From Wikipedia, the free encyclopedia
முகம்மது யூனுசு (Muhammad Yunus, பிறப்பு: 28 சூன் 1940) என்பவர் வங்காளதேசத் தொழிலதிபர், வங்கியாளர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, சமூகத் தலைவர் ஆவார். இவர் 2024 ஆகத்து முதல் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.[2] யூனுசு 2006 இல் கிராமின் வங்கியை நிறுவியதற்காகவும், குறுங்கடன், சிறுநிதிகள் ஆகிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்தியமைக்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.[3] இவர் அமெரிக்கா உட்படப் பல தேசிய, பன்னாட்டு கௌரவங்களைப் பெற்றுள்ளார். 2009 இல் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், 2010 இல் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.[4] இந்த மூன்று பன்னாட்டு விருதுகளையும் பெற்ற ஏழு பேரில் யூனுசும் ஒருவர்.[5]
முகம்மது யூனுஸ் Muhammad Yunus | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2013 இல் யூனுசு | |||||||||||||||||
வங்காளதேசத்தின் 5-ஆவது தலைமை ஆலோசகர்[1] | |||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||
பதவியில் 8 ஆகத்து 2024 | |||||||||||||||||
குடியரசுத் தலைவர் | முகம்மது சகாபுதீன் | ||||||||||||||||
முன்னையவர் | சேக் அசீனா (பிரதமராக) | ||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||
பிறப்பு | 28 சூன் 1940 கதசாரி, வங்காள மாகாணம், இந்தியா | ||||||||||||||||
தேசியம் | வங்காளதேசர் | ||||||||||||||||
அரசியல் கட்சி | சுயேச்சை | ||||||||||||||||
துணைவர்(கள்) | வேரா பொரெசுத்தியென்கோ (தி. 1970; ம.மு. 1979) அப்ரோசி யூனுஸ் (தி. 1983) | ||||||||||||||||
பிள்ளைகள் | மொனிக்கா • தீனா | ||||||||||||||||
கல்வி |
| ||||||||||||||||
வேலை | பொருளியலாளர் • தொழிலதிபர் | ||||||||||||||||
விருதுகள் |
| ||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||
இணையத்தளம் | muhammadyunus.org | ||||||||||||||||
| |||||||||||||||||
யூனுசு இசுக்காட்லாந்து, கிளாசுகோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2012 முதல் 2018 வரை பணியாற்றினார்.[6][7] முன்னதாக, இவர் வங்காலதேசத்தில் உள்ள சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார்.[8] தனது நிதி தொடர்பான பல புத்தகங்களை யூனுசு வெளியிட்டார். குறுங்கடனை ஆதரிக்கும் கிராமின் அமெரிக்கா, கிராமின் அறக்கட்டளை ஆகியவற்றின் நிறுவனக் குழு உறுப்பினர் ஆவார்.[9] யூனுசு 1998 முதல் 2021 வரை ஐக்கிய நாடுகள் அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றினார்.[10]
2024 இல் வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மாணவர் வன்முறைப் போராட்டங்களை அடுத்து, 2024 ஆகத்து 6 அன்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பிரதமர் சேக் அசீனா தனது பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக யூனுசு பணியாற்ற வங்காளதேசக் குடியரசுத் தலைவர் முகமது சகாபுதீன் பரிந்துரைத்தார்.[11] அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்ட தொழிலாளர் குறியீடு மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து அடுத்த நாள் நீதிமன்றம் முகம்மது யூனுசை விடுவித்ததை அடுத்து, அவர் நாட்டிற்குத் திரும்புவதற்கும் தலைமை ஆலோசகர் பணியை ஏற்பதற்கும் வழிவகுத்தது.[12] 2024 ஆகத்து 8 இல், வங்காளதேச மக்கள் குடியரசின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பதவி ஏற்றார்.[13]
யூனுஸ் 1940 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகரில் உள்ள சிற்றூர் ஒன்றில் பிறந்தார். தந்தை ஒரு நகை வணிகர் ஆவார். 1947 ஆம் ஆண்டில் சிட்டக்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தன் ஊரிலேயே வாழ்க்கையினைச் செலவிட்டார்.
வறிய பங்களாதேசத்தவர்களுக்கு கடன் வழங்கும் எண்ணத்துடன் 1976 ம் ஆண்டில் யூனுஸ் கிராமின் வங்கியைத் தொடங்கினார். மக்கள் பணத்தினை மீளச்செலுத்துவதை உறுதிப்படுத்த "ஒற்றுமை குழுக்கள்" எனும் முறைமையினை வங்கி கையாளுகின்றது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட குழுவானது சேர்ந்து வங்கிக்கடனைப் பெற விண்ணப்பிப்பதுடன், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கான கடனுக்கு கூட்டு உத்தரவாதத்தினை அளித்தல், பொருளியல் ரீதியான முன்னேற ஆதரவு வழங்குதல் போன்றவற்றையும் மேற்கொள்ளவேண்டும். சிறுகடன் வழங்குதல் தவிர கிராமின் வங்கி பல மேலதிக தேவைக்காகவும் கடனை வழங்குகின்றது. கல்விசார்கடன்கள், வீடமைப்புக்கடன், மீன்பிடி, விவசாய, கைத்தறி போன்ற கைத்தொழில்களுக்கான கடன்கள் போன்றவை சில எடுத்துக்காட்டாகும். குறுங்கடன் பெறுபவர்களில் 96% பெண்கள் ஆவர்.
வறிய மக்களின் சமூக,பொருளியல் முன்னேற்றத்திற்காக முன்னிற்று பாடுபட்டமைக்காக முகமது யூனுசிற்கும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து 2006 ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இவ்வறிவிப்பின் பின் யூனுஸ் தனக்கான பரிசின் பங்கான $1.4 மில்லியன் டொலரினைக் கொண்டு வறிய மக்களுக்கு குறைந்த விலையினில் நிறைபோசாக்கு உணவினை வழங்கும் திட்டமொன்றிக்கு செலவிடப்போவதாகவும் எஞ்சிய தொகையினை கண் மருத்துவமனை அமைப்பதற்கு செலவிடப்போவதாகவும் தன் கருத்தினை வெளியிட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.