1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு வரலாற்றுப் பதிவுகள் From Wikipedia, the free encyclopedia
மிங் சி லு, (ஆங்கிலம்: Ming Shilu; மலாய் மொழி: Ming Shilu; சீனம்: 明實錄) என்பது சீனா, மிங் வம்சத்தின், 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.[1] ஆங்கிலத்தில் வெரிடபிள் ரிக்கார்ட்ஸ் (Veritable Records) என்றும் அழைக்கப் படுகிறது.
சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ’மிங் சி லு’ பதிவுகளில் உள்ளன.[2]
1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சாவழியினர் (Ming dynasty) சீனாவின் ஆளும் வம்சாவழியினராக இருந்தனர். மகா மிங் வம்சம் (Great Ming) என்று அழைக்கப் படுவதும் உண்டு. மிங் வம்சாவழியினர் சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள்.
மிங் அரசமரபு என்பது மங்கோலியர்களின் தலைமையிலான யுவான் வம்சத்தின் சரிவைத் தொடர்ந்து 276 ஆண்டுகளாக (1368-1644) சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும்.
மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத் தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது [3].
மிங் அரசமரபு, சீனாவின் மிகப் பெரிய ஏகாதிபத்திய இனமான ஆன் (Han) இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். லீ சிசெங் (Li Zicheng) என்பவரின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சி அடைந்தது.
பின்னர் மஞ்சூரியாவின் சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644-இல் வீழ்ச்சி அடைந்தபோதும், மிங் அரசமரபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662-ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் (Southern Ming) எனப் படுகின்றன.[4]
இந்தப் பேரரசர்களின் காலத்தின் பதிவுகளைத் தான் மிங் வம்சாவழி வரலாற்றுச் சுவடுகள் என்றும் மிங் சி லு (Ming Shi-lu) என்றும் அழைக்கிறார்கள்.
மிங் சி லு சீனப் பதிவுகள் பரமேசுவராவை பாய்-லி-மி-சு-லா (ஆங்கிலம்: Bai-li-mi-su-la; சீனம்: 拜里迷蘇剌) என்று அழைக்கின்றன. அவருடைய மகன் மெகாட் இசுகந்தர் ஷாவை (ஆங்கிலம்: Mu-gan Sa-yu-ti-er-sha; சீனம்: 母幹撒于的兒沙) என்றும் அழைக்கின்றன.[1]
மிங் வம்சாவழியினரில் மிக முக்கியமானவர் யோங் லே (Yongle Emperor). பட்டியலில் மூன்றாவதாக வருபவர். இவருடைய அசல் பெயர் ஜு டி (Zhu Di). இவர் 1402 முதல் 1424 வரை சீனாவை ஆட்சி செய்தார்.
யோங்லே (Yongle) மாமன்னர் காலத்தில் தான் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்று இருக்கிறார். ஒரு முறை அல்ல. இரு முறைகள். முதல் முறை: 03.10.1405. இரண்டாவது முறை: 04.08.1411.[5]
பரமேசுவராவின் சீனப் பயணத்தின் போது செங் கே (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் அவருக்குத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.
மிங் சி லு வரலாற்றுப் பதிவுகள் அனைத்தும் வனப்பெழுத்து (calligraphy) பிரதிகள். 40,000 பக்கங்கள் கொண்டவை. மிகப் பெரிய ஒரு வரலாற்றுக் காப்பகம்.[6]
1368 - 1644-ஆம் ஆண்டுகளில் சீனாவுடன் தொடர்புகள் வைத்து இருந்த தென்கிழக்கு ஆசியா, ஆசியா நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்தப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எல்லாப் பதிவுகளும் சீன மொழியில் (Classical Chinese) இருக்கின்றன. சீன மொழி தெரியாதவர்கள் தகவல்களை மீட்டு எடுப்பதில் சிரமப் பட்டார்கள். இருப்பினும் ஜீப் வேட் (Geoff Wade) எனும் ஓர் ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர் 1993-ஆம் ஆண்டு, அந்தப் பதிவுகளை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
தென்கிழக்கு ஆசியா நாடுகளின் வரலாற்றுப் பதிவுகளில் 3000 பதிவுகளைச் சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார். 1993-ஆம் ஆண்டு தொடங்கிய மொழிபெயர்ப்பு 2013-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் பிடித்தன. ஏறக்குறைய 40 கல்வியாளர்கள் அவருக்கு உதவியாக இருந்து உள்ளார்கள். அரும் பெரும் முயற்சி.
அந்த வகையில் சீனா பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் இருந்த சீனக் கையெழுத்துப் பதிவுகளில் 3000-க்கும் மேற்பட்ட பதிவுகள் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டன. மொழி பெயர்க்கப்பட்ட அந்தப் பதிவுகள், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திடம் (National University of Singapore) ஒப்படைக்கப் பட்டன.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்; ஆசியா ஆய்வு நிறுவனத்துடன் (Asia Research Institute) இணைந்து ஒரு தரவு தளத்தை (Database) உருவாக்கின. இன்று வரையிலும் பராமரித்து வருகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.