அமெரிக்க வணிகர் From Wikipedia, the free encyclopedia
வில்லார்டு மிட் ராம்னி (Willard Mitt Romney,பிறப்பு: மார்ச் 12, 1947) ஓர் அமெரிக்க வணிகரும் 2012 தேர்தலில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப் பட்டுத் தோல்வியடைந்தவரும் ஆவார்.[1] 2003 முதல் 2007 வரை மாசசூசெட்சு மாநிலத்தின் எழுபதாவது ஆளுநராக பணியாற்றி உள்ளார்.
மிட் ராம்னி | |
---|---|
70வது மாசசூசெட்சு ஆளுநர் | |
பதவியில் 2 சனவரி 2003 – 4 சனவரி 2007 | |
Lieutenant | கெர்ரி ஹீலி |
முன்னையவர் | ஜேன் எம். சுவிஃப்டு(பொறுப்பு) |
பின்னவர் | தேவல் பாட்றிக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வில்லர்டு மிட் ராம்னி மார்ச்சு 12, 1947 டெட்ராய்ட், மிச்சிகன், ஐ.அ. |
அரசியல் கட்சி | குடியரசு |
துணைவர் | ஆன் ராம்னி]] (தி. 1969) |
பிள்ளைகள் | டக்கார்டு (பி. 1970) மாத்தியூ (பி. 1971) ஜோஷூவா (பி. 1975) பெஞ்சமீன் (பி. 1978) கிரெய்க் (பி. 1981) |
வாழிடம்(s) | பெல்மாண்ட், மாசசூசெட்சு வுல்ஃப் பரோ, நியூ ஹாம்சையர் சான் டியாகோ, கலிஃபோர்னியா |
முன்னாள் கல்லூரி | பிரிகாம் யங் பல்கலைக்கழகம் (இளங்கலை) ஹார்வர்டு பல்கலைக்கழகம் (எம்பிஏ, சட்டம்) |
Positions | Co-founder, Bain Capital (1984–1999) CEO, Bain & Company (1991–1992) CEO, 2002 Winter Olympics Organizing Committee (1999–2002) |
கையெழுத்து | |
இணையத்தளம் | MittRomney.com |
ஜார்ஜ் ராம்னி மற்றும் லெனோர் ராம்னி தம்பதியினருக்கு மகனாக மார்ச் 12, 1947 ஆம் ஆண்டு மிச்சிகனில் பிறந்தார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தபோதே 1966 ஆம் ஆண்டு தனது கல்வியை இடைமுறிவு செய்து மோர்மன் மிஷனரியின் இறைப்பணியாளராக தொண்டாற்ற பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். 1969 ஆம் ஆண்டு ஆன் டேவிஸ் ஏன்டா பெண்ணை மணந்தார். இந்த தம்பிதிகளுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. 1971 ஆம் ஆண்டு பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பயின்று பேக்கர் ஸ்காலர் (Baker scholar) எனப்படும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றர். பெயின் & கம்பெனி என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து பின் 1984 ஆம் ஆண்டு பெயின் காபிடல் என்ற நிதி சார்ந்த நிறுவனத்தை தொடங்கினார். பின்னாளில் இது தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிறுவனமாக வளர்ந்தது. இது தவிர இவர் சர்ச் ஆப் ஜீஸஸ் கிரிஸ்ட் ஆப் லேட்டர்-டே செயின்ட் (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் மத அமைப்பில் வார்டு பிஷப் (Ward Bishop) தொடங்கி ஸ்டேக் பிரசிடென்ட் (Stake President) வரை சில பதவிகள் வகித்தார்.
2002 ஆம் ஆண்டு மாசச்சூசெட்ஸ் மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு தேர்தளின் பொது குடியரசுக் கட்சி வேட்பாளராவதற்கு சக கட்சிக்காரரான ஜான் மெக்கெய்ன் என்பவருடன் போட்டியிட்டார். ஆனால் இறுதியில் ஜான் மெக்கைன் வேட்பளராகும் தகுதியைப் பெற்றார். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு ரான் பால் மற்றும் பிரட் கார்கர் போன்றோருடன் போட்டியிட்டு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் தகுதியைப் பெற்றுள்ளார். நவம்பர் 6, 2012ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவிடம் தோல்வியடைந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.