மிட்னாபூர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மிட்னாபூர் அல்லது மேதினிபூர் (Midnapore or Medinipur) (Pron: med̪iːniːpur) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கக்சுசபதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மிட்னாபூர்
மேதினிபூர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): The city of tribal tradition | |
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிட்னாப்பூரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22.424°N 87.319°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | மேற்கு மிட்னாப்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மிட்னாப்பூர் நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,69,264 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 721 101 and 721 102 |
தொலைபேசி குறியீடு | 91-3222 |
வாகனப் பதிவு | WB-33-xxxx, WB-34-xxxx |
மக்களவைத் தொகுதி | மிட்னாப்பூர் |
சட்டமன்றத் தொகுதி | மிட்னாப்பூர் |
இணையதளம் | paschimmedinipur |
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மிட்னாபூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 169,264 ஆகும். அதில் ஆண்கள் 84,977 மற்றும் 84,287 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15,172 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.99% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 82.61%, முஸ்லீம்கள் 16.09%, கிறித்தவர்கள் 0.92% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[1]
கரக்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள மிட்னாபூர் தொடருந்து நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது. மிட்னாபூர் தொடருந்து நிலையத்திலிருந்து ஹவுரா, கொல்கத்தா, மால்டா, பொகாரோ ஸ்டீல் சிட்டி, கரக்பூர், ராஞ்சி, போர்பந்தர், புருலியா, எர்ணாகுளம், ஆசன்சோல், ஜார்கிராம், தில்லி, புரி, பாட்னா, மும்பை, விழுப்புரம், கன்னியாகுமரி நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.