நாட்டவர் |
முன்னாள் கல்லூரி | அல் பதே கல்கலைக்கழகம் (இளங்கலைப் பொறியியல் ) ஐஎம்ஏடிஈசி பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை) இலண்டன் பொருளியல் பள்ளி (முனைவர்)[1] |
வேலை | கதாஃபி பன்னாட்டு ஈகை சங்கங்களின் தாபனம் நிறுவனரும் தலைவரும் |
தொழில் | பொறியாளர், அரசியல்வாதி |
இணையத்தளம் | GDF |
லிபிய போராட்டங்களுக்கிடையே பெப்ரவரி 20, 2011 அன்று லிபியத் தொலைக்காட்சியில் உருக்கமான ஓர் உரையில் இந்த எதிர்ப்புகளை தங்கள் சொந்தக் காரணங்களுக்காக தூண்டிவிடுவதாக பழங்குடியினரையும் இசுலாமிய அடிப்படைவாதிகளையும் குற்றம் சாட்டினார். சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்த வேளையில் இதன் மாற்றாக வணிகத்தைப் பாதிக்கக்கூடிய, எண்ணெய் பணவரவு தடைபடும், வெளிநாட்டவர்கள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும் அபாயங்கள் உள்ள உள்நாட்டுப் போர் நிகழும் என்று அச்சுறுத்தினார்.[2] "அல் ஜசீரா, அல் அராபியா மற்றும் பிபிசி நம்மை ஏமாற்றவிட மாட்டோம்" என்று முழங்கி உரையை முடித்தார். இவரது மதிப்பீடுகளை பல ஆய்வாளர்கள், முன்னாள் லிபியாவிற்கான பிரித்தானிய தூதர் ஓலிவர் மில்சு உட்பட, ஒப்பவில்லை.[3][4] ஏபிசி தொலைக்காட்சிக்கு கொடுத்த ஓர் நேர்காணலில் சயீஃப் தனது தந்தையின் ஆட்சியில் குடிமக்கள் கொல்லப்படவில்லை என வலியுறுத்தினார்.[5] பெப்ரவரி 28, 2011 அன்று சயீஃப் தனது சார்பாளர்களை வன்முறைக்குத் தூண்டிவிடுவதையும் தானே ஓர் சுடுகலனைக் கைக்கொண்டு மற்றவர்களுக்கும் ஆயுதங்களை வழங்க வாக்களிப்பதையும் காட்டும் ஒளிதம் ஒன்று இணையத்தில் வெளியானது.[6] அக்டோபர் 2011 இல் கதாஃபி கொல்லப்பட்டு அவரது படைகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சைஃப் லிபியாவை விட்டு தப்பினார். ஆனால் நவம்பர் 19 அன்று லிபிய இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.
சயீஃப் 2008ஆம் ஆண்டு இலண்டன் பொருளியல் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றார்.[7][8] பள்ளி பேராசிரியர் டேவிட் ஹெல்ட் இவருக்கு அறிவுரையாளராக இருந்ததாக நியூயோர்க் டைம்சு இதழ் கூறுகிறது.[9] பட்டம் பெற்றபின்னர் தான் நிறுவிய கதாஃபி பன்னாட்டு ஈகை மற்றும் வளர்ச்சி நிறுவனம் மூலமாக லண்டன் பொருளியல் பள்ளியின் வட ஆப்பிரிக்க குடிசார் சமூக அமைப்புகளில் உலக ஆளுமைக்கான ஆய்வு மையத்திற்கு சயீஃப் £1.5 மில்லியன் நன்கொடை தந்தார். தற்போதைய எதிர்ப்புகளையும் சயீஃப் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு அவருடையதல்ல என்ற குற்றச்சாட்டுக்களுக்கிடையேயும் கருத்தில் கொண்டு இப்பள்ளி லிபியாவுடனான அனைத்து நிதித் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்வதாகவும் கதாஃபியின் நிறுவனம் வழங்கி, செலவு செய்துவிட்ட முதல் தவணைக் கொடையான £300,000 தவிர்த்து மேலும் கொடை பெறப்போவதில்லை என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.[10]
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள சயீஃபின் முனைவர் படிப்பிற்கான ஆய்வின் பல பகுதிகள் மூலத்திற்கு சுட்டி தராது திருடப்பட்டிருப்பதாக விமரிசனம் எழுந்துள்ளது.[11][12] இவரது முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெறவும் [13] குற்றங்களை மீளாய்வு செய்யவும்[14][15] லண்டன் பொருளியல் பள்ளிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.