முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்

From Wikipedia, the free encyclopedia

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்

புரோசுட்டேட் புற்றுநோய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (Prostate cancer) ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஒரு சுரப்பியான முன்னிற்கும் சுரப்பியில் உருவாகும் புற்றுநோய் ஆகும். பெரும்பாலான புரோசுட்டேட் புற்றுநோய்கள் மிக மெதுவாக வளரக்கூடியவை;[1] இருப்பினும், மிக விரைவாகப் பெருகும் புரோசுட்டேட் புற்றுநோயும் கண்டறியப்பட்டுள்ளது.[2] இந்தப் புற்று உயிரணுக்கள் முன்னிற்குஞ்சுரப்பியிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக எலும்புகளுக்கும் நிணநீர்க்கணுக்களுக்கும், மாற்றிடம் புகும் (பரவும்) தன்மை உடையது. இப்புற்றுநோயால் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், பாலுறவின்போது சிக்கல்கள், விறைக்க முடியாமை போன்ற அறிகுறிகள் உருவாகின்றன.

விரைவான உண்மைகள் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்
Thumb
முன்னிற்குஞ்சுரப்பியின் புறவணியிழைய புற்றுநோய் மிகப் பெரும்பாலான ஒன்றாகும்; அதன் நுண்ணோக்கி ஒளிப்படம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல், சிறுநீரியல்
ஐ.சி.டி.-10C61.
ஐ.சி.டி.-9185
ம.இ.மெ.ம176807
நோய்களின் தரவுத்தளம்10780
மெரிசின்பிளசு000380
ஈமெடிசின்radio/574
பேசியண்ட் ஐ.இமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்
ம.பா.தD011471
மூடு
Thumb

இந்தப் புற்றுநோய் புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், கதிர் மருத்துவம், அல்லது இயக்குநீர் சிகிச்சை மூலம் மேலாளப்படுகிறது.[3]

விரைவாக வளரும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு மரபியல் காரணங்கள் அடிப்படையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிஆர்சிஏ2 மரபணு உள்ள ஆண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதாகவும் அத்தகைய புற்றுநோய் மிக விரைவாக வளரும் எனவும் அறியப்பட்டுள்ளது.[4]

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.