மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் (Maalan Narayanan, பிறப்பு: 16 செப்டம்பர் 1950) நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்'[1] சாகித்திய அகாதமி விருது பெற்றவரும்[2] ஆவார். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[3] முன்னதாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் மாலன்Maalan, பிறப்பு ...
மாலன்
Maalan
பிறப்புவி. நாராயணன்
செப்டம்பர் 16, 1950 (1950-09-16) (அகவை 74)
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தமிழன், நசிகேதன்
கல்விஇதழியல்துறையில் பட்டம்
பணிஇதழாசிரியர்,
புதிய தலைமுறை
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்வி. எஸ். வி. மணி, லலிதா
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி
பிள்ளைகள்சுகன்
உறவினர்கள்4 சகோதரர்கள், 2 சகோதரிகள்
விருதுகள்தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது
வலைத்தளம்
www.maalan.co.in
மூடு

வாழ்க்கைச் சுருக்கம்

1950ம் ஆண்டு தமிழ்நாடு, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த மாலன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன இவர், 1970 - 1985 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும்[4] கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார். மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர்.

இதழியல் பணிகள்

சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

1981ல் 'திசைகள்' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் இந்தியா டுடே (தமிழ்), தின மணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஒருங்குறி எழுத்துருவில் அமைந்த முதல் தமிழ் இணைய இதழான 'திசைகள்' இதழின் ஆசிரியர். கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார்.[சான்று தேவை]

இந்தியப் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

எழுத்துப் பணி

இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் அரசு நிறுவனமான சிங்கப்பூர் தேசியக் கலைமன்றம் ஆதரவில் நடைபெறும் எழுத்தாளர் வார நிகழ்ச்சிக்கும், தேசிய நூலக வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டவர்.[5]

சாகித்ய அகாதெமியின் பொதுக் குழுவிலும்[6], லலித் கலா அகாதெமி, ஆகியவற்றின் பொதுக் குழு உறுப்பினர். ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் உறுப்பினர். சாகிததிய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளார்.[7]

இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக இவர் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த ஒரு நூலில் (Voices of Emergency) இடம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள் சீனம், மலாய், பிரன்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே (மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா (இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கல்கத்தாவில் உள்ள எழுத்தாளர்கள் பயிலரங்கு (Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது.

படைப்புகள்

நெடுங்கதை

  1. நந்தலாலா
  2. வழிதவறிய வண்ணத்துப்பூச்சிகள்; 1980 சூலை; (மோனா இதழ்)
  3. ஜனகனமண
  4. எம்.எஸ்.

கட்டுரைகள்

  1. நேற்றின் நிழல்
  2. என் ஜன்னலுக்கு வெளியே (இரு பாகங்கள்); புதியதலைமுறை வெளியீடு
  3. காலத்தின் குரல்; புதியதலைமுறை வெளியீடு
  4. கடைசி பக்கம்
  5. சொல்லாத சொல்

இலக்கிய ஆய்வு

  1. புரட்சிக்காரர்கள் நடுவே
  2. கயல் பருகிய கடல்

கவிதை

  1. மனம் எனும் வனம்

புனைவற்ற புனைவு

  1. உயிரே உயிரே

பரிசுகளும் விருதுகளும்

  • இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017)[8]
  • தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019)[9]
  • கண்ணதாசன் விருது[10]
  • கம்பன் கழக விருது[11] ஆகியவற்றைப் பெற்றவர்.
  • சிங்கப்பூர் தேசிய நூலகம் அளிக்கும் லீ காங்சியான் ஆய்வுக் கொடையைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழரும் இவரே.
  • 2021ஆம் ஆண்டின் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது (ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் நூல் சைரசு மிசுட்டரி எழுதிய "குரோனிக்கல் ஆஃப் கார்பசு பேரியர்" என்னும் ஆங்கிலப் புதினத்தை மொழிபெயர்த்து எழுதப்பட்டது.)[12]

இணையப் பங்களிப்புகள்

  • திசைகள் - திசைகள் முதலில் 1981 சனவரியில் அச்சில் வார இதழாக வந்தது. 2003ல் இணையத்தில் மின் இதழாக வந்தது.[13]
  • அக்ஷர - 24 மொழிகளில் வெளியாகும் இணைய இதழ்.[14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.